உசிலம்பட்டியில் இயற்கை விவசாயம் செய்யும் சென்னை மணப்பெண் ஒப்பனைக் கலைஞர்  

மதுரை: சென்னையில் மணப்பெண் ஒப்பனைக்கலைஞரான சிந்துஜா, இயற்கை விவசாயம் மீதான ஈடுபாட்டால் சொந்த ஊரான உசிலம்பட்டியில் இயற்கைமுறையில் விவசாயம் செய்து விளைபொருட்களை விற்பனை செய்து வருகிறார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த சுப்புராஜ் – சுகுணா ராஜம் ஆகியோரின் மகள் சிந்துஜா (39). பி.எஸ்.சி., பி.எட்., படித்துள்ளார், மணப்பெண் ஒப்பனைக் கலைஞராகவும் உள்ளார். இவர் சென்னை சாலிக்கிராமத்தில் மணப்பெண் ஒப்பனை அலங்கார மையம் நடத்தி வருகிறார். இவரது கணவர் பிரகாஷ் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்துக்கொண்டே சொந்தஊரான … Read more

'எப்போது மக்கள் நிம்மதியாக வாழ முடியும்?' – மாநகராட்சி அதிகாரிகளிடம் கேள்விகளை அடுக்கிய பொது கணக்குக் குழு

சென்னை: ஆக்கிரமிப்பு அகற்றம், விதிமீறல் கட்டிடம் குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் கேள்விகளை அடுக்கிய சட்டமன்ற பொது கணக்குக் குழு (Public Accounts Committee), அம்மா உணவகம் குறித்து 1 மாதத்தில் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையின் பொது கணக்குக் குழுவினர் இன்று காலை பெருங்குடி குப்பை கிடங்கு, பெருங்குடி சமுதாய நலக் கூடம், சென்னை நதிகள் சீரமைப்ப அறக்கட்டளை தொடர்பான பணிகள் ஆகிவற்றை நேரில் ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து ரிப்பன் மாளிகை வளாகத்தில் … Read more

களிமேடு சம்பவம் எதிரொலி; தேர்பவனிக்கு மின்வாரிய அனுமதி அவசியம்: உயர் நீதிமன்றம் உத்தரவு 

மதுரை: திருச்சி திருவெறும்பூர் நத்தமாடிப்பட்டியைச் சேர்ந்த சவரிநாதன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ” திருவெறும்பூர் நத்தமாடிப்பட்டி கிராமத்தில் உள்ள புனித சவேரியார் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் திருவிழா நடைபெறும். விழாவில் முக்கியமான தேர்பவனி. 150-வது ஆண்டு திருவிழாவை ஒட்டி புதிய ஆலய திறப்பு மற்றும் தேர் திருவிழா நடத்த அனுமதி கோரி திருவெறும்பூர் காவல் ஆய்வாளரிடம் மனு அளித்தோம். மே 2-ல் ஆலத் … Read more

நம்பர் பிளேட்களில் 'G'அல்லது 'அ' என்ற எழுத்துக்களைப் பயன்படுத்தினால் நடவடிக்கை: போக்குவரத்து ஆணையர்  

சென்னை: தமிழக அரசு வாகனங்களை தவிர மற்ற வாகனங்களின் நம்பர் பிளேட்களில் ‘G’ அல்லது ‘அ’ என்ற எழுத்துக்களை பயன்படுத்துவோர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரசு வாகனம் அல்லாத வாகனங்களில் தற்பொழுது தமிழகமெங்கும் பதிவெண் பலகையில் (Number Plate) ‘G’ அல்லது ‘அ’ என்ற எழத்துக்கள் எழுதப்பட்டோ அல்லது ஸ்டிக்கர் ஒட்டப்பட்டோ மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தப்படுவதாக … Read more

ரயில்களில் குழந்தைக்கு தனியாக பெர்த்: பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக பொது மக்கள் கருத்து

புதுடெல்லி: ரயில்களில் தாயுடன் குழந்தைகள் படுத்து தூங்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள குழந்தைகளுக்கு தனியாக பெர்த் வசதி நடைமுறை சாத்தியமில்லாதது, பாதுகாப்பற்றது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அன்னையர் தினத்தை ஒட்டி ரயில்களில் தாயுடன் குழந்தைகள் படுத்து உறங்கும் வகையில் புதிய பெர்த் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய வசதி வடக்கு ரயில்வேயில் லக்னோ மெயில் ரயிலில் சோதனை அடிப்படையில் குழந்தைகளுக்கான பெர்த் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வழக்கமான, படுக்கை வசதிக்கு பக்கத்திலேயே குழந்தைகென்று பிரத்யேகமாக சிறிய … Read more

பேரறிவாளன் வழக்கு; உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி- தீர்ப்பு ஒத்திவைப்பு: வாதங்கள் முழு விவரம்

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வராவ் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் ‘‘கடந்த முறை இந்த வழக்கு விசாரனைக்கு வந்தபோது, பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசுக்கு இரண்டு வாய்ப்புகள் வழங்கினோம். அதில் ஏதேனும் முடிவு செய்து … Read more

இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் அல் ஜசீரா பெண் பத்திரிகையாளர் மரணம்

இஸ்ரேல் படைகள் தாக்குதலில் அல் ஜசீரா பெண் பத்திரிகையாளர் ஷிரின் அபு அக்லா கொல்லப்பட்டது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷிரின் அபு அக்லா பாலஸ்தீன பத்திரிகையாளர். இவர் பல ஆண்டுகளாக அல் ஜசீரா பத்திரிகையில் இஸ்ரேல் – பாலஸ்தீனம் குறித்த செய்திகளை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் இஸ்ரேல் ராணுவத்தால் ஷிரின் அபு அக்லா கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொல்லப்பட்டபோது ஷிரின் பத்திரிக்கையாளர்களுக்கான தற்காப்பு ஆடையையே அணிந்திருந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் … Read more

மதுரை மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் கவுன்சிலர்கள் மோதல்: செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய மேயர் ஆதரவாளர்கள்

மதுரை: விவாதமே இல்லாமல் முடிந்த மதுரை மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் ‘இருக்கை’களுக்காக திமுக-அதிமுக கவுன்சிலர்கள் இடையே மோதல் வெடித்தது, இதைத் தொடர்ந்து மேயர் கணவரின் ஆதரவாளர்கள் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர். மதுரை மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் நேற்று காலை 11.30 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த மாநகராட்சி கூட்டத்திலேயே அதிமுக கவுன்சிலர்களுக்கு ஒரே பகுதியில் வரிகையாக இருக்கைகள் ஒதுக்காமல் ஆங்காங்கே ஒதுக்கப்பட்டிருந்தது. அதிருப்தியடைந்த அதிமுக கவுன்சிலர்கள் அப்போதே எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு அடுத்தக்கூட்டத்தில் இருக்கைகளை சரியாக … Read more

டொனால்ட் ட்ரம்ப்பின் ட்விட்டர் தடையை திரும்பப் பெறுவேன்: எலான் மஸ்க்

டெக்சாஸ்: முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கிற்கு விதிக்கப்பட்ட தடையை திரும்பப் பெறுவேன் என தெரிவித்துள்ளார் எலான் மஸ்க். உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆன எலான் மஸ்க், அண்மையில் ட்விட்டர் தளத்தை வாங்குவது உறுதியானது. தற்போது அதற்கான பணிகளை அவர் மேற்கொண்டு வருகிறார். ட்விட்டர் தளத்தை மஸ்க் வாங்குகிறார் என்ற செய்தி வெளியானது முதலே ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கிற்கு விதிக்கப்பட்ட தடை குறித்து பேசப்பட்டு வந்தது. அதுகுறித்து ட்ரம்ப் கூட தனது கருத்தை … Read more

திருமூர்த்தி முதல் குருமலை வரை வன உரிமைச்சட்டப்படி சாலை அமைக்கக் கோரி மனு

திருப்பூர்: தளி பேரூராட்சிக்கு உட்பட்ட 16-வது வார்டு குருமலை பகுதியில் வன உரிமைச் சட்டப்படி சாலை அமைக்கக்கோரி தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. தளி பேரூராட்சி துணைத் தலைவர் கோ.செல்வன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் சந்திர சேகரன் ஆகியோர், அமைச்சரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: “உடுமலைப்பேட்டை வட்டம் மலைப் பகுதியில் தளி பேரூராட்சிக்கு உட்பட்ட 16வது வார்டு குருமலைக்கு திருமூர்த்தி மலை தார்ச்சாலை … Read more