திருமூர்த்தி முதல் குருமலை வரை வன உரிமைச்சட்டப்படி சாலை அமைக்கக் கோரி மனு

திருப்பூர்: தளி பேரூராட்சிக்கு உட்பட்ட 16-வது வார்டு குருமலை பகுதியில் வன உரிமைச் சட்டப்படி சாலை அமைக்கக்கோரி தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. தளி பேரூராட்சி துணைத் தலைவர் கோ.செல்வன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் சந்திர சேகரன் ஆகியோர், அமைச்சரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: “உடுமலைப்பேட்டை வட்டம் மலைப் பகுதியில் தளி பேரூராட்சிக்கு உட்பட்ட 16வது வார்டு குருமலைக்கு திருமூர்த்தி மலை தார்ச்சாலை … Read more

ஜிப்மரில் இந்தி திணிப்பை கண்டித்து பாமக, தமிழ் அமைப்புகள் போராட்டம் 

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கட்டாய இந்தி திணிப்பை கண்டித்து பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (மே. 11) நடைபெற்றது. பாமக மாநில அமைப்பாளர் கணபதி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பாமகவினர் கோரிமேடு சாலையில் பேரணியாக வந்து ஜிப்மர் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஜிப்மரில் இந்தியை திணிக்காதே, தமிழை அகற்றாதே, இயக்குநரின் உத்தரவை திரும்ப பெறு என்று கோஷங்களை எழுப்பினர். பின்னர், பாமக மாநில அமைப்பாளர் கணபதி செய்தியாளர்களிடம் கூறுகையில், ”ஜிப்மரில் இந்தியை கட்டாயம் … Read more

அமேசானில் ஏப்ரலில் இரு மடங்கு மரங்கள் வெட்டப்பட்டன: தொடரும் காடு அழிப்பு

அமேசானில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் சுமார் 1,40,000 கால்பந்து மைதானங்களுக்கு சமமான காட்டு பகுதிகள் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏப்ரல் மாதத்தில் மழைக் காலம் என்பதால் அமேசானில் அம்மாதங்களில் மரங்களை வெட்டுவது குறைவாகத்தான் இருக்கும். எனினும் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் அமேசானில் இரு மடங்கு மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. பிரேசிலின் அதிபராக உள்ள வலதுசாரி ஆதரவாளரான ஜெய்ர் போல்சனோரா ஆட்சிக்கு வந்தது முதலே பிரேசிலில் காடழிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அவர் பதவி எற்றதுமுதல் அங்கு … Read more

"ரிசர்வ் வங்கியின் அழுத்தம் காரணமாக யுபிஐ பேமெண்டை நிறுத்தியுள்ளோம்" காயின்பேஸ் சிஇஓ

புதுடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கியின் முறையற்ற வகையிலான அழுத்தம் காரணமாக யுபிஐ பேமெண்ட் முறையை தங்கள் தளத்தில் நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார் காயின்பேஸ் தலைமை செயல் அதிகாரி பிரையன் ஆர்ம்ஸ்ட்ராங். கிரிப்டோ கரன்சிகளை எக்ஸ்சேஞ்ச் செய்யும் தளமாக உள்ளது காயின்பேஸ். அமெரிக்காவில் கடந்த 2012-இல் தொடங்கப்பட்டது. இப்போது உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த நிறுவனம் தனது சேவையை வழங்கி வருகிறது. கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி பெங்களுருவில் நடைபெற்ற ஒரு நிகழ்வின் மூலம் இந்தியாவிலும் தனது … Read more

மதுரை ஆதினத்துடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திடீர் சந்திப்பு: 20 நிமிடம் ஆலோசனை

மதுரை: தருமை ஆதினம் பட்டினப் பிரவேசத்துக்கான தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மதுரை ஆதினத்தை திடீரென நேரில் சந்தித்து 20 நிமிடம் ஆலோசனை நடத்தியுள்ளார். மயிலாடுதுறையில் அமைந்துள்ளது தருமபுரம் ஆதினம். இங்கு ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் பட்டினப்பிரவேசம் நடைபெறும். பட்டினப் பிரவேசத்தில் சன்னிதானத்தை பல்லக்கில் பக்தர்கள் சுமந்து செல்வர். இந்த வழக்கம் 500 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருந்து வருகிறது. இந்தாண்டு பட்டினப்பிரவேசம் மே 22ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. திராவிடர் … Read more

வரலாற்றில் உள்நாட்டுப் போர் நமக்கு பெரிய பாடத்தை அளித்திருக்கிறது: ஜெயவர்தனே

வரலாற்றில் உள்நாட்டுப் போர் நமக்கு பெரிய பாடத்தை அளித்திருக்கிறது என்று இலங்கை அணியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹிலா ஜெயவர்தனே பதிவிட்டுள்ளார். இலங்கையில் பெட்ரோல், டீசலுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது. இலங்கையில் ஆட்சி நடத்தி வரும் ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலகக்கோரி கொழும்பில் நாடாளுமன்றம் செல்லும் சாலையில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் போராடி வருகின்றனர். இரண்டு தினங்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். போராட்டக்காரர்களின் … Read more

போலீஸார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; பொதுமக்கள் நிலை என்ன ஆகும்?- தினகரன் கேள்வி

சென்னை: கடலூரில் காவல்துறையினர் மீது கொள்ளையர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது, போலீஸார் மீதே இப்படி தாக்குதல் நடந்தால் பொதுமக்களின் நிலை என்ன ஆகும்? என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “கடலூர் மாவட்டம் பெரியகுப்பம் பகுதியில் காவல்துறையினர் மீது கொள்ளையர்கள் பெட்ரோல் குண்டு வீசித் தாக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சியில் குற்றங்கள் குறைந்திருப்பதாக காவல்துறை மானியக் கோரிக்கையின் … Read more

அமேசானில் ஏப்ரலில் இரு மடங்கு மரங்கள் வெட்டப்பட்டன: தொடரும் காடு அழிப்பு

அமேசானில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் சுமார் 1,40,000 கால்பந்து மைதானங்களுக்கு சமமான காட்டு பகுதிகள் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏப்ரல் மாதத்தில் மழைக் காலம் என்பதால் அமேசானில் அம்மாதங்களில் மரங்களை வெட்டுவது குறைவாகத்தான் இருக்கும். எனினும் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் அமேசானில் இரு மடங்கு மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. பிரேசிலின் அதிபராக உள்ள வலதுசாரி ஆதரவாளரான ஜெய்ர் போல்சனோரா ஆட்சிக்கு வந்தது முதலே பிரேசிலில் காடழிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அவர் பதவி எற்றதுமுதல் அங்கு … Read more

10-ம் வகுப்பு வினாத்தாள் கசிவு எதிரொலி: ஆந்திர மாநில முன்னாள் அமைச்சர் கைது

ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 27-ம் தேதி முதல் மே மாதம் 7-ம் தேதி வரை 10-ம் வகுப்பு தேர்வு நடைபெற்றது. அப்போது தினமும் வினாத்தாள்கள் கசிந்து பரபரப்பை உண்டாக்கின. இது தொடர்பாக 25 அரசு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சர் நாராயணாவுக்கு இதில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இவருக்கு சொந்தமாக ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் நூற்றுக்கணக்கான தனியார் பள்ளிகள் உள்ளன. எனவே, பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று … Read more

சட்டப்பேரவையில் அதிக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த பாமக: ராமதாஸ் பெருமிதம்

சென்னை: சட்டப்பேரவையில் அதிக கவன ஈர்ப்பு தீர்மானங்களை கொண்டு வந்தவர் ஜி.கே. மணி; என்றுமே மக்கள் நலனில் அக்கறை கொண்ட கட்சி பாமக நிறுவனர் ச.ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்த பதிவுகளில் கூறியுள்ளதாவது: ”தமிழக சட்டப்பேரவையில் அதிக வினாக்களை எழுப்பி முதல் 5 இடங்களைப் பிடித்தவர்களில் ஜி.கே.மணி (8,312 வினாக்கள், இரண்டாமிடம்), இரா. அருள் (5,036, நான்காமிடம்) ச.சிவக்குமார் (2,937, ஐந்தாமிடம்) ஆகிய மூவர் பாமகவினர். அவர்களுக்கு பாராட்டுகள், வாழ்த்துகள்! … Read more