அமேசானில் ஏப்ரலில் இரு மடங்கு மரங்கள் வெட்டப்பட்டன: தொடரும் காடு அழிப்பு

அமேசானில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் சுமார் 1,40,000 கால்பந்து மைதானங்களுக்கு சமமான காட்டு பகுதிகள் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏப்ரல் மாதத்தில் மழைக் காலம் என்பதால் அமேசானில் அம்மாதங்களில் மரங்களை வெட்டுவது குறைவாகத்தான் இருக்கும். எனினும் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் அமேசானில் இரு மடங்கு மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. பிரேசிலின் அதிபராக உள்ள வலதுசாரி ஆதரவாளரான ஜெய்ர் போல்சனோரா ஆட்சிக்கு வந்தது முதலே பிரேசிலில் காடழிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அவர் பதவி எற்றதுமுதல் அங்கு … Read more

10-ம் வகுப்பு வினாத்தாள் கசிவு எதிரொலி: ஆந்திர மாநில முன்னாள் அமைச்சர் கைது

ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 27-ம் தேதி முதல் மே மாதம் 7-ம் தேதி வரை 10-ம் வகுப்பு தேர்வு நடைபெற்றது. அப்போது தினமும் வினாத்தாள்கள் கசிந்து பரபரப்பை உண்டாக்கின. இது தொடர்பாக 25 அரசு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சர் நாராயணாவுக்கு இதில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இவருக்கு சொந்தமாக ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் நூற்றுக்கணக்கான தனியார் பள்ளிகள் உள்ளன. எனவே, பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று … Read more

சட்டப்பேரவையில் அதிக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த பாமக: ராமதாஸ் பெருமிதம்

சென்னை: சட்டப்பேரவையில் அதிக கவன ஈர்ப்பு தீர்மானங்களை கொண்டு வந்தவர் ஜி.கே. மணி; என்றுமே மக்கள் நலனில் அக்கறை கொண்ட கட்சி பாமக நிறுவனர் ச.ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்த பதிவுகளில் கூறியுள்ளதாவது: ”தமிழக சட்டப்பேரவையில் அதிக வினாக்களை எழுப்பி முதல் 5 இடங்களைப் பிடித்தவர்களில் ஜி.கே.மணி (8,312 வினாக்கள், இரண்டாமிடம்), இரா. அருள் (5,036, நான்காமிடம்) ச.சிவக்குமார் (2,937, ஐந்தாமிடம்) ஆகிய மூவர் பாமகவினர். அவர்களுக்கு பாராட்டுகள், வாழ்த்துகள்! … Read more

குதுப் மினார் முன்பு ஹனுமன் மந்திரம் ஓதிய இந்து அமைப்பினர்: 'விஷ்ணு மினார்' எனப் பெயரை மாற்ற வலியுறுத்தல்

புதுடெல்லி: டெல்லியில் இந்து அமைப்பினரால், குதுப்மினார் முன் அனுமன் மந்திரம் ஓதப்பட்டது. கில்ஜி மன்னரால் கட்டப்பட்டதும் பெயரை, ‘விஷ்ணு மினார்’ என மாற்றவும் வலியுறுத்தினர். முகலாயப் பேரரசுக்கு முன்பாக இந்தியாவை ஆண்டது கில்ஜி வம்சம். டெல்லி சுல்தான்கள் என்றும் அழைக்கப்படும் இஸ்லாமியர்களான இவர்களின் முதல் மன்னர் குத்புதீன் ஐபக். இந்த கில்ஜி வம்ச மன்னரால், கடந்த 1198ஆம் ஆண்டில் தொடங்கி டெல்லியில் கட்டி முடிக்கப்பட்டது குதுப்மினார். தற்போது டெல்லியின் மெஹரோலி பகுதியில் அமைந்துள்ள இந்த வரலாற்று சிறப்புமிக்க … Read more

கடலூர் அருகே தனியார் ஆலையில் இரும்பு திருட சென்ற கும்பல்: போலீஸார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

கடலூர்: கடலூர் அருகே புதுக்குப்பத்தில் உள்ள நாகார்ஜூனா தனியார் ஆலையில் இரும்பு திருட சென்ற கும்பல் ரோந்து போலீஸார் மீது பெட்ரோல் குண்டு வீசியது. ஆனால் யாருக்கும் எந்த காயம் இல்லாமல் அதிஷ்டவசமாக தப்பினர். இது குறித்து புதுச்சத்திரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் அருகே உள்ள ஆலப்பாக்கம் அடுத்துள்ள பெரியக்குப்பத்தில் நாகார்ஜூனா தனியார் எண்ணெய் சுத்தகரிப்பு ஆலையில் உள்ளது. இது கடந்த 15 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. இந்த நிலையில் இந்த ஆலையை சுற்றியுள்ள … Read more

இந்தியாவுக்கு வரும் ஆண்டுகளில் ஒரு லட்சம் ட்ரோன் பைலட் தேவை: மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தகவல்

புதுடெல்லி: வரும் ஆண்டுகளில் ஒரு லட்சம் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) பைலட்கள் இந்தியாவுக்குத் தேவைப்படுவர் என்று மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்தார். ட்ரோன்கள் பயன்பாட்டை அதிகரிக்க மூன்று கட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதில் முதலாவதாக அதற்குரிய எளிய கொள்கைகளை வகுத்து அதை விரைவாக செயல்படுத்துவது ஆகும். 2-வதாக ட்ரோன் பயன்பாட்டை அதிகரிக்க அதற்குரிய ஊக்குவிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும். மூன்றாவதாக அதற்கான தேவையை அதிகரிக்கச் செய்வதாகும். நிதி … Read more

இந்தியாவில் தஞ்சமடைய அடைக்கலம் கேட்டாரா ராஜபக்சே?- மத்திய அரசு விளக்கம்

கொழும்பு: மகிந்தா ராஜ பக்சே குடும்பத்துடன் இந்தியாவிடம் அடைக்கலம் கேட்டு தப்பி சென்றுவிட்டதாக வெளியான தகவலை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இலங்கையில் பெட்ரோல், டீசலுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது. இலங்கை அர அரசியலில் அங்கம் ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலகக்கோரி கொழும்பில் நாடாளுமன்றம் செல்லும் சாலையில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் போராடி வருகின்றனர். இரண்டு தினங்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். போராட்டக்காரர்களின் கூடாரங்களை … Read more

ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்ற ராஜபக்சேக்களுக்கு இந்தியா தஞ்சம் அளிக்கக் கூடாது: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்ற ராஜபக்சேக்களுக்கு இந்தியா தஞ்சம் அளிக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்த பதிவுகளில் கூறியுள்ளதாவது: ”இலங்கையில் ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்கள் புரட்சி தீவிரமடைந்துள்ளது. அடக்குமுறை மற்றும் பொருளாதார சீரழிவுக்கு எதிரான மக்களின் கொந்தளிப்பை தாங்கிக் கொள்ள முடியாத முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடு தப்ப முயல்வதாக தெரிகிறது. திரிகோணமலை கடற்படை தளத்தில் … Read more

சந்தூர் இசைக் கலைஞர் சிவக்குமார் சர்மா காலமானார்

மும்பை: நாட்டில் மிகவும் பிரபலமான பாரம்பரிய இசைக் கலைஞர்களில் ஒருவர் பண்டிட் சிவக்குமார் சர்மா. பத்ம விபூஷண் விருது பெற்ற இவர், 1938-ல் ஜம்முவில் பிறந்தவர் ஆவார். ஜம்மு காஷ்மீரின் நாட்டுப்புற இசைக்கருவியான சந்தூரை உலக அளவில் பிரபலம் அடையச் செய்தவர், சந்தூரில் இந்தியப் பாரம்பரிய இசையை வாசித்த முதல் கலைஞர் என்ற பெருமைகளை பெற்றவர் ஆவார். புல்லாங்குழல் இசை மேதை பண்டிட் ஹரி பிரசாத் சவுராசியாவுடன் இணைந்து ஷிவ் – ஹரி என்ற பெயரில் பல … Read more

பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரியின் கீழ் கொண்டு வர வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வந்து அனைத்துத் தரப்பு மக்களின் நலனைக் காக்க வேண்டும் என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கரோனா காலத்திலும், அண்மையிலும் கடுமையான வரி உயர்வுகள் காரணமாக முன்பு இல்லாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளன. அனைத்துத் தரப்பு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாயும், … Read more