இந்தியாவுக்கு வரும் ஆண்டுகளில் ஒரு லட்சம் ட்ரோன் பைலட் தேவை: மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தகவல்

புதுடெல்லி: வரும் ஆண்டுகளில் ஒரு லட்சம் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) பைலட்கள் இந்தியாவுக்குத் தேவைப்படுவர் என்று மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்தார். ட்ரோன்கள் பயன்பாட்டை அதிகரிக்க மூன்று கட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதில் முதலாவதாக அதற்குரிய எளிய கொள்கைகளை வகுத்து அதை விரைவாக செயல்படுத்துவது ஆகும். 2-வதாக ட்ரோன் பயன்பாட்டை அதிகரிக்க அதற்குரிய ஊக்குவிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும். மூன்றாவதாக அதற்கான தேவையை அதிகரிக்கச் செய்வதாகும். நிதி … Read more

இந்தியாவில் தஞ்சமடைய அடைக்கலம் கேட்டாரா ராஜபக்சே?- மத்திய அரசு விளக்கம்

கொழும்பு: மகிந்தா ராஜ பக்சே குடும்பத்துடன் இந்தியாவிடம் அடைக்கலம் கேட்டு தப்பி சென்றுவிட்டதாக வெளியான தகவலை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இலங்கையில் பெட்ரோல், டீசலுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது. இலங்கை அர அரசியலில் அங்கம் ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலகக்கோரி கொழும்பில் நாடாளுமன்றம் செல்லும் சாலையில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் போராடி வருகின்றனர். இரண்டு தினங்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். போராட்டக்காரர்களின் கூடாரங்களை … Read more

ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்ற ராஜபக்சேக்களுக்கு இந்தியா தஞ்சம் அளிக்கக் கூடாது: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்ற ராஜபக்சேக்களுக்கு இந்தியா தஞ்சம் அளிக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்த பதிவுகளில் கூறியுள்ளதாவது: ”இலங்கையில் ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்கள் புரட்சி தீவிரமடைந்துள்ளது. அடக்குமுறை மற்றும் பொருளாதார சீரழிவுக்கு எதிரான மக்களின் கொந்தளிப்பை தாங்கிக் கொள்ள முடியாத முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடு தப்ப முயல்வதாக தெரிகிறது. திரிகோணமலை கடற்படை தளத்தில் … Read more

சந்தூர் இசைக் கலைஞர் சிவக்குமார் சர்மா காலமானார்

மும்பை: நாட்டில் மிகவும் பிரபலமான பாரம்பரிய இசைக் கலைஞர்களில் ஒருவர் பண்டிட் சிவக்குமார் சர்மா. பத்ம விபூஷண் விருது பெற்ற இவர், 1938-ல் ஜம்முவில் பிறந்தவர் ஆவார். ஜம்மு காஷ்மீரின் நாட்டுப்புற இசைக்கருவியான சந்தூரை உலக அளவில் பிரபலம் அடையச் செய்தவர், சந்தூரில் இந்தியப் பாரம்பரிய இசையை வாசித்த முதல் கலைஞர் என்ற பெருமைகளை பெற்றவர் ஆவார். புல்லாங்குழல் இசை மேதை பண்டிட் ஹரி பிரசாத் சவுராசியாவுடன் இணைந்து ஷிவ் – ஹரி என்ற பெயரில் பல … Read more

பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரியின் கீழ் கொண்டு வர வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வந்து அனைத்துத் தரப்பு மக்களின் நலனைக் காக்க வேண்டும் என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கரோனா காலத்திலும், அண்மையிலும் கடுமையான வரி உயர்வுகள் காரணமாக முன்பு இல்லாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளன. அனைத்துத் தரப்பு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாயும், … Read more

கர்நாடகாவில் புதிதாக திறக்கப்பட்ட மிதவை பாலம் இரண்டே நாளில் சேதம்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள மல்பே கடற்கரையில் 100 மீட்டர் நீளத்துக்கு ரூ.80 லட்சம் செலவில் மிதவை பாலம் அமைக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் கடலில் 100 மீட்டர் தூரத்துக்கு நடந்து சென்று அழகை ரசிக்க ஏதுவாக உருவாக்கப்பட்ட இந்தப் பாலம் கடந்த 6-ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 8-ம் தேதி சுற்றுலாப் பயணிகள் சென்றபோது மிதவை பாலம் கடுமையாக சேதமடைந்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் சிலர் கடலில் விழுந்தனர். அவர்களை அங்கிருந்த … Read more

ராஜ்யசபா எம்பி பதவி ஒதுக்க திமுகவிடம் கேட்போம்: கே.எஸ்.அழகிரி தகவல்

ஈரோடு: தமிழகத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா உறுப்பினர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என திமுகவிடம் கேட்போம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். மத்திய அரசைக் கண்டித்து ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் தலைமையில், கொடுமுடியில் இருந்து 250 கிலோ மீட்டர் தூரத்துக்கு, 10 நாள் நடைபயணம் நேற்று தொடங்கியது. நடைபயணத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாநிலத்துக்கான நிதியைக் … Read more

அசாமில் கடந்த 8 ஆண்டுகளில் 23 மாவட்டங்களில் ஆயுதப்படை சட்டம் வாபஸ் – விரைவில் மாநிலம் முழுவதும் ரத்தாகும் என அமித் ஷா நம்பிக்கை

புதுடெல்லி: கடந்த 8 ஆண்டுகளில் அசாமில் 23 மாவட்டங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. விரைவில் மாநிலம் முழுவதும் இந்த சட்டம் அகற்றப்படும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கூறினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2 நாள் பயணமாக அசாம் சென்றுள்ளார். பயணத்தின் 2-ம் நாளான நேற்று குவாஹாட்டியில் நடைபெற்ற விழாவில், அசாம் காவல் துறைக்கு குடியரசுத் தலைவரின் சிறப்புக் கொடி விருதை வழங்கினார். கவுரவமிக்க இந்த விருது, கடந்த … Read more

‘‘நல்ல உடல்நலத்துடன் திரும்பும் வரை தனிமை’’- பில்கேட்ஸுக்கு கரோனா தொற்று

நியூயார்க்: பில்கேட்ஸுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகளுடன் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனரும், உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான பில் கேட்ஸ் உலகம் முழுவதும் கரோனா தொற்றுநோய் பாதிப்பில் இருந்து மக்களை காக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக ஏழை நாடுகளுக்கான தடுப்பூசி மற்றும் மருந்துகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார். குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு மருந்து தயாரிப்பாளரான மெர்க்கின் ஆன்டிவைரல் கோவிட்-19 மாத்திரை … Read more

தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேதிகுறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 16-வது தமிழக சட்டப்பேரவையின் 3-வது கூட்டம் மார்ச் 18-ம்தேதி தொடங்கியது. அன்று பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும், மறுநாள் வேளாண் பட்ஜெட்டை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வமும் தாக்கல் செய்தனர். பின்னர், பட்ஜெட் மீதான விவாதம் 3 நாட்கள் நடந்தது. விவாதங்களுக்கு நிதி அமைச்சரும், வேளாண் துறை அமைச்சரும் பதில் அளித்தனர். துறைவாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் ஏப்.6தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. உறுப்பினர்களின் கேள்விகள், … Read more