பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரியின் கீழ் கொண்டு வர வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வந்து அனைத்துத் தரப்பு மக்களின் நலனைக் காக்க வேண்டும் என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கரோனா காலத்திலும், அண்மையிலும் கடுமையான வரி உயர்வுகள் காரணமாக முன்பு இல்லாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளன. அனைத்துத் தரப்பு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாயும், … Read more

கர்நாடகாவில் புதிதாக திறக்கப்பட்ட மிதவை பாலம் இரண்டே நாளில் சேதம்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள மல்பே கடற்கரையில் 100 மீட்டர் நீளத்துக்கு ரூ.80 லட்சம் செலவில் மிதவை பாலம் அமைக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் கடலில் 100 மீட்டர் தூரத்துக்கு நடந்து சென்று அழகை ரசிக்க ஏதுவாக உருவாக்கப்பட்ட இந்தப் பாலம் கடந்த 6-ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 8-ம் தேதி சுற்றுலாப் பயணிகள் சென்றபோது மிதவை பாலம் கடுமையாக சேதமடைந்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் சிலர் கடலில் விழுந்தனர். அவர்களை அங்கிருந்த … Read more

ராஜ்யசபா எம்பி பதவி ஒதுக்க திமுகவிடம் கேட்போம்: கே.எஸ்.அழகிரி தகவல்

ஈரோடு: தமிழகத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா உறுப்பினர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என திமுகவிடம் கேட்போம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். மத்திய அரசைக் கண்டித்து ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் தலைமையில், கொடுமுடியில் இருந்து 250 கிலோ மீட்டர் தூரத்துக்கு, 10 நாள் நடைபயணம் நேற்று தொடங்கியது. நடைபயணத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாநிலத்துக்கான நிதியைக் … Read more

அசாமில் கடந்த 8 ஆண்டுகளில் 23 மாவட்டங்களில் ஆயுதப்படை சட்டம் வாபஸ் – விரைவில் மாநிலம் முழுவதும் ரத்தாகும் என அமித் ஷா நம்பிக்கை

புதுடெல்லி: கடந்த 8 ஆண்டுகளில் அசாமில் 23 மாவட்டங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. விரைவில் மாநிலம் முழுவதும் இந்த சட்டம் அகற்றப்படும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கூறினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2 நாள் பயணமாக அசாம் சென்றுள்ளார். பயணத்தின் 2-ம் நாளான நேற்று குவாஹாட்டியில் நடைபெற்ற விழாவில், அசாம் காவல் துறைக்கு குடியரசுத் தலைவரின் சிறப்புக் கொடி விருதை வழங்கினார். கவுரவமிக்க இந்த விருது, கடந்த … Read more

‘‘நல்ல உடல்நலத்துடன் திரும்பும் வரை தனிமை’’- பில்கேட்ஸுக்கு கரோனா தொற்று

நியூயார்க்: பில்கேட்ஸுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகளுடன் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனரும், உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான பில் கேட்ஸ் உலகம் முழுவதும் கரோனா தொற்றுநோய் பாதிப்பில் இருந்து மக்களை காக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக ஏழை நாடுகளுக்கான தடுப்பூசி மற்றும் மருந்துகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார். குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு மருந்து தயாரிப்பாளரான மெர்க்கின் ஆன்டிவைரல் கோவிட்-19 மாத்திரை … Read more

தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேதிகுறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 16-வது தமிழக சட்டப்பேரவையின் 3-வது கூட்டம் மார்ச் 18-ம்தேதி தொடங்கியது. அன்று பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும், மறுநாள் வேளாண் பட்ஜெட்டை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வமும் தாக்கல் செய்தனர். பின்னர், பட்ஜெட் மீதான விவாதம் 3 நாட்கள் நடந்தது. விவாதங்களுக்கு நிதி அமைச்சரும், வேளாண் துறை அமைச்சரும் பதில் அளித்தனர். துறைவாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் ஏப்.6தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. உறுப்பினர்களின் கேள்விகள், … Read more

மதுராவின் ஷாயி ஈத்காவிலும் களஆய்வு கோரி மனு: உ.பி.யின் முகலாயர் கால மசூதிகளுக்கு வலுக்கும் சிக்கல்

புதுடெல்லி: வாரணாசியின் கியான்வாபி மசூதியை போல், மதுராவின் ஷாயி ஈத்கா மசூதியிலும் கள ஆய்வு கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், முகலாயர்களால் கட்டப்பட்ட உத்தர பிரதேச மசூதிகளுக்கு சிக்கல் வலுப்பதாகக் கருதப்படுகிறது. உ.பி.யின் வாரணாசியில் காசிவிஸ்வநாதர் கோயிலை ஒட்டி கியான்வாபி மசூதி உள்ளது. முகலாய மன்னர் அவுரங்கசீப்பால் கட்டப்பட்ட இந்த மசூதி, அருகில் உள்ள விஸ்வநாதர் கோயிலை இடித்து அவுரங்கசீப் கட்டியதாகப் புகார் உள்ளது. இதன் மீதான வழக்கும் வாரணாசி நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக … Read more

சாதி, மத துவேஷங்களுக்கு இந்த மண்ணில் இடமில்லை; சமூக நல்லிணக்க தோட்டமாக திகழும் தமிழகம்: பேரவையில் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: மத துவேஷங்களுக்கு தமிழ் மண்ணில் இடமில்லை. சாதி,மத மோதல்கள் இன்றி சமூக நல்லிணக்க தோட்டமாக தமிழகம் திகழ்வதாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று பேசியதாவது: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதால்தான் புதிய முதலீடுகள் மாநிலத்தை நோக்கி வருகின்றன. இந்தியாவில் அமைதியான, பாதுகாப்பான மாநிலம்என்ற நற்பெயர் மீண்டும் தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ளது. ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்று பாராமல் சட்டத்தின் ஆட்சிநிலை நிறுத்தப்பட வேண்டும். எந்த திசையில் இருந்து அழுத்தம் வந்தாலும், … Read more

திசையை மாற்றியது அசானி புயல்: ஆந்திராவுக்கு ரெட் அலர்ட்: காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது

விசாகப்பட்டினம்: அசானி புயல் தனது திசையை மாற்றி அருகில் காக்கிநாடா கடற்கரை அருகே கரையை கடக்கும் என விசாகப்பட்டினம் புயல் எச்சரிக்கை மைய இயக்குனர் சுனந்தா தெரிவித்துள்ளார். தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய புயல் உருவாகியுள்ளது. அசானி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயலால் ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்கத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக … Read more

துணைவேந்தரை நியமிக்க அரசுக்கு அதிகாரம் வழங்குவது உட்பட 20 மசோதாக்கள் பேரவையில் நிறைவேற்றம்

சென்னை: மருத்துவம், வேளாண்மை, சட்டம்மற்றும் தமிழ் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்க அரசுக்கு அதிகாரம் வழங்கும்மசோதா உட்பட 20 மசோதாக்கள் பேரவையில் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை தமிழகஅரசுக்கே வழங்கும் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நேற்று அறிமுகம் செய்தார். பின்னர், 1976 -1998 காலகட்டத்தில் அமல்படுத்தப்பட்டு வழக்கிழந்த 91 சட்டங்களை நீக்குவதற்கான நீக்கறவு மசோதாவை அமைச்சர் எஸ்.ரகுபதி தாக்கல் செய்தார். ஊராட்சி செயலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிநியமிக்கும் … Read more