தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைப்பு
சென்னை: தமிழக சட்டப்பேரவை தேதிகுறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 16-வது தமிழக சட்டப்பேரவையின் 3-வது கூட்டம் மார்ச் 18-ம்தேதி தொடங்கியது. அன்று பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும், மறுநாள் வேளாண் பட்ஜெட்டை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வமும் தாக்கல் செய்தனர். பின்னர், பட்ஜெட் மீதான விவாதம் 3 நாட்கள் நடந்தது. விவாதங்களுக்கு நிதி அமைச்சரும், வேளாண் துறை அமைச்சரும் பதில் அளித்தனர். துறைவாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் ஏப்.6தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. உறுப்பினர்களின் கேள்விகள், … Read more