பஞ்சாப் போலீஸ் உளவுத் துறை அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல் – என்ஐஏ, உளவு அதிகாரிகள் தீவிர விசாரணை

சண்டிகர்: பஞ்சாப் போலீஸ் உளவுத் துறை தலைமை அலுவலகம் மீது நேற்று முன்தினம் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக என்ஐஏ மற்றும் மத்திய உளவுத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பஞ்சாப்பின் மொகாலியில் உள்ள போலீஸ் உளவுத் துறை தலைமை அலுவலகம் மீது நேற்று முன்தினம் காலை ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அலுவலக கட்டிடத்தின் ஒரு பகுதி மட்டும் சேதமடைந்தது. இதுகுறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள், … Read more

சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவுடன் கருணாநிதி படம் திறப்புவிழா மலர் வெளியீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

சென்னை: சட்டப்பேரவை நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு மலரை, சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட, பேரவைத் தலைவர் மு.அப்பாவு பெற்றுக் கொண்டார். சென்னை மாகாணமாக இருந்தபோது, மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவை, கடந்த 1921-ம் ஆண்டு ஜன.12-ம் தேதி உருவாக்கப்பட்டது. சென்னை மாகாண சட்டப்பேரவை உருவாக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்கவும், தமிழகத்தின் 5 … Read more

2 இந்தியாவை உருவாக்குகிறார் மோடி: ராகுல் காந்தி தாக்கு

தஹாத்: குஜராத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பிரச்சாரத்தை குஜராத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் தஹாத் மாவட்டத்தில் ராகுல் காந்தி தொடங்கி வைத்தார். அங்கு நேற்று நடந்த ஆதிவாசி சத்தியாகிரக பேரணியில் ராகுல் காந்தி பேசியதாவது: கடந்த 2014-ம் ஆண்டில் நரேந்திர மோடி பிரதமர் ஆனார். அதற்கு முன் அவர் குஜராத் முதல்வராக இருந்தார். குஜராத்தில் அவர் தொடங்கிய பணியும், நாட்டில் தற்போது அவர் செய்யும் பணியும் குஜராத் மாடல் என அழைக்கப்படுகிறது. இன்று … Read more

இலங்கையின் ஜனநாயகம், பொருளாதார மீட்சிக்கு இந்தியா முழு ஆதரவு: மத்திய அரசு உறுதி

புதுடெல்லி: இலங்கையில் பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ள நிலையில் அந்நாட்டின் ஜனநாயகத்திற்கும், நிலைத்தன்மைக்கும், பொருளாதாரத்தை மீட்டமைப்பதற்கும் இந்தியா முழு ஆதரவு வழங்கும் என அரசு தெரிவித்துள்ளது. “அண்டை நாடும் வரலாற்று ரீதியிலான பிணைப்பும் கொண்ட இலங்கையின் ஜனநாயகம், நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும், அதன் பொருளாதார மீட்சிக்கும் இந்தியா தனது முழு ஆதரவை வழங்கும். இலங்கைக்கு இந்தியா முழு ஆதரவளிக்ககும். நமது அண்டை நாட்டு கொள்கைகளின் படி, இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து … Read more

வடமேற்கு திசையில் நகரும் ‘அசானி’ புயல்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளி யிட்ட அறிக்கை: ‘அசானி’ தீவிர புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவக் கூடும். அதன்பிறகு வடக்கு – வடகிழக்கு திசையில் வட ஆந்திரா – ஒரிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியை நோக்கி நகரும். இதன்காரணமாக 11, 12, 13,14-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில … Read more

இந்துக்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து: ‘தெளிவான முடிவு எடுக்க வேண்டும்’ – மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: பாஜக மூத்த தலைவர் அஸ்வினி உபாத்யாயா கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். ‘‘ஜம்மு-காஷ்மீர், லடாக், லட்சத்தீவு, மிசோரம், நாகாலாந்து, மேகாலயா, அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப் மாநிலங்களில் மற்ற மதத்தினரைவிட இந்துக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அந்த மாநிலங்களில் இந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்க வேண்டும்’’ என்று அவர் தனது மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கவுல், எம்.எம். சுந்தரேஷ் அமர்வு விசாரித்து வருகிறது. வழக்கு … Read more

இலங்கையில் பிரதமர் இல்லம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – திரிகோணமலை கடற்படை தளத்தில் குடும்பத்தினருடன் ராஜபக்ச தஞ்சம்

கொழும்பு: இலங்கை முன்னாள் பிரதமர் ராஜபக்ச வீட்டை முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் தாக்கியதால், அவரும் அவரது குடும்பத்தினரும் ஹெலிகாப்டர் மூலம் தப்பி, திரிகோணமலை கடற்படை தளத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இலங்கையின் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ராஜபக்ச குடும்பத்தினர் ஆட்சி அதிகாரத்திலிருந்து வெளியேற வேண்டும் எனக் கோரி, கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக போராடி வரு கின்றனர். முன்னதாக அதிபர் கோத்தபய ராஜபக்ச மாளிகைக்கு எதிரே காலிமுகத் திடலில் அமைதியான … Read more

டாஸ்மாக்கை மாற்றக்கூடாது என கட்டிட உரிமையாளர் கேட்க முடியாது – உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: மதுபான கடையை வேறு இடத்துக்கு மாற்றக்கூடாது என கேட்க கட்டிட உரிமையாளருக்கு உரிமை இல்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலைச் சேர்ந்த மாரிமுத்து, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “ஆவுடையார் கோவிலில் எனது கட்டிடத்தில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த கடையை வேறு இடத்துக்கு மாற்ற ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். டாஸ்மாக் கடை நடத்துவதற்கு எனது கட்டிடத்தில் அனைத்து வசதிகளும் உள்ளன. மாற்றம் செய்யப்படும் இடத்தின் அருகே பள்ளி அமைந்துள்ளது. … Read more

தேவைக்கு அதிகமான சோடியம் ஹைப்போ குளோரைடு பயன்பாடு: ரூ.1.53 கோடியை வீணடித்த திருச்சி மாநகராட்சி

சென்னை: தேவைக்கு அதிகமான சோடியம் ஹைப்போ குளோரைடை பயன்படுத்தி ரூ.1.53 கோடியை திருச்சி மாநகராட்சி வீணடித்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோடியம் ஹைப்போ குளோரைடு என்ற வேதிப்பொருள் கிருமி நாசினியாக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக கரோனா தொற்று காலத்தில் தமிழகம் முழுவதும் பொது இடங்களை தூய்மைப்படுத்த இந்த சோடியம் ஹைப்போ குளோரைட்தான் பயன்படுத்தப்பட்டது. மேலும், குடிநீரை கிருமிநாசினி செய்யவும் இந்த சோடியம் ஹைப்போ குளோரைடு பயன்படுத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீரை விநியோகம் செய்வதற்கு முன்பாக இந்த … Read more

தமிழகத்தில் 2019-20-ல் ரூ.18,538 கோடி நஷ்டத்தை சந்தித்த 29 பொதுத்துறை நிறுவனங்கள்: சிஏஜி

சென்னை: 2019-20 ஆம் ஆண்டு காலத்தில் தமிழகத்தில் 29 பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.18,538 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகம், மின்சார வாரிம் என்று 60 பொதுத் துறை நிறுவனங்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களில், ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே லாபத்தில் இயங்கி வருகிறது. இதன்படி 2015 – 16-ம் ஆண்டில் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.14,822 கோடி நஷ்டத்தில் இயங்கி வந்தன. இதன்பிறகு … Read more