இந்துக்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து: ‘தெளிவான முடிவு எடுக்க வேண்டும்’ – மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: பாஜக மூத்த தலைவர் அஸ்வினி உபாத்யாயா கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். ‘‘ஜம்மு-காஷ்மீர், லடாக், லட்சத்தீவு, மிசோரம், நாகாலாந்து, மேகாலயா, அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப் மாநிலங்களில் மற்ற மதத்தினரைவிட இந்துக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அந்த மாநிலங்களில் இந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்க வேண்டும்’’ என்று அவர் தனது மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கவுல், எம்.எம். சுந்தரேஷ் அமர்வு விசாரித்து வருகிறது. வழக்கு … Read more