மதுரையில் பிளக்ஸ் போர்டுகள் அகற்றியதை கண்டித்து பாஜகவினர் சாலை மறியல்

மதுரை: பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்காக வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டுகள் அகற்றியதைக் கண்டித்து அழகர்கோயில் சாலையில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட மாநில, மாவட்ட பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரை அழகர்கோயில் சாலையில் தனியார் ஹோட்டலில் நடந்தது. மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இவர்களின் வருகையொட்டி அழகர்கோயில் ரோடு, கோகு லே ரோட்டில் அண்ணாமலை, எச்.ராஜா உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் புகைப்படங்களுடன் மெகா பிளக்ஸ் போர்டுகள் … Read more

இலங்கையின் ஜனநாயகம், பொருளாதார மீட்சிக்கு இந்தியா முழு ஆதரவு: மத்திய அரசு உறுதி

புதுடெல்லி: இலங்கையில் பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ள நிலையில் அந்நாட்டின் ஜனநாயகத்திற்கும், நிலைத்தன்மைக்கும், பொருளாதாரத்தை மீட்டமைப்பதற்கும் இந்தியா முழு ஆதரவு வழங்கும் என அரசு தெரிவித்துள்ளது. “அண்டை நாடும் வரலாற்று ரீதியிலான பிணைப்பும் கொண்ட இலங்கையின் ஜனநாயகம், நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும், அதன் பொருளாதார மீட்சிக்கும் இந்தியா தனது முழு ஆதரவை வழங்கும். இலங்கைக்கு இந்தியா முழு ஆதரவளிக்ககும். நமது அண்டை நாட்டு கொள்கைகளின் படி, இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து … Read more

ரூ.98 கோடியில் காசிமேட்டில் நவீன வசதிகளுடன் மீன்பிடி துறைமுகம் – மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தகவல்

சென்னை: சென்னை காசிமேட்டில் ரூ.98 கோடி செலவில் நவீன வசதிகளுடன் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட இருப்பதாக மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மீனவர்களின் தேவைக்கேற்ப பைபர் படகுகள் நிறுத்தும் வசதியோடு கூடிய மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்துவது தொடர்பாக, சென்னை துறைமுக ஆணையத்தின் தலைவர் சுனில் பாலிவால் மற்றும் உயரதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது: “சென்னை, விசாகப்பட்டினம் உள்ளிட்ட … Read more

மழைநீர் வடிகாலில் 2,217 கழிவுநீர் இணைப்புகள்: 1,405 இணைப்புகளை துண்டித்த சென்னை மாநகராட்சி

சென்னை: மழைநீர் வடிகாலில் விதிகளை மீறி 2,217 கழிவுநீர் இணைப்புகள் உள்ளதாகவும், இதில் 1,405 இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் 8,835 எண்ணிக்கையில் 2,071 கி.மீ., நீளத்துக்கு மழை நீர் வடிகால் உள்ளது. இதில், சில வீடுகள், மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில், சட்டவிரோதமாக கழிவுநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கழிவுநீர் இணைப்புகளை கண்டறிந்து துண்டிக்க, ’மாநகராட்சி உதவி அல்லது இளநிலை பொறியாளர், குடிநீர் வாரிய உதவி பொறியாளர், சுகாதார ஆய்வாளர், … Read more

ஓசூர் கோட்டை மாரியம்மன் கோயிலில் அலகு குத்தும் திருவிழா: அந்தரத்தில் தொங்கியபடி ஊர்வலமாக சென்ற பக்தர்கள்

ஓசூர்: ஓசூர் ராம்நகரில் உள்ள சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் அலகு குத்தும் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா காரணமாக அலகு குத்தும் திருவிழா நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், நடப்பாண்டு அலகு குத்தும் திருவிழாவை முன்னிட்டு கோட்டை மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து காலை 10 மணியளவில் காப்பு … Read more

ரூ.10 லட்சம்+ சொத்து வரி பாக்கி: பட்டியல் தயார் செய்யும் சென்னை மாநகராட்சி

சென்னை: ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக சொத்து வரி பாக்கி உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, இது தொடர்பான பட்டியலை சென்னை மாநகராட்சி தயார் செய்து வருகிறது. சென்னை மாநகராட்சியின் வரி வருவாயில், சொத்து வரி முக்கிய வருவாய் ஆக உள்ளது. உயர்த்தப்பட்ட புதிய சொத்து வரியின் அடிப்படையில் ஒரு நிதியாண்டுக்கு ரூ.1500 கோடி சொத்து வரி வசூலிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், அதிக வரி பாக்கி உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. … Read more

அதிமுக Vs திமுக | அப்போது 12,74,036 எஃப்.ஐ.ஆர்… இப்போது 8,66,653… – சட்டம் – ஒழுங்கு நிலவரம் மீது முதல்வர் ஸ்டாலின் ஒப்பீடு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்த இத்துறைகளின் அமைச்சரான தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டம் – ஒழுங்கு நிலவரத்தை அதிமுக ஆட்சிக் காலத்துடன் ஒப்பிட்டு பட்டியலிட்டார். குறிப்பாக, அதிமுக ஆட்சியின் கடைசி ஓராண்டில் 12,74,036 எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டன என்றும், திமுக ஆட்சியில் அது பெருமளவு குறைந்து 8,66,653 முதல் தகவல் அறிக்கைகள் மட்டுமே பதிவாகியிருக்கின்றன என்றும் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்பு … Read more

“1992-ல் பாபர் மசூதி, 2022-ல் கியான்வாபி” – உ.பி முசாபர்நகர் கலவர வழக்கில் சிக்கிய பாஜக பிரமுகர் பேச்சால் சர்ச்சை 

புதுடெல்லி: “1992-ல் பாபர் மசூதி, 2022-ல் கியான்வாபி“ என உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகர் கலவர வழக்கில் சிக்கிய பாஜக முக்கியப் பிரமுகர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசம் முசாபர்நகரின் 2013 மதக் கலவர வழக்கில் சிக்கியவர் பாஜக எம்எல்ஏவாக இருந்த சங்கீத் சோம். இவர், மதநல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் சர்ச்சைக்குரிய பேச்சுகளை அவ்வப்போது அளிப்பவர். தற்போது சங்கீத் சோம், வாரணாசியின் கியான்வாபி மசூதியில் நீதிமன்ற உத்தரவின்படி நடைபெறும் களஆய்வு மீது கருத்து கூறி உள்ளார். மீரட்டின் … Read more

சட்டப்பேரவையில் அதிகம் கேள்வி எழுப்பிய எம்எல்ஏக்கள், அதிகம் பதிலளித்த அமைச்சர்கள் – முதல் 5 இடங்கள் யாருக்கு?

சென்னை: 16-வது தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், திமுக சட்டப்பேரவை உறுப்பினர் தயாகம் கவி 8,446 கேள்விகளை எழுப்பியுள்ளார். சட்டபேரவை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பொன்முடி மற்றும் செந்தில்பாலாஜி ஆகியோர் தலா 15 கேள்விகளுக்கு பதிலளித்துள்ளனர். இதுதொடர்பாக தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 16-வது சட்டப்பேரவையின் மூன்றாம் கூட்டத்தொடரின் முதல் கூட்டம் கடந்த ஜன.5-ம் தேதி தொடங்கி ஜன.7-ம் தேதி வரை நடைபெற்றது. இரண்டாவது கூட்டம் (சிறப்புக் கூட்டம்) பிப்.8-ம் தேதியும், மூன்றாவது … Read more

கர்நாடகாவில் பாங்குக்கு போட்டியாக கோயில்களில் பக்தி பாடல்கள் ஒலிபரப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் மசூதிகளில் அஸான் எனப்படும் பாங்கு (தொழுகை அறிவிப்பு) ஒலிபெருக்கியில் ஒலிப்பதற்கு இந்துத்துவ அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற உத்தரவில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மட்டுமே ஒலியின் அளவு இருக்க வேண்டும் என அறிவுறுத்தியது. இதனை மீறியதாக 15-க்கும் மேற்பட்ட மசூதிகள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்த‌து. இந்நிலையில் ஒலிபெருக்கியில் பாங்கு ஒலிக்கச் செய்வதற்கு போட்டியாக ஸ்ரீராம் சேனா அமைப்பினர் நேற்று அதிகாலை 5 மணிக்கு பெங்களூரு, மைசூரு, … Read more