ரூ.10 லட்சம்+ சொத்து வரி பாக்கி: பட்டியல் தயார் செய்யும் சென்னை மாநகராட்சி

சென்னை: ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக சொத்து வரி பாக்கி உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, இது தொடர்பான பட்டியலை சென்னை மாநகராட்சி தயார் செய்து வருகிறது. சென்னை மாநகராட்சியின் வரி வருவாயில், சொத்து வரி முக்கிய வருவாய் ஆக உள்ளது. உயர்த்தப்பட்ட புதிய சொத்து வரியின் அடிப்படையில் ஒரு நிதியாண்டுக்கு ரூ.1500 கோடி சொத்து வரி வசூலிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், அதிக வரி பாக்கி உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. … Read more

அதிமுக Vs திமுக | அப்போது 12,74,036 எஃப்.ஐ.ஆர்… இப்போது 8,66,653… – சட்டம் – ஒழுங்கு நிலவரம் மீது முதல்வர் ஸ்டாலின் ஒப்பீடு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்த இத்துறைகளின் அமைச்சரான தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டம் – ஒழுங்கு நிலவரத்தை அதிமுக ஆட்சிக் காலத்துடன் ஒப்பிட்டு பட்டியலிட்டார். குறிப்பாக, அதிமுக ஆட்சியின் கடைசி ஓராண்டில் 12,74,036 எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டன என்றும், திமுக ஆட்சியில் அது பெருமளவு குறைந்து 8,66,653 முதல் தகவல் அறிக்கைகள் மட்டுமே பதிவாகியிருக்கின்றன என்றும் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்பு … Read more

“1992-ல் பாபர் மசூதி, 2022-ல் கியான்வாபி” – உ.பி முசாபர்நகர் கலவர வழக்கில் சிக்கிய பாஜக பிரமுகர் பேச்சால் சர்ச்சை 

புதுடெல்லி: “1992-ல் பாபர் மசூதி, 2022-ல் கியான்வாபி“ என உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகர் கலவர வழக்கில் சிக்கிய பாஜக முக்கியப் பிரமுகர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசம் முசாபர்நகரின் 2013 மதக் கலவர வழக்கில் சிக்கியவர் பாஜக எம்எல்ஏவாக இருந்த சங்கீத் சோம். இவர், மதநல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் சர்ச்சைக்குரிய பேச்சுகளை அவ்வப்போது அளிப்பவர். தற்போது சங்கீத் சோம், வாரணாசியின் கியான்வாபி மசூதியில் நீதிமன்ற உத்தரவின்படி நடைபெறும் களஆய்வு மீது கருத்து கூறி உள்ளார். மீரட்டின் … Read more

சட்டப்பேரவையில் அதிகம் கேள்வி எழுப்பிய எம்எல்ஏக்கள், அதிகம் பதிலளித்த அமைச்சர்கள் – முதல் 5 இடங்கள் யாருக்கு?

சென்னை: 16-வது தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், திமுக சட்டப்பேரவை உறுப்பினர் தயாகம் கவி 8,446 கேள்விகளை எழுப்பியுள்ளார். சட்டபேரவை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பொன்முடி மற்றும் செந்தில்பாலாஜி ஆகியோர் தலா 15 கேள்விகளுக்கு பதிலளித்துள்ளனர். இதுதொடர்பாக தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 16-வது சட்டப்பேரவையின் மூன்றாம் கூட்டத்தொடரின் முதல் கூட்டம் கடந்த ஜன.5-ம் தேதி தொடங்கி ஜன.7-ம் தேதி வரை நடைபெற்றது. இரண்டாவது கூட்டம் (சிறப்புக் கூட்டம்) பிப்.8-ம் தேதியும், மூன்றாவது … Read more

கர்நாடகாவில் பாங்குக்கு போட்டியாக கோயில்களில் பக்தி பாடல்கள் ஒலிபரப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் மசூதிகளில் அஸான் எனப்படும் பாங்கு (தொழுகை அறிவிப்பு) ஒலிபெருக்கியில் ஒலிப்பதற்கு இந்துத்துவ அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற உத்தரவில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மட்டுமே ஒலியின் அளவு இருக்க வேண்டும் என அறிவுறுத்தியது. இதனை மீறியதாக 15-க்கும் மேற்பட்ட மசூதிகள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்த‌து. இந்நிலையில் ஒலிபெருக்கியில் பாங்கு ஒலிக்கச் செய்வதற்கு போட்டியாக ஸ்ரீராம் சேனா அமைப்பினர் நேற்று அதிகாலை 5 மணிக்கு பெங்களூரு, மைசூரு, … Read more

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை; 13-ம் தேதி முதல் மீண்டும் வெயில்: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு

சென்னை: சென்னைக்கு அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருக்கிறது, வரும் 13 ஆம் தேதி அசானி கரையை கடந்தவுடன் வெப்பநிலை அதிகரிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய புயல் உருவாகியுள்ளது. அசானி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயலால் ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்கத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதலே சென்னை மற்றும் சுற்றுவட்டார … Read more

ஏழை இந்துவின் அறுவை சிகிச்சைக்காக கேரளாவில் நிதி திரட்டிய இஸ்லாமியர்கள்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், மலப்புரம் பகுதியைச் சேர்ந்த ராகேஷ் பாபு (38) ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். சிறுநீரகக் கோளாறு காரணமாக கடந்த 5 மாதங்களாக அவர் ஆட்டோ ஓட்டவில்லை. இப்போது சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக ராகேஷ் பாபு, கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது அறுவை சிகிச்சைக்காக மலப்புரத்தில் உள்ள இருபதுக்கும் அதிகமான பள்ளி வாசல்களில் இஸ்லாமியர்கள் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்ததும் நிதி பிரித்தனர். ஏழை இந்துவின் அறுவை சிகிச்சைக்காக … Read more

‘அயன்’ பட பாணியில் வயிற்றில் மறைத்து போதைப்பொருள் கடத்தல்: கோவையில் உகாண்டா பெண் கைது

கோவை: ‘அயன்’ பட பாணியில் போதைப்பொருளை வயிற்றில் மறைத்து வைத்து விமானத்தில் கோவைக்கு கடத்திவந்த உகாண்டா பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஷார்ஜா – கோவை இடையே ஏர் அரேபியா விமானம் இயக்கப்படுகிறது. இந்நிலையில், உகாண்டாவைச் சேர்ந்த சான்ரா நாண்டேசா (33) என்ற பெண் விமானம் மூலமாக கடந்த 6-ம் தேதி ஷார்ஜாவில் இருந்து கோவைக்கு போதைப்பொருள் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து கோவை விமான நிலையம் வந்த அந்த பெண்ணை … Read more

தாஜ்மகால் வழக்கு ஏற்பு: இனிப்பு வழங்கிய இந்துமகா சபாவினருக்கு போலீஸ் தடை

புதுடெல்லி: ஆக்ராவின் தாஜ்மகாலில் இனிப்பு வழங்கிய இந்துமகா சபாவினருக்கு தடை விதிக்கப்பட்டது. தாஜ்மகாலில் திறக்கப்படாமல் உள்ள 22 அறைகளைத் திறந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தொல்லியல் ஆய்வு மையத்திற்கு உத்தரவிடக் கோரிய மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்ற மகிழ்ச்சியில் இனிப்பு வழங்கப்பட்டது. முகலாய அரசர்களில் ஒருவரான ஷாஜஹான் ஆறாம் நூற்றாண்டில், பளிங்குக்கற்களால் கட்டியது தாஜ்மகால். தற்போது பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் அமைந்துள்ள இதைக் கட்ட அங்கிருந்த தேஜோலாயா எனும் சிவன் கோயில் இடிக்கப்பட்டதாகப் புகார் … Read more

'நத்திங் போன் (1)' பிளிப்கார்ட் தளம் மூலமாக மட்டுமே விற்பனை

புதுடெல்லி: விரைவில் இந்தியாவில் அறிமுகமாக உள்ள ‘நத்திங் போன் (1)’ பிளிப்கார்ட் தளம் மூலமாக மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே உள்ள பார்ட்னர்ஷிப் இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடை கால ஸ்பெஷலாக இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ளது நத்திங் நிறுவனத்தின் ‘போன் (1)’. இந்த போன் வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாத வாக்கில் விற்பனைக்கு வரும் எனத் தெரிகிறது. லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது நத்திங். தொழில்நுட்ப … Read more