சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை; 13-ம் தேதி முதல் மீண்டும் வெயில்: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு

சென்னை: சென்னைக்கு அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருக்கிறது, வரும் 13 ஆம் தேதி அசானி கரையை கடந்தவுடன் வெப்பநிலை அதிகரிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய புயல் உருவாகியுள்ளது. அசானி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயலால் ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்கத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதலே சென்னை மற்றும் சுற்றுவட்டார … Read more

ஏழை இந்துவின் அறுவை சிகிச்சைக்காக கேரளாவில் நிதி திரட்டிய இஸ்லாமியர்கள்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், மலப்புரம் பகுதியைச் சேர்ந்த ராகேஷ் பாபு (38) ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். சிறுநீரகக் கோளாறு காரணமாக கடந்த 5 மாதங்களாக அவர் ஆட்டோ ஓட்டவில்லை. இப்போது சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக ராகேஷ் பாபு, கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது அறுவை சிகிச்சைக்காக மலப்புரத்தில் உள்ள இருபதுக்கும் அதிகமான பள்ளி வாசல்களில் இஸ்லாமியர்கள் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்ததும் நிதி பிரித்தனர். ஏழை இந்துவின் அறுவை சிகிச்சைக்காக … Read more

‘அயன்’ பட பாணியில் வயிற்றில் மறைத்து போதைப்பொருள் கடத்தல்: கோவையில் உகாண்டா பெண் கைது

கோவை: ‘அயன்’ பட பாணியில் போதைப்பொருளை வயிற்றில் மறைத்து வைத்து விமானத்தில் கோவைக்கு கடத்திவந்த உகாண்டா பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஷார்ஜா – கோவை இடையே ஏர் அரேபியா விமானம் இயக்கப்படுகிறது. இந்நிலையில், உகாண்டாவைச் சேர்ந்த சான்ரா நாண்டேசா (33) என்ற பெண் விமானம் மூலமாக கடந்த 6-ம் தேதி ஷார்ஜாவில் இருந்து கோவைக்கு போதைப்பொருள் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து கோவை விமான நிலையம் வந்த அந்த பெண்ணை … Read more

தாஜ்மகால் வழக்கு ஏற்பு: இனிப்பு வழங்கிய இந்துமகா சபாவினருக்கு போலீஸ் தடை

புதுடெல்லி: ஆக்ராவின் தாஜ்மகாலில் இனிப்பு வழங்கிய இந்துமகா சபாவினருக்கு தடை விதிக்கப்பட்டது. தாஜ்மகாலில் திறக்கப்படாமல் உள்ள 22 அறைகளைத் திறந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தொல்லியல் ஆய்வு மையத்திற்கு உத்தரவிடக் கோரிய மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்ற மகிழ்ச்சியில் இனிப்பு வழங்கப்பட்டது. முகலாய அரசர்களில் ஒருவரான ஷாஜஹான் ஆறாம் நூற்றாண்டில், பளிங்குக்கற்களால் கட்டியது தாஜ்மகால். தற்போது பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் அமைந்துள்ள இதைக் கட்ட அங்கிருந்த தேஜோலாயா எனும் சிவன் கோயில் இடிக்கப்பட்டதாகப் புகார் … Read more

'நத்திங் போன் (1)' பிளிப்கார்ட் தளம் மூலமாக மட்டுமே விற்பனை

புதுடெல்லி: விரைவில் இந்தியாவில் அறிமுகமாக உள்ள ‘நத்திங் போன் (1)’ பிளிப்கார்ட் தளம் மூலமாக மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே உள்ள பார்ட்னர்ஷிப் இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடை கால ஸ்பெஷலாக இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ளது நத்திங் நிறுவனத்தின் ‘போன் (1)’. இந்த போன் வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாத வாக்கில் விற்பனைக்கு வரும் எனத் தெரிகிறது. லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது நத்திங். தொழில்நுட்ப … Read more

ஆர்.ஏ.புரம் குடியிருப்புகளை அகற்றுவதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு | வாதங்களின் முழு விவரம்

சென்னை: சென்னை ஆர்.ஏ.புரம் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகள், கட்டங்களை அகற்றுவதற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம், தடை கோரிய இடைக்கால மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சென்னை ஆர்.ஏ.புரத்தில் அரசு நிலங்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள், கட்டடங்கள் உள்ளிற்றவற்றை அகற்றுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்.ஏ.புரம் பகுதி மக்கள் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் காலின் கோன்சால்வேஸ், … Read more

வளர்ச்சித் திட்டங்களில் ‘கமிஷன்’ கேட்காதீர்: யோகியின் எச்சரிக்கையால் பாஜக எம்எல்ஏ, எம்.பிக்கள் ‘ஷாக்’

புதுடெல்லி: “பொதுமக்களின் வளர்ச்சித் திட்டங்களில் ‘கமிஷன்’ கேட்காதீர்கள்” என பாஜக எம்எல்ஏ, எம்.பிக்களுக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி அதித்யநாத் அறிவுறுத்தியுள்ளார். இதன் மீதானப் புகார்களில் தான் கடும் நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார். பாஜக ஆளும் மாநிலமான உத்தரப் பிரதேச முதல்வர் யோகி லலித்பூரின் பாஜக கூட்டத்தில் உரையாற்றினார். இதில், அவரது கட்சியின் மாநில எம்எல்ஏ, எம்பி மற்றும் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் யோகி கூறுகையில், ”கமிஷன் … Read more

விரைவில் 3,000 காவலர்கள் தேர்வு: சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தகவல்

சென்னை: தமிழகத்தில் விரைவில் 3,000 காவலர்கள் தேர்வு செய்யப்படவுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார். இத்துடன் மேலும் மூன்று அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது. இதற்கு பதிலளித்த துறையின் அமைச்சரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், “விரைவில் 3 ஆயிரம் புதிய காவலர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு … Read more

குழந்தைக்கு தனியாக ‘பெர்த்’: ரயில்களில் புதிய படுக்கை வசதி அறிமுகம்

புதுடெல்லி: ரயில்களில் தாயுடன் குழந்தையும் படுத்து தூங்கும் வகையில் அவர்களுக்காக தனியாக குழந்தைக்கு தனியாக படுக்கை வசதி ரயில்களில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. ரயில்களில் இரவுநேர பயணத்தின்போது படுக்கை வசதி கொண்ட ரயில்களில் முன்பதிவு செய்யும்போது குழந்தைகளாக இருந்தால் பாதி கட்டணத்தில் டிக்கெட் வழங்கப்பட்டது. ஆனால் அவர்களுக்கு தனியாக பெர்த் வழங்கப்பட்டது. பாதிக்கட்டணத்தில் பெர்த் வழங்கியதால் ரயில்வே நிர்வாகத்துக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனையடுத்து உடன் பயணம் செய்யும் குழந்தைகளுக்கு பாதிக் கட்டணத்தில் தனியாக படுக்கை வழங்குவது நிறுத்தப்பட்டது. அதே … Read more

தாஜ்மகாலை எலான் மஸ்க் குடும்பத்தினர் பார்வையிட்ட தருணங்கள்… இது 3 தலைமுறைகளின் கதை!

உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ்மகாலுக்கு உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு காலகட்டங்களில் வந்து சென்றுள்ளனர். இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆக்ரா நகரின் யமுனை ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ளது தாஜ்மகால். வெளிநாட்டினர், உள்நாட்டு மக்கள் என தினமும் பல ஆயிரம் பேர் வந்து பார்வையிட்டு செல்லும் இடம். உலகின் முக்கியமான இடங்களில் ஒன்று. முகலாய மன்னர் ஷாஜகான், அவரது மனைவி மும்தாஜின் நினைவாக கட்டிய மகால் இது. … Read more