தாஜ்மகாலை எலான் மஸ்க் குடும்பத்தினர் பார்வையிட்ட தருணங்கள்… இது 3 தலைமுறைகளின் கதை!

உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ்மகாலுக்கு உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு காலகட்டங்களில் வந்து சென்றுள்ளனர். இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆக்ரா நகரின் யமுனை ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ளது தாஜ்மகால். வெளிநாட்டினர், உள்நாட்டு மக்கள் என தினமும் பல ஆயிரம் பேர் வந்து பார்வையிட்டு செல்லும் இடம். உலகின் முக்கியமான இடங்களில் ஒன்று. முகலாய மன்னர் ஷாஜகான், அவரது மனைவி மும்தாஜின் நினைவாக கட்டிய மகால் இது. … Read more

'நீட்டை ஆதரிக்கும் பாஜகவை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்' – கே.எஸ்.அழகிரி

சென்னை: தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்குகிற, நீட்டை ஆதரிக்கிற பாஜக-வை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். இது குறித்து இன்று கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்: “துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்க தமிழகம் வந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீண்டும் இந்தி மொழி திணிப்பு குறித்துப் பேசியிருக்கிறார். இந்தியைப் படிக்காதீர் என்கிற அணுகுமுறையினால் தமிழகம் தனித்து விடப்பட்டுள்ளதாக கூறியதன் மூலம் தமிழர்களின் உணர்வை அவர் … Read more

டெல்லி ஷாகின் பாக்கில் ஆக்கிரமிப்பு அகற்றம்: உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு

புதுடெல்லி: டெல்லி ஷாகின் பாக் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை நேற்று தொடங்கியது. டெல்லியில் முதல்வர் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு ஆட்சி நடத்தி வருகிறது. எனினும் வடக்கு, தெற்கு, கிழக்கு டெல்லி மாநகராட்சிகள் பாஜக வசம் உள்ளன. அண்மைகாலமாக டெல்லியின் 3 மாநகராட்சிப் பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிநடைபெற்று வருகிறது. அண்மையில் வடக்கு டெல்லி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஜஹான்கிர்புரி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் அங்கு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி … Read more

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; முதியவருக்கு 20 ஆண்டு சிறை: கரூர் நீதிமன்றம் தீர்ப்பு

கரூர்: குளித்தலை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 66 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கரூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள ஆர்ச்சம்பட்டி சேவை காலனியைச் சேர்ந்தவர் காளிமுத்து (66). இவர் அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை கடந்தாண்டு ஜனவரி 11 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து குளித்தலை … Read more

மின்தடையால் மாறிய மணமகள்கள்: மத்தியப் பிரதேசத்தில் திருமண விழாவில் பரபரப்பு

போபால்: மத்தியப் பிரதேசத்தில் திருமண நிகழ்வின்போது மின் தடை காரணமாக மணமகள் மாறிய நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் உள்ளது அஸ்லானா கிராமம். இங்கு கடந்த 5 ஆம் தேதி (மே 5) சகோதரிகள் இருவருக்கு நடந்த திருமண நிகழ்வில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. மின்தடைக்கு இடையே மணமக்கள் பூஜையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மணமகள்கள் தங்களுக்கு நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளையுடன் அமராமல் தவறுதலாக மாறி அமர்ந்துள்ளனர். இந்த நிலையிலையே திருமண சடங்குகளும் செய்யப்பட்டுள்ளன. முக்கிய சடங்குகள் கடந்தபிறகே … Read more

மகிந்தா ராஜபக்சே குடும்பத்துடன் திரிகோணமலைக்கு ஹெலிகாப்டரில் தப்பியோட்டம்?- கடற்படைதளத்தை சூழ்ந்து மக்கள் போராட்டம்

கொழும்பு: இலங்கையில் ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக பெரிய அளவில் மக்கள் போராட்டம் நடந்து வரும் நிலையில் மஹிந்தா ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் ராணுவ பாதுகாப்புடன் கொழும்பிலிருந்து புறப்பட்டு திருகோணமலை கடற்படை தளத்துக்கு ஹெலிகாப்டரில் தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் பெட்ரோல், டீசலுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது. பொருட்கள் விலை உயர்வு மேலும் அதிகரித்துள்ளதுடன் பொருளாதார சுழற்சியும் தடைபட்டுள்ளது. இதனால் இலங்கை அரசியலில் அங்கம் பதவி … Read more

'விசாரணைக் கைதிகள் மரணம் எந்த ஆட்சியில் நடந்தாலும் அதை நியாயப்படுத்த முடியாது' – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: விசாரணை கைதிகள் உயிரிழப்பு எந்த ஆட்சியில் நடந்திருந்தாலும் அதை நியாயப்படுத்த முடியாது. லாக்அப் மரணங்கள் இனி நடக்காமல் இருப்பதற்கான உறுதியான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் நேற்றும், இன்றும் காவல் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து துறை அமைச்சர் என்ற முறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கு பதில் அளித்து பேசினார். அப்போது பேசிய அவர், விசாரணைக் கைதிகள் உயிரிழப்பு எந்த ஆட்சியில் நடந்திருந்தாலும் அதை … Read more

ஆந்திராவில் இளம் பெண்ணை சுட்டுக் கொலை செய்துவிட்டு இளைஞர் தற்கொலை

ஆந்திராவில் இளம் பெண்ணை சுட்டுக் கொலை செய்துவிட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். ஒரு தலை காதலே காரணம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் தடிபர்தி கிராமத்தைச் சேர்ந்தவர் காவ்யா ரெட்டி. இவர் புனேவைச் சேர்ந்த ஐடி நிறுவனத்தில் பணி புரிந்துவந்தார். கரோனா காரணமாக கடந்த ஓராண்டுக்கு மேலாக அவர் வீட்டிலிருந்து பணி புரிந்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்தவர் மலபதி சுரேஷ் ரெட்டி. இவர் பெங்களூரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றி … Read more

குடும்ப அரசியலுக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள்: பற்றி எரியும் இலங்கை; கைகொடுக்காத சமரச திட்டம்

கொழும்பு: இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்த மகிந்தா ராஜபக்சே விலகியுள்ள போதிலும் அவரது குடும்ப அரசியலுக்கு எதிரான மக்கள் போராட்டம் தொடர்கிறது. அவரது குடும்பம் நாட்டை விட்டு தப்பி செல்ல முயலும் நிலையில் மக்கள் மட்டுமின்றி சொந்த கட்சியினரும் எதிராக திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் பெட்ரோல், டீசலுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது. பொருட்கள் விலை உயர்வு மேலும் அதிகரித்துள்ளதுடன் பொருளாதார சுழற்சியும் தடைபட்டுள்ளது. இதனால் இலங்கையில் … Read more

உள்ளூர் மக்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை; கல்பாக்கம் அணுமின்நிலையம் முன் பாமக நாளை போராட்டம்

சென்னை: உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென கல்பாக்கம் அணுமின்நிலையத்தின் முன்பாக நாளை போராட்டம் நடத்த உள்ளதாக பாமக அறிவித்துள்ளது. இதுகுறித்து இக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சென்னை அணுமின் நிலையத்தில் பிளம்பர், தச்சர் போன்ற சி பிரிவு பணிகளுக்குக் கூட இந்தி மொழியில் தேர்வும், நேர்காணலும் நடத்தப்படுவதையும், அதன் மூலம் உள்ளூர் மக்களுக்கான வேலைவாய்ப்புகள் திட்டமிட்டு மறுக்கப்படுவதையும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ச.ராமதாஸ் ஆதாரங்களுடன் … Read more