தேரா சச்சா தலைவர் குர்மீத் ராம் ரஹீமுக்கு 21 நாள் பரோல்: பஞ்சாப் தேர்தலில் ஆதாயம் தேடும் நடவடிக்கையா?

சண்டிகர்: கொலை மற்றும் பாலியல் பலாத்கார வழக்கில் ஆயுள் கைதியாக ஹரியாணா சுனாரியா சிறையில் உள்ள தேரா சச்சா தலைவர் ராம் ரஹீம் சிங்குக்கு 21 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, பஞ்சாப் தேர்தலை ஒட்டிய நகர்வாக இருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஹரியாணா மாநிலத்தில் தேரா சச்சா சவுதா சிர்ஸா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவராக குர்மீத் ராம் ரஹீம் சிங் உள்ளார். இந்த அமைப்பின் மேலாளர் ரஞ்சித் சிங், 2002 ஜூலை … Read more

வலுப்பெறும் டிரக் ஓட்டுநர்கள் போராட்டம்: கனடா தலைநகரில் அவசரநிலை பிரகடனம்

ஒட்டா: தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவை எதிர்த்து கனடாவில் டிரக் (லாரி) ஓட்டுநர்களின் போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், தலைநகர் ஒட்டாவாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கரோனா பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளதைத் தொடர்ந்து, கனடாவில் அதன் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க அந்நாட்டு அரசு கரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது. பொது இடங்களில் நடமாடுவோர், பொதுப் போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டது. மேலும், லாரி ஓட்டுநர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என்றும், தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவர் என்றும் அரசு … Read more

8 ஆண்டுகளுக்கு பின் லோகோவை மாற்றிய கூகுள் குரோம்

கூகுள் குரோம் 8 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தனது லோகோவை மாற்றியுள்ளது. கூகுள் நிறுவனம் 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக, தனது குரோம் லோகோவை மாற்றியுள்ளது. லோகோவின் நிறங்கள் எதுவும் மாற்றப்படவில்லை. இதில் உள்ள சிகப்பு, நீலம், பச்சை மற்றும் மஞ்சள் போன்ற நிறங்களின் சேர்க்கை சற்று அதிகப்படுத்தப்பட்டு நிழல்கள் நீக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக லோகோ அதிக மாற்றங்கள் இன்றி அதேசமயம் நேரலை போன்ற அனுபவத்தை கொடுக்கிறது. புதிய மாற்றங்களின் படி விண்டோஸ், மேக் … Read more

நடிகர் விஜய் சந்திப்பு பற்றி பதிலளிப்பதைத் தவிர்த்து புறப்பட்ட முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: புதுவையில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட முதல்வர் ரங்கசாமி நடிகர் விஜய் சந்திப்பு பற்றிய கேள்விகளுக்கு பதிலளிப்பதைத் தவிர்த்தார். புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 12-ம் ஆண்டு விழா கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்வர் ரங்கசாமி கட்சியின் ஆண்டு விழாவை கட்சி கொடியேற்று பூஜை செய்து தொடங்கி வைத்து தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் கூறியதாவது: ”எங்களது ஆட்சியில் புதுச்சேரி வளர்ச்சியை கருத்தில் கொண்டு செயல்படுத்தி வருகிறோம். மத்திய … Read more

யாரேனும் ஏதாவது கோபத்தில் பேசுவதெல்லாம் இந்துத்துவம் ஆகிவிடாது: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் விமர்சனம்

நாக்பூர்: யாரேனும் ஏதாவது கோபத்தில் பேசுவதெல்லாம் இந்துத்துவக் கொள்கை ஆகிவிடாது என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார். இந்துத்துவமும் தேசிய ஒருமைப்பாடும் என்ற தலைப்பில் லோக்மத் மீடியா ஒருங்கிணைத்த நிகழ்ச்சியில் பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார். நாக்பூர் லோக்மத் பத்திரிகை பொன்விழா கொண்டாடியது. அதன் ஒருபகுதியாக நேற்று நடந்த நிகழ்ச்சியில் மோகன் பாகவத் பேசியதாவது: அண்மையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் தர்ம சன்சத் என்ற தலைப்பில் நடந்த இந்து மாநாட்டில் பேசப்பட்ட சில கருத்துகள் சர்ச்சையாகியுள்ளன. அவை … Read more

4.6 பில்லியன் டாலர்களை இழந்த எலான் மஸ்க்: பணக்காரர்கள் பட்டியலில் பெஸோஸ் மீண்டும் முதலிடம் 

டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சி கண்டதால் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு குறைந்ததையடுத்து அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ், உலகப் பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். செவ்வாய்க்கிழமை அன்று டெஸ்லாவின் பங்குகள் 2.4 சதவீதம் வீழ்ச்சி கண்டது. இதனால் மஸ்க் 4.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்தார். தொடர்ந்து உலகின் 500 பெரும் பணக்காரர்களை வரிசைப்படுத்தும் ப்ளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். 191.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் பெஸோஸ் மீண்டும் … Read more

‘இந்து தமிழ் திசை’, சங்கர் ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்திய ‘ஆளப் பிறந்தோம்’ வழிகாட்டு நிகழ்ச்சி; கல்லூரியில் படிக்கும்போதே போட்டித் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும்: அர்ப்பணிப்புடன் படித்தால் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி நிச்சயம் என அதிகாரிகள், பயிற்சியாளர் அறிவுரை

சென்னை: அரசு பணியில் சேர விரும்பும்இளைஞர்கள் கல்லூரியில் படிக்கும்போதே போட்டித் தேர்வுகளுக்கு தயாராக வேண்டும். கடின உழைப்பு, அர்ப்பணிப்புடன் படித்தால் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெறலாம் என்று அரசுத்துறை அதிகாரிகள், பயிற்சியாளர்கள் ‘ஆளப் பிறந்தோம்’ வழிகாட்டு நிகழ்ச்சியில் அறிவுரை வழங்கியுள்ளனர். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’யுடன் இணைந்து ‘ஆளப் பிறந்தோம்’ எனும் வழிகாட்டு நிகழ்ச்சியை கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை இணையவழியில் நடத்தியது. இதில் பங்கேற்ற கருத்தாளர்களின் உரை விவரம் வருமாறு: ஒடிசா … Read more

காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு; ட்விட்டரில் ட்ரெண்டான #BoycottHyundai: ஹூண்டாய் மோட்டார் இந்தியா விளக்கம்

காஷ்மீர் பிரிவினவாதிகளை ஆதரித்து பாகிஸ்தானைச் சேர்ந்த ஹூண்டாய் மோட்டார் டீலர் ஒருவர் பதிவிட்ட ட்வீட் வைரலான நிலையில் அது குறித்து விளக்கமளித்துள்ளது ஹூண்டாய் மோட்டார் நிறுவனம். முன்னதாக @hyundaiPakistanOfficial என்ற ட்விட்டர் பக்கத்தில், காஷ்மீரின் விடுதலைக்காகப் பிரார்த்தனை செய்கிறோம். காஷ்மீர் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்தவர்களை நினைவுகூர்கிறோம் என்று பதியப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்தியளவில் #BoycottHyundai ட்ரெண்டானது. இந்திய அளவில் ஹூண்டாய் தயாரிப்புகளுக்கு எதிரான குரல் வலுத்தது. இந்நிலையில் ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா ஒரு விளக்கத்தை நல்கியுள்ளது. அந்த விளக்க … Read more

ட்விட்டருக்கு மாற்று?- 5 நாட்களில் 9 லட்சம் பயனர்கள்: 'கூ' செயலிக்குக் குவியும் வரவேற்பு

பிரபல சமூக வலைதளமான ட்விட்டர் செயலிக்கு மாற்றாக இந்தியாவில் தொடங்கப்பட்டிருக்கும் ‘கூ’ செயலிக்குத் தொடர்ந்து வரவேற்பு அதிகரித்து வருகிறது. வெறும் ஐந்தே நாட்களில் 9 லட்சம் பயனர்கள் புதிதாக ‘கூ’ செயலியில் இணைந்துள்ளனர். மத்திய அரசுக்கும் ட்விட்டர் நிறுவனத்துக்கும் சமீபகாலமாக முரண் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் போராட்டம் தொடர்பாக சர்ச்சைக்குரிய தகவல்களைப் பதிவிட்டு வரும் கணக்குகளை முடக்காத விவகாரத்தில் ட்விட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. குற்றச் செயல்களைத் தூண்டும் விதமான பதிவுகளைக் கருத்துச் சுதந்திரம் என்று … Read more

திருமலை திருப்பதி தேவஸ்தான ஆலோசனை குழுவில் நியமிக்கப்பட்ட கதிர் ஆனந்த் எம்.பி. உள்ளிட்ட நிர்வாகிகள் பதவியேற்பு

சென்னை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் உள்ளூர் ஆலோசனை குழு துணை தலைவர்களாக அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் எம்.பி. உள்ளிட்டோரும், உறுப்பினர்களும் பதவியேற்றனர். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் சென்னை தியாகராய நகரில் உள்ள வெங்கடேசப் பெருமாள் கோயிலின் உள்ளூர் ஆலோசனை குழு துணை தலைவர்களாக அமைச்சர் துரைமுருகனின் மகனும், வேலூர் எம்.பி.யுமான கதிர் ஆனந்த் உட்பட 3 பேரையும், உறுப்பினர்களாக 21 பேரையும் நியமித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருந்தது. இந்நிலையில், இவர்கள் பதவியேற்கும் … Read more