மே 26 முதல் இந்தியாவில் ட்விட்டர், ஃபேஸ்புக் செயல்படுமா? 

ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் செயல்பட மூன்று மாதங்களுக்கு முன் இந்திய அரசு புதிய சட்டதிட்டங்களை அறிமுகம் செய்தது. அவற்றை அந்தத் தளங்கள் இன்னும் ஏற்காத நிலையில் அதற்கான கெடு மே 26-ம் தேதி (நாளை) முடிகிறது. இதனால் தொடர்ந்து இந்தத் தளங்கள் இயங்க அனுமதிக்கப்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இடைநிலை வழிமுறைகள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறை விதிகள், 2021இன் கீழ், இந்திய அரசிதழில் புதிய விதிமுறைகளைக் கடந்த பிப்ரவரி 25ஆம் தேதியன்று இந்திய … Read more

புதுச்சேரியில் தேர்தல் காலத்தில் வாங்கிய கரோனா பரிசோதனை சாதனங்கள் மாயம்: ஆளுநரிடம் புகார்

புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வாங்கிய கரோனா பரிசோதனை சாதனங்களில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள டிஜிட்டல் தெர்மா மீட்டர், பிபிஇ கிட், நான்கு சர்க்கர நாற்காலிகள் மாயமாகியுள்ளது. இதுபற்றி விசாரணை நடத்துமாறு ஆளுநரிடம் புகார் தரப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய டிஜிட்டல் தெர்மோ மீட்டர், பிபிஇ கிட், குப்பை தொட்டி மற்றும் நான்கு சக்கர நாற்காலிகள் ஆகியவற்றை ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் அளிப்பதற்காக நலவழித் துறையினர் மூலம் வாங்கி … Read more

விடைபெற்றார் லதா மங்கேஷ்கர் – அரசு மரியாதையுடன் உடல் தகனம் | பிரதமர் மோடி நேரில் அஞ்சலி

மும்பை: பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கரின் உடல், முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார். மும்பை சிவாஜி பார்க்கில் நடந்த இறுதி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பகத்சிங் கோஷியார், முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். திரைப் பிரபலங்கள் ஷாருக்கான், ஜாவேத் அக்தார், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரும் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். … Read more

புதிய விதிமுறைகள் சர்ச்சை: இந்திய அரசுக்கு எதிராக வாட்ஸ் அப் வழக்கு

புதிய தகவல் தொழில்நுட்ப சட்டங்களில் பயனர்களின் தனியுரிமை மீறல் தொடர்பாக, இந்திய அரசுக்கு எதிராக வாட்ஸ் அப் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இடைநிலை வழிமுறைகள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறை விதிகள், 2021-இன் கீழ் இந்திய அரசு புதிய சட்டதிட்டங்களை அறிமுகம் செய்தது. இந்தியாவில் செயல்படும் சமூக வலைதளங்கள் இதற்கு உடன்பட, இன்றுடன் (மே 26) கெடு முடிகிறது. இதனால் தொடர்ந்து இந்தத் தளங்கள் இயங்க அனுமதிக்கப்படுமா என்கிற கேள்வியெழுந்தது. இந்நிலையில் , … Read more

வீடியோ, போஸ்டரில் வைரல் முயற்சி: குழந்தைகள் பாதுகாப்புக்கு 'அரண்' – புதுக்கோட்டையில் கவனம் ஈர்க்கும் முன்னெடுப்புகள்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக ஆட்சியரின் ஆலோசனையில் தயாரிக்கப்பட்ட முன்மாதிரி விழிப்புணர்வு வீடியோ மற்றும் போஸ்டர்களானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தண்டனை அளிப்பதற்காக போக்ஸோ உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம், இதுபோன்ற குற்ற செயல்களைத் தடுக்கவும், பாதுகாப்பதற்காக அரசிடம் உள்ள சட்ட, திட்டங்கள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் புதுக்கோட்டை ஆட்சியர் … Read more

பஞ்சாப் தேர்தல் | சரண்ஜித் சிங் சன்னி முதல்வர் வேட்பாளர்: ராகுல் காந்தி அறிவிப்பு

பஞ்சாப் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னியை அறிவித்தார் ராகுல் காந்தி. “பஞ்சாப் மக்கள் தங்களின் முதல்வர் வேட்பாளர் ஓர் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். அவரால் தான் ஏழைகளின் வலியை உணர முடியும் என்று விரும்பினர். அவர்களின் விருப்பப்படி வேட்பாளரைத் தேர்வு செய்வது கடினமாகவே இருந்தது. சரண்ஜித் சிங் சன்னி தான் காங்கிரஸின் முதல்வர் வேட்பாளராக இருப்பார்” என்று ராகுல் காந்தி அறிவித்தார். பஞ்சாபில் பிப்ரவரி 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. … Read more

வானில் இன்று ஒரே நேரத்தில் நிகழும் ரத்த நிலவு, முழு சந்திர கிரகணம்: வெறும் கண்களால் காணலாம்

வானில் இன்று ஒரே நேரத்தில் ரத்த நிலவு, முழு சந்திர கிரகணம் என்னும் இரண்டு அரிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இவற்றை வெறும் கண்களால் காண முடியும். சந்திர கிரகணம் சூரியன் – பூமி – சந்திரன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, சூரிய ஒளி நிலவில் படாது. அந்த நிகழ்வே சந்திர கிரகணம் ஆகும். நடப்பாண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று (மே 26ஆம் தேதி) பவுர்ணமி நாளன்று நிகழவுள்ளது. மூன்று வகையான சந்திர கிரகணங்கள் … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: ஈபிஎஸ், ஓபிஎஸ் நாளை முதல் தீவிர பிரச்சாரம்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவுள்ள, வேட்பாளர்களை அதரித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் நாளை முதல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளனர். இது குறித்து அதிமுக அலுலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: “நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 19.2.2022 அன்று நடைபெற உள்ளதையொட்டி, அதிமுக சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி 7.2.2022 … Read more

அயோத்தி ரத யாத்திரைக்காக லதா மங்கேஷ்கர் பாடிய ராமர் பஜனையை மறக்கமுடியாது : எல்.கே.அத்வானி புகழஞ்சலி

அயோத்தியில் ரத யாத்திரைக்காக லதா மங்கேஷ்கர் பாடிய பாடலை மறக்கவே முடியாது என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரபலமான பாடகர்கள் பலர் இருந்தாலும், லதா ஜி தான் எனக்கு எப்போதும் பிடித்தமான பாடகர் லதா மங்கேஷ்கர் மட்டும் தான். அவருடன் நீண்ட நட்பு பாராட்டியதை நான் அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். உத்தரப் பிரதேசத்தில் சோம்நாத் நகரில் இருந்து அயோத்தி வரை நான் ராம் ரத யாத்திரை … Read more

ஆடியோ செய்திகளின் வேகத்தைக் கட்டுப்படுத்தலாம்: வாட்ஸ் அப்பில் புதிய வசதி அறிமுகம்

வாட்ஸ் அப்பில் பிறர் அனுப்பும் ஆடியோ செய்திகளின் வேகத்தை அதிகரித்துப் பயன்படுத்தும் வகையில், புதிய வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பிரபல குறுஞ்செய்தி நிறுவனமான வாட்ஸ் அப், ஃபேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமானது. இந்நிறுவனம் தன்னுடைய பயனர்களுக்கு அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் வாட்ஸ் அப்பில் நாம் அனுப்பும் ஆடியோ செய்திகளின் வேகத்தை அதிகரிக்கும் வகையில், புதிய வசதியை அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் … Read more