தனியார் மருத்துவ கல்லூரி, நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 50% எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு அரசு கட்டணம்: தேசிய மருத்துவ ஆணைய வழிகாட்டுதலில் தகவல்

தனியார் மருத்துவக் கல்லூரிமற்றும் நிகர்நிலை பல்கலைக் கழகங்களில், 50 சதவீத எம்பிபிஎஸ்மாணவர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது. கடந்த 3-ம் தேதி என்எம்சி வெளியிட்ட வழிகாட்டுதலில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இது அமலுக்கு வந்தால், நிகர்நிலை பல்கலைக்கழகங்களான டிஒய்பாட்டீல் அல்லது பாரதி வித்யாபீடத்தில் மருத்துவம் பயிலும் 50% மாணவர்கள் ஆண்டுக்கு ரூ.1.25 லட்சம் செலுத்தினால் போதுமானது. தற்போது நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் எம்பிபிஎஸ் படிப்புக்கான கட்டணம் … Read more

அடிப்படை 4ஜி மொபைல் மாடலை அறிமுகம் செய்த நோக்கியா

நோக்கியா மொபைல் போன்களைத் தயாரிக்கும் ஹெச் எம் டி குளோபல் நிறுவனம், புதிய அடிப்படை வசதிகள் கொண்ட 4ஜி மொபைல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. நோக்கியா 110 4ஜி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மாடலின் விலை ரூ.2,799. ஜூலை 24 முதல், மஞ்சள், ஆக்வா, கருப்பு ஆகிய நிறங்களில் அமேசான் இணையதளத்திலும், நோக்கியாவின் தளத்திலும் இந்த மொபைல்கள் கிடைக்கும். எஃப் எம் ரேடியோவை ஹெட்செட் இல்லாமல் கேட்கும் வசதி, எம்பி3 ப்ளேயர், 32 ஜிபி வரை மெமரி … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சீட் கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளின் வீடுகளுக்கே சென்று அமைச்சர்கள் சமாதானம்: கூட்டுறவு சங்கத் தேர்தலில் வாய்ப்பு அளிப்பதாக உறுதி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சீட் கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள திமுக நிர்வாகிகளின் வீடுகளுக்கே சென்று, அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகிகள் அவர்களை சமாதானப்படுத்தி வருகின்றனர். மேலும், கூட்டுறவு சங்கத் தேர்தல் உள்ளிட்டவைகளில் வாய்ப்பு அளிப்பதாக உறுதி யளித்து வருகின்றனர். தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன. இவற்றில் மொத்தமுள்ள 12,838 வார்டுகளுக்கான தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் நடக்கவுள்ளதால், … Read more

‘‘இந்தியா ஒரு ராஜாவால் வழிநடத்தப்படுகிறது’’- பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி கடும் சாடல்

புதுடெல்லி: இன்றைய இந்தியா ஒரு ராஜாவால் வழிநடத்தப்படுகிறது, அவர் யாருடைய பேச்சையும் கேட்க தயாரில்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக சாடினார். உத்தராகண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 14-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆம் ஆத்மி கட்சியும் தீவிர … Read more

ஒருமுறை பார்த்த பிறகு மறையும் புதிய வசதி: வாட்ஸ் அப் அறிமுகம்

புகைப்படங்கள், வீடியோக்களை ஒருமுறை பார்த்த பிறகு மறைந்து போகும் புதிய வசதியை வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது. வியூ ஒன்ஸ் (view once) என்ற பெயர் கொண்டிருக்கும் இந்த அம்சம் ஏற்கெனவே இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சில தளங்களில் உள்ளன. சோதனைக் கட்டத்தில் இருந்த இந்த வசதியை புதன்கிழமை அன்று அதிகாரபூர்வமாக அத்தனை வாட்ஸ் அப் பயனர்களுக்கும் அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம். வழக்கமாக புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பும் முறையில் எந்தவித மாறுதலும் இல்லை. கூடுதலாக, புகைப்படங்கள், வீடியோக்களுக்குக் கீழே … Read more

‘அனைவருடன் சேர்ந்து வாழ கற்றுக்கொள்ளுங்கள்’ – சர்ச் கட்டுவதற்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை

மதுரை: குமரி மாவட்டத்தில் சர்ச் கட்டுவதற்கு ஆட்சியர் வழங்கிய அனுமதியை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு, ‘அனைவருடன் சேர்ந்த வாழ கற்றுக்கொள்ளுங்கள்’ என உயர் நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது. குமரி மாவட்டம் மருதங்கோடு அருகேயுள்ள நெடுவிளையைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவர் , நெடுவிளையில் தங்கராஜ் என்பவருக்கு சர்ச் கட்டுவதற்கு மாவட்ட ஆட்சியர் வழங்கிய அனுமதியை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் பிறப்பித்த … Read more

'போக்குவரத்து நெரிசலால் 3% விவாகரத்து' – கலாய்க்கப்படும் தேவேந்திர பட்னாவிஸ் மனைவியின் கருத்து

மும்பை: மும்பையில் மூன்று சதவீத விவாகரத்துக்கு காரணம் மாநிலத்தின் டிராஃபிக் மிகுந்த போக்குவரத்து என மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மனைவி தெரிவித்துள்ளது, வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. சிவசேனா பெண் எம்.பி ஒருவரும் அவரை கலாய்த்துள்ளார். மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவி அம்ருதா ஃபட்னாவிஸ். இவர், வங்கியாளராக பணிபுரிந்துகொண்டே சினிமாவில் பாட்டு பாடுவது, அழகுக்கலைத் துறையிலும் கவனம் செலுத்திவருகிறார். அவ்வப்போது அரசியல் ரீதியாகவும் கருத்துகள் தெரிவித்து வருகிறார். குறிப்பாக, மகாராஷ்டிராவில் பாஜக … Read more

பெண்களின் மனநிலையை பாதிக்கும் இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் இளம்பெண்களின் மனநிலையை பாதிப்பதாக ஃபேஸ்புக் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளம் தலைமுறைகளிடத்தில் அதிக அளவில் பயன்பாட்டில் இருக்கும் சமூக வலைதளங்களில் ஒன்று இன்ஸ்டாகிராம். இதைப் பயன்படுத்துபவர்களில் 40%க்கும் மேலானோர் 20 வயதுக்குக் குறைவானவர்கள். இந்த நிலையில் சமீபத்தில், ஃபேஸ்புக் நிறுவனம் இன்ஸ்டாகிராம் சார்ந்து ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது. அந்த ஆய்வின் முடிவுகள்தான் தற்போது இன்ஸ்டாகிராம் பயன்பாடு குறித்த கேள்வியை அதிகரித்துள்ளது. அதாவது, இன்ஸ்டாகிராம் இளம்பெண்கள் தங்களின் உடல், அழகு, தோற்றம் … Read more

நீட் விலக்கு மசோதா: பிப்.8-ல் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம்

சென்னை: நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவை மீண்டும் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறுவதற்காக பிப்.8-ல் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக ஏழை, எளிய மாணவர்களை பெரிதும் பாதிக்கும் என உணர்ந்த நமது முதல்வர், கடந்தாண்டு செப்.13-ம் தேதி நீட் தேர்வு தமிழகத்துக்கு தேவையில்லை என்பதை அறிந்து அதற்கு ஒரு சட்டமுன்வடிவினை கொண்டு வந்தார். சட்டமன்றத்தில் முழுமையாக விவாதிக்கப்பட்டு, ஒருமனதாக அந்த தீர்மானம் … Read more

‘‘வெட்கக்கேடானது’’- பிரதமர் மோடியை வரவேற்காமல் புறக்கணித்த தெலங்கானா முதல்வருக்கு பாஜக, காங்கிரஸ் கண்டனம்

ஹைதராபாத்: பிரதமர் மோடியை விமான நிலையத்தில் வரவேற்காமல் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் புறக்கணித்த நிலையில், அரசியல் சட்டத்தின் நெறிமுறைகளை மீறுவது கேசிஆரின் செயல் வெட்கக்கேடானது என பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. ஹைதராபாத்தில் நிறுவப்பட்டுள்ள ராமானுஜரின் 216 அடி உயர ‘சமத்துவ சிலை’ திறப்பு விழாவில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியை விமான நிலையம் வந்தார். ஆனால், பிரதமரை வரவேற்க தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் விமான நிலையம் வரவில்லை. ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய சுற்றுலாத்துறை … Read more