கரோனா தொற்றால் பிரிட்டன் சுகாதார கட்டமைப்பு செயலிழப்பு?- உதவிக்கு ராணுவம் அழைப்பு

லண்டன்: பிரிட்டனில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சுகாதார கட்டமைப்பே செயலிழக்கும் அளவுக்கு சூழல் செல்வதால் அவர்கள் உதவிக்கு ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் 70 சதவீதம் பேர் தடுப்பூசியை முழுமையாகச் செலுத்திவிட்டனர், பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வரும் நிலையில் அங்கு 3-வது அலை பீதியில் ஆழ்த்தியுள்ளது. பிரிட்டனில் ஒமைக்ரான் பரவல் அச்சத்தால் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தொடர்ந்து 2-வது ஆண்டாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. எனினும் பிரிட்டனில் கரோனா தொற்று 90 ஆயிரத்துக்கும் … Read more

பெயரை மாற்றி ரீ பிராண்டிங்குக்கு தயாராகிறதா பேஸ்புக்? அமெரிக்க ஆட்சியாளர்களின் அழுத்தம் காரணமா?

பேஸ்புக் சமூகவலைதளம் விரைவில் புதிய பெயருடன் ரீ பிராண்டிங்க்குக்கு ஆயத்தமாகி வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிகின்றன. சமூக வலைதள உலகின் ஜாம்பவான் பேஸ்புக். வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஆக்குலஸ் என இன்னும் பல பிரபல சமூக வலைதளங்களையும் வைத்துள்ளது. கடந்த அக்டோபர் 4 ஆம் தேதியன்று இந்தியா உள்பட உலகம் முழுவதும் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. 6 மணி நேரம் வரை இந்தத் தளங்கள் முடங்கின. இதுவே பேஸ்புக்கின் மிகப்பெரிய அவுட்டேஜாகக் … Read more

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 74,416 பேர் வேட்புமனு தாக்கல்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு இறுதி நாளான பிப்.4-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 74,416 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், 12,838 வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அட்டவணையினை 26.01.2022 அன்று தமிழ்நாடு மாநில தேர்தல் … Read more

ஹைதராபாத்தில் பிரமாண்ட ராமானுஜர் சிலை திறப்பு: பிரதமர் மோடி பங்கேற்பு

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நிறுவப்பட்டுள்ள வைணவ ஆச்சாரியார் ராமானுஜர் சிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஹைதராபாத்தை அடுத்துள்ள முச்சிந்தல் பகுதியில், வைணவ ஆச்சாரியார் ராமானுஜர் அவதரித்து 1000 ஆண்டு நிறைவுற்றதை கொண்டாடும் வகையில், சின்ன ஜீயர் ஆஸ்ரமத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ள இடத்தில் பத்ம பீடத்தின் மீது 216 அடிஉயரத்தில் ராமானுஜருக்கு பஞ்சலோக சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை இன்று திறந்து வைக்கப்பட உள்ளது. இவ்விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். ரூ.1,000 … Read more

குலுங்கிய வீடுகள்: சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சீனாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆகப் பதிவானது. இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் தரப்பில், “சீனாவின் குவிங்ஹாய் மாகாணத்தில் சனிக்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ஸின்யிங் நகரிலிருந்து 140 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது. இதன் ஆழம் 10 கி.மீ. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆகப் பதிவானது” என்று தெரிவிக்கப்பட்டது. நிலநடுக்கம் காரணமாகக் கட்டிடங்கள் குலுங்கியதாகவும், உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும் சீன … Read more

பழைய கூகுள் குரோமில் பாதுகாப்பு ரீதியாக ஆபத்து: மத்திய அரசு எச்சரிக்கை

கூகுள் குரோம் பிரவுசரில் பாதுகாப்பு ரீதியாக பல சிக்கல்கள் இருப்பதாகவும், அதைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் கூகுள் குரோம் பயன்பாட்டாளர்களின் கணினிக்குள் ஊடுருவ அதிக வாய்ப்பு இருப்பதாகவும், இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் ஒரு பகுதியான இந்திய கணினி அவசரநிலை பதிலளிப்புக் குழு கூகுள் குரோம் பயன்பாட்டா ளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆபத்திலிருந்து தப்பிக்க, பயன்பாட்டாளர்கள் கூகுள் குரோமை புதிய வெர்சனுக்கு அப்டேட் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. கூகுள் குரோம் பிரவுசரில் பாதுகாப்பு … Read more

புதுச்சேரியில் 344 பேருக்கு கரோனா தொற்று உறுதி; ஒருவர் உயிரிழப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் புதிதாக இன்று 344 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்தார். நேற்று 431 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. 3 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் உதயகுமார் இன்று (பிப். 5) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”புதுச்சேரி மாநிலத்தில் 2,254 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி –224, காரைக்கால்- 74, ஏனாம்- 39, மாஹே- 7 என மொத்தம் 344 (15.26 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று … Read more

ராமானுஜர் சிலை திறப்பு: பிரதமருக்கு வரவேற்பு; தெலங்கானா முதல்வர் புறக்கணிப்பு

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நிறுவப்பட்டுள்ள ராமானுஜரின் 216 அடி உயர ‘சமத்துவ சிலை’ திறப்பு விழாவில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியை விமான நிலையத்தில் வரவேற்காமல் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் புறக்கணித்தார். ஹைதராபாத்தை அடுத்துள்ள முச்சிந்தல் பகுதியில், வைணவ ஆச்சாரியார் ராமானுஜர் அவதரித்து 1000 ஆண்டு நிறைவுற்றதை கொண்டாடும் வகையில், சின்ன ஜீயர் ஆஸ்ரமத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ள இடத்தில் பத்ம பீடத்தின் மீது 216 அடி உயரத்தில் ராமானுஜருக்கு பஞ்சலோக சிலை … Read more

ராணுவத்தில் ஓர் அங்கமாக தற்கொலைப் படை: ஐஎஸ் அச்சுறுத்தலால் தலிபான் முடிவு

ஆப்கானிஸ்தான் ராணுவத்தில் ஓர் அங்கமாக தற்கொலைப் படையை இணைக்க தலிபான் அரசு முடிவெடுத்துள்ளது. ஐ.எஸ் அச்சுறுத்தலின் எதிரொலியாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறத் தொடங்கின. ஆகஸ்ட் மத்தியில் ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. தலிபான் ஆட்சி அமைத்த பின்னர் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள், விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. நிர்வாக ரீதியாகவும் பல மாற்றங்களை தலிபான்கள் செய்துவருகின்றனர். அந்த வகையில், ஆப்கன் ராணுவ நிர்வாகத்தில் தற்போது முக்கிய முடிவை … Read more

போலியான மைக்ரோசாப்ட் மென்பொருள் விற்பனை: சிபிசிஐடி போலீஸார் விசாரணை

சென்னை: கால்சென்டர்கள் நடத்தி, போலியான மைக்ரோசாப்ட் மென்பொருளை விற்பனை செய்தவர்களைப் பிடித்து, சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்களில் மைக்ரோசாப்ட் மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இந்த மைக்ரோசாப்ட் மென்பொருளை போலியாகத் தயாரித்து, குறைந்து விலைக்கு சந்தைகளில் விற்பனை செய்கின்றனர். பலர் இதை வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். போலியான மென்பொருளை விற்பனை செய்வதற்காக சில கும்பல்கள் கால்சென்டர்கள் நடத்தி, வாடிக்கையாளர்களிடம் பேசி, அவர்களை சம்மதிக்க வைக்கின்றனர். சில பிபிஓ நிறுவனங்கள்கூட இந்த போலியான மென்பொருளைப் பயன்படுத்தி வருகின்றன. … Read more