சரியான வாதங்கள், தெளிவான கருத்துகள்… சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் மீண்டும் நீட் விலக்கு மசோதா: அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு

சென்னை: நீட் தேர்வு தொடர்பாக ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துகள் குறித்து தெளிவாக விவாதித்து, சரியான வாதங்களை எடுத்துரைத்து, நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதற்காக ஆளுநருக்கு மீண்டும் அனுப்புவதற்காக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவது தொடர்பான சட்டமுன்வடிவை தமிழக … Read more

கரோனா தொற்றால் இறந்தவர் குடும்பங்களுக்கு – விண்ணப்பித்த 10 நாட்களுக்குள் இழப்பீடு: மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: கரோனா தொற்றால் இறந்தவர் குடும்பங்களுக்கு விண்ணப்பம் வந்த 10 நாட்களுக்குள் இழப்பீடு வழங்க வேண்டும் என அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, பி.வி.நாகரத்னா ஆகியோரைக் கொண்ட அமர்வு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி கள் பிறப்பித்த உத்தரவில் கூறி யிருப்பதாவது: கரோனா தொற்றால் இறந்தவர் குடும்பங்களுக்கு … Read more

எதிர்ப்புக்கு பணிந்த அமெரிக்க நிறுவனம்: நெல்சன் மண்டேலா இருந்த சிறைச்சாவி ஏலம் நிறுத்தம்

நியூயார்க்: நிறவெறிக்கு எதிராக போராடிய தலைவர் நெல்சன் மண்டேலா அடைக்கப்பட்டிருந்த சிறையினுடைய சாவியின் ஏலம் நிறுத்தப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் நிலவிய நிறவெறிக்கு எதிராக போராடி 27 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் நெல்சன் மண்டேலா. இந்த 27 ஆண்டுகளில் 18 ஆண்டுகள் ரோபன் தீவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சில தினங்கள் முன் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் செயல்பட்டு வரும் கர்ன்சேஸ் (Guernsey’s) என்கிற ஏல நிறுவனம், வரும் 28ம் தேதி மண்டேலா தங்கியிருந்த சிறை அறையின் சாவி … Read more

ஆன்லைன் பரிவர்த்தனையில் புதிய மாற்றங்கள் என்னென்ன?

இந்தியாவில் சுமார் 100 கோடி டெபிட் கார்டுகளும், கிரெடிட் கார்டுகளும் புழக்கத்தில் உள்ளன. இதன் மூலம் தினமும் கிட்டத்தட்ட 1.5 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுவதோடு ரூ.4,000 கோடி அளவுக்கான வர்த்தகம் நடைபெற்றுவருவதாக சமீபத்தில் நடந்து முடிந்த சிஐஐ (CII) கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, பெருந்தொற்றுக் காலத்தில் ஆன்லைன் வழியான பரிவர்த்தனையானது பலமடங்கு அதிகரித்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆன்லைன் மூலமான பரிவர்த்தனைகள் அதிகரித்துவருவதுபோலவே அது தொடர்பான மோசடிகளும் அதிகரித்துவருகின்றன என்பதைப் பயன்பாட்டாளர்களான நீங்களும் அறிந்திருப்பீர்கள். இதற்குத் தீர்வு காணும் … Read more

ஒரே நாளில் இரு தேர்வுகள்… – கணிதப் பாடத் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் ஒத்திவைக்க அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: கணிதப் பாடத்திற்கான முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பல்கலைக்கழக, கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசியத் தகுதித் தேர்வில் (NET) கணிதப் பாடத் தேர்வு பிப்ரவரி 16-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதே நாளில், அதே கணிதப் பாடத்திற்கான முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் … Read more

டெல்லி, காஷ்மீரில் கடும் நில அதிர்வு

டெல்லி: காஷ்மீர், டெல்லி பகுதிகளில் இன்று கடும் நில அதிர்வு ஏற்பட்டது. எனினும், இந்த நில அதிர்வால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இது குறித்து தேசிய புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், “ஆப்கானிஸ்தான் – தஜிகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) காலை 9.45 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கமாக காஷ்மீர், டெல்லி பகுதிகளில் கடும் நில … Read more

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் வெளியே வந்தால் கைது: பிலிப்பைன்ஸ் அதிபர்

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்தால் கைது செய்யப்படுவார்கள் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் தெரிவித்துள்ளார். உலக அளவில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. உலக சுகாதார அமைப்பு 2021 டிசம்பர் 27-ம் தேதி முதல் 2022 ஜனவரி 2-ம் தேதி வரையிலான உலக அளவிலான கரோனா தொற்று குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த வாரத்தில் உலக அளவில் கரோனா பரவல் திடீரென 71 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம், உயிரிழப்பு 10 … Read more

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி: விண்ணை அளக்கும் கண்

நாசாவின் மைல்கல்லாகப் பார்க்கப்படும் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (James Webb Space Telescope) கிறிஸ்துமஸ் தினத்தன்று விண்ணில் ஏவப்பட்டது. பால்வீதியில், பூமியைப் போன்று உயிர் இருந்த/இருப்பதற்குச் சாத்தியமான புறக்கோள்கள் (exoplanets) இருக்கின்றனவா, பெருவெடிப்பிலிருந்து முதல் விண்மீன் கூட்டங்கள் எப்படி உருவாகின போன்ற பல கேள்விகளுக்கு இத்தொலைநோக்கி பதில் சொல்லும். ஐரோப்பிய மற்றும் கனடிய விண்வெளி நிறுவனங்கள் இத்திட்டத்துக்குப் பங்களித்தன. தொலைநோக்கி செயல்படும் முறை ‘தொலைநோக்கி’ என்னும் வார்த்தையிலிருந்து தொலைவில் இருக்கும் பொருட்களைப் ‘பார்க்க’ உதவும் கருவி … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: ஸ்டாலின் நாளை முதல் காணொலி பிரச்சாரம்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாளை முதல் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். வரும் 19-ம் தேதி அனைத்து மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், வேட்புமனு தாக்கல் செய்துள்ள வேட்பாளர்கள் அனைவரும் தங்கள் பகுதியில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், திமுக … Read more

இந்தியாவில் புதிதாக 1.27 லட்சம் பேருக்கு கரோனா; பாசிட்டிவிட்டி 7.9% ஆக சரிவு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,27,952 பேர் (நேற்றைய பாதிப்பு 1,49,394) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாசிட்டிவிட்டி 7.9% ஆகக் சரிந்துள்ளது ஆறுதல் அளிப்பதாக உள்ளது. நாட்டில் தினசரி கரோனா பாசிட்டிவிட்டி 7.98% ஆகவும், வாராந்திர பாசிட்டிவிட்டி 11.21% ஆகவும் இருப்பது கவனிக்கத்தக்கது. கரோனாவில் குணமடைவோர் விகிதம் 95.64 % ஆக உள்ளது. கடந்த 24 மணி நேர நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு: > கடந்த 24 … Read more