வாட்ஸ் அப் கணக்கை கணிணியில் இணைக்க கூடுதல் பாதுகாப்பு அம்சம் அறிமுகம்

வாட்ஸ் அப் கணக்குகளை கணிணி மூலம் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கணிணியோடு தங்கள் வாட்ஸ் அப் கணக்கை இணைக்கும் பயனர்களுக்காக கூடுதல் பாதுகாப்பு அம்சத்தை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இனி வாட்ஸ் அப் வெப் அல்லது டெஸ்க்டாப்பில் உங்களது கணக்கை இணைக்க, க்யூ ஆர் கோட் (QR code) ஸ்கேன் செய்வதற்கு முன்னர், முகத்தையோ, விரல் ரேகையையோ அடையாளமாக வைத்து மொபைலை அன்லாக் செய்ய வேண்டும். இப்படி இணைக்கப்பட்ட பிறகு யார் கணிணியில் அந்தக் கணக்கை … Read more

குமாரபாளையத்தில் பட்டு ஜவுளி ரகம் உற்பத்தி நிறுத்தம்: தினமும் ரூ.5 கோடி வர்த்தகம் பாதிப்பு; 50,000+ பேர் வேலையிழப்பு

நாமக்கல்: குமாரபாளையத்தில் பட்டு ஜவுளி ரக உற்பத்தி நிறத்தத்தால் நாள்தோறும் நடைபெறும் ரூ.5 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்ட்டுள்ளதுடன், 50,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர் என குமாரபாளையம் கைத்தறி பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் நாகராஜன் தெரிவித்தார். குமாரபாளையத்தில் 3,000 மேற்பட்ட கைத்தறிக் கூடங்கள் உள்ளன. இங்கு கைத்தறி ஆடை மற்றும் பட்டு ஜவுளி ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. நேர்த்தியான முறையில் பட்டு ஜவுளி ரகங்கள் உற்பத்தி செய்யப்படுவதால் இவற்றுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு … Read more

ஹிஜாப் விவகாரம் | கர்நாடகாவில் காவித் துண்டுக்கு எதிராக நீலத் துண்டுடன் கோஷம் எழுப்பிய மாணவர்கள்

பெங்களூரு: கர்நாடகாவில் காவித் துண்டு அணிந்து வந்த மாணவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தலித் மாணவர்கள் நீல நிறத் துண்டை அணிந்து ‘ஜெய் பீம்’ கோஷம் எழுப்பினர். கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கல்லூரி நிர்வாகம் தங்களது உடை … Read more

2 ஆண்டுகளுக்குப் பிறகு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்த ஆஸ்திரேலியா

கான்பரா: இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் சுற்றுலாப் பயணிகளுக்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. கரோனா பரவல் காரணமாக ஆஸ்திரேலியாவில் இரண்டு ஆண்டுகளாக சுற்றுலாப் பயணிகளை அந்நாட்டு அரசு அனுமதிக்கவில்லை. கரோனாவை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்தது. இதற்காக ராணுவத்தையும் அரசு பயன்படுத்தியது. இந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, இரண்டு டோஸ் கரோனா தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட சுற்றுலாப் பயணிகள் வரும் பிப்ரவரி … Read more

இனி வாட்ஸ் அப் உரையாடல்களை டெலிகிராமிலும் மாற்றிக் கொள்ளலாம்

வாட்ஸ் அப் உரையாடல் பதிவுகளை டெலிகிராம் செயலியிலும் மாற்றிக்கொள்ளும் புதிய வசதி அறிமுகமாகியுள்ளது. வாட்ஸ் அப் செயலியில் புதிய தனியுரிமைக் கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதன் பாதுகாப்பு குறித்து பல பயனர்களிடையே கேள்வியெழுந்தது. இதனால் வாட்ஸ் அப்புக்கு மாற்றாக இருக்கும் மற்ற உரையாடல் செயலிகளை மக்கள் நாட ஆரம்பித்தனர். இதில் டெலிகிராமும் ஒரு செயலி. கிட்டத்தட்ட 52.5 கோடி பேர் டெலிகிராமை தற்போது பயன்படுத்துகின்றனர். வாட்ஸ் அப்பில் உரையாடிவிட்டு, புதிதாக டெலிகிராமில் உரையாட ஆரம்பிக்கும்போது பழைய … Read more

கணினித் தமிழ் விருதுக்கு பிப்.28 வரை விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு

சென்னை: சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களுக்கு முதலமைச்சர் கணினித் தமிழ் விருது பெறுவதற்கான விண்ணப்பங்கள் அனுப்ப இம்மாதம் 28 வரை கடைசி தேதி நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, உலகமெலாம் கணினி வழித் தமிழ் மொழி பரவச் செய்யும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக ‘முதலமைச்சர் கணினித் … Read more

ஓவைசி ஜி… 'இசட்' பிரிவு பாதுகாப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் – மாநிலங்களவையில் அமித் ஷா வலியுறுத்தல்

புதுடெல்லி: ஹைதராபாத் மக்களவை எம்.பி அசாதுதீன் ஒவைசியை மத்திய அரசின் ‘இசட்’ பிரிவு பாதுகாப்புச் சலுகையை ஏற்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டுக்கொண்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் கடந்த வாரம் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு காரில் டெல்லி திரும்பிக் கொண்டிருந்த ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசியின் கார் மீது 2 பேர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் கார் சேதமடைந்தது. வேறொரு காரில் ஏறி ஒவைசி டெல்லி சென்றார். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணையையும் … Read more

‘‘ஒட்டுவேலை’’- லோகோவை மாற்றிய கூகுள் குரோம்: நெட்டிசன்கள் விமர்சனம்

கூகுள் குரோம் 8 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தனது லோகோவை மாற்றியுள்ள நிலையில் பழைய மற்றும் புதிய லோகோவிற்கும் வித்தியாசம் தெரியவில்லை என்று நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக, கூகுள் குரோம் தனது லோகோவை மாற்றியுள்ளது. லோகோவின் நிறங்கள் எதுவும் மாற்றப்படவில்லை. இதில் உள்ள சிகப்பு, நீலம், பச்சை மற்றும் மஞ்சள் போன்ற நிறங்களின் சேர்க்கை சற்று அதிகப்படுத்தப்பட்டு நிழல்கள் நீக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக லோகோ அதிக மாற்றங்கள் … Read more

நீட் தேர்வு | நாடகத்தை நிறுத்திவிட்டு உச்ச நீதிமன்றத்தை நாடுங்கள் – தமிழக அரசுக்கு தமாகா வலியுறுத்தல்

சென்னை: சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் போன்ற நாடகங்களை நிறுத்திவிட்டு நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடவேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி தலைவர் எம்.யுவராஜா கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “திமுக அரசு தங்களது தேர்தல் வாக்குறுதிகளை 90% நிறைவேற்றப்படாத அரசாக கடந்த 9 மாத காலமாக செயல்பட்டுக் கொண்டு வருகிறது. குறிப்பாக தேர்தலுக்கு முன்பாக திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக முன்னணி தலைவர்கள் முதல் சட்டப்பேரவை கூட்டத் … Read more

விளக்கம் தேவையில்லை; மன்னிப்பு கோருங்கள்: ஹூண்டாய் நிறுவனத்துக்கு சிவசேனா எம்.பி. கெடுபிடி

காஷ்மீர் பிரிவினவாதிகளை ஆதரித்து பாகிஸ்தானைச் சேர்ந்த ஹூண்டாய் மோட்டார் டீலர் ஒருவர் பதிவிட்ட ட்வீட் வைரலான நிலையில் அது குறித்து ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் அளித்துள்ள விளக்கம் போதுமானதாக இல்லை எனக் கூறி மன்னிப்பு கோர வலியுறுத்தியுள்ளார் சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி. முன்னதாக @hyundaiPakistanOfficial என்ற ட்விட்டர் பக்கத்தில், காஷ்மீரின் விடுதலைக்காகப் பிரார்த்தனை செய்கிறோம். காஷ்மீர் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்தவர்களை நினைவுகூர்கிறோம் என்று பதியப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்தியளவில் #BoycottHyundai ட்ரெண்டானது. இந்திய அளவில் ஹூண்டாய் தயாரிப்புகளுக்கு … Read more