ஆண் குழந்தை பிறக்க பாகிஸ்தான் கர்ப்பிணியின் தலையில் ஆணியை அடித்த ஹீலர்

ஆண் குழந்தை பிறக்க பாகிஸ்தான் கர்ப்பிணியின் தலையில் ஆணியை அடித்த ஹீலரை போலீஸார் தேடி வருகின்றனர். பெஷாவர் நகரின் வடமேற்கு பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண் ஒருவர் வந்தார். அவர் தனது தலையில் இருந்த ஆணியை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரினார். அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் தலையில் ஆணி எப்படி வந்தது எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போது அவர், “நான் கர்ப்பமாக இருக்கிறேன். இந்தப் பிரசவத்தில் ஆண் குழந்தை பிறக்க சடங்குகளைச் செய்யுமாறு … Read more

ஃபேஸ்புக் மெஸஞ்சர் சேவையில் புதிய அம்சங்கள் அறிமுகம்

ஃபேஸ்புக்கின் மெஸஞ்சர் சேவையில் புதிய தோற்றம், உரையாடலுக்கான தனி வண்ணம் உள்ளிட்ட புதிய அம்சங்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. தனது மெஸஞ்சர் சேவையில் அவ்வப்போது புதிய அம்சங்களை ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்கிறது. அப்படி சமீபத்தில் சில வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. “உலகளவில் நூறு கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டிருக்கும் எங்கள் சேவையின் நோக்கம், ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள பொதுவான ஒரு வழியாக இருக்க வேண்டும் என்பதுதான். தனிப்பட்ட முறையில் ஒருவரோடு ஒருவர் தொடர்பில் இருக்கும் … Read more

கிராம சபை போல ஏரியா சபை, விலையில்லா தரமான குடிநீர்… – மநீம வாக்குறுதிகளின் முக்கிய அம்சங்கள்

சென்னை: தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குறுதிகளை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். அதில், அனைத்து வீடுகளுக்கும் விலையில்லா தரமான குடிநீர், மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் அவலநிலைக்கு முற்றுப்புள்ளி என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. மநீம வாக்குறுதிகள்: அனைத்து வீடுகளுக்கும் விலையில்லா தரமான குடிநீர், முறையான மழைநீர் சேகரிப்பு அமைப்பு உறுதி செய்யப்படும். காற்றிலிருந்து தண்ணீர் எடுக்கும் தொழில்நுட்பத்தை பரவலான பயன்பாட்டிற்கு கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்படும். > கிராம சபை போல, … Read more

’10 நாட்களில் விவசாயக் கடன் ரத்து’ – உ.பி.யில் 3-வது தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிரியங்கா வாக்குறுதி

லக்னோ: உத்தரப் பிரதேசத் தேர்தலையொட்டி காங்கிரஸின் மூன்றாவது தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிரியங்கா காந்தி, ”காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த 10 நாட்களிலேயே விவசாயக் கடன் ரத்து செய்யப்படும்” என்று வாக்குறுதி அளித்தார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பிரியங்கா காந்தி பேசியது: “நாங்கள் இதுவரை மூன்று அறிக்கைகள் வெளியிட்டுள்ளோம். ஒன்று பெண்களுக்கானது, இரண்டாவது இளைஞர்களுக்கானது. இதோ இப்போது மூன்றாவது அறிக்கையை வெளியிட்டுள்ளோம். உத்தரப் பிரதேசத்தில் வேலைவாய்ப்பின்மையும், பணவீக்கமும்தான் மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. மாநிலத்தில் 20 லட்சம் … Read more

லாரி ஓட்டுநர்களின் போராட்டம் நிறுத்தப்பட வேண்டும்: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆவேசம்

ஒட்டாவா: கனடாவில் கட்டாய கரோனா தடுப்பூசிக்கு எதிராக லாரி ஒட்டுநர்கள் நடத்தும் போராட்டம் நிறுத்தப்பட வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து கனடா நாடாளுமன்றத்தில் ஜஸ்டின் ட்ருடோ பேசும்போது, ”கரோனா பெருந்தொற்றால் அனைவரும் சோர்வடைந்துள்ளனர். குறிப்பாக சுகாதாரப் பணியாளர்கள். நாம் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க கடமைப்பட்டுள்ளோம். கரோனா தடுப்பூசிக்கு எதிரான லாரி ஓட்டுநர்களின் போராட்டம் நமது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கிறது, கனடா வாழ் மக்களின் அன்றாட வேலையை பாதிக்கிறது, நமது ஜனநாயகத்தை பாதிக்கிறது. … Read more

ஐபோன் 12 வரவால் குறைந்த ஐபோன் 11 விலை: இலவசமாக ஏர்பாட் தர ஆப்பிள் நிறுவனம் முடிவு

ஐபோன் 12 வரிசை மொபைல்களின் அறிமுகத்தைத் தொடர்ந்து ஐபோன் 11 வரிசை மொபைல்களின் விலையை ஆப்பிள் நிறுவனம் குறைத்துள்ளது. ஐபோன் 11, 64 ஜிபி அளவுடைய மொபைல் ரூ.54,900, 128 ஜிபி அளவு ரூ.59,900 மற்றும் 256 ஜிபி அளவு ரூ.69,900 ஆகிய விலைகளில் தற்போது கிடைக்கிறது. ஐபோன் எக்ஸ்ஆர் மாடல் 64 ஜிபி அளவு ரூ.47,900க்கும், 128 ஜிபி அளவு ரூ.52,900 என்றும் குறைந்துள்ளது. ஐபோன் எஸ்ஈ 2020 64 ஜிபி மாடல் தற்போது ரூ.39,900க்கும், … Read more

புதுச்சேரியில் மூன்றாம் அலை தாக்கம்: கடந்த 40 நாட்களில் 74 பேர் உயிரிழப்பு

புதுச்சேரி: ஒமைக்ரான் அச்சுறுத்தல் மற்றும் கரோனா பரவல் காணமாக புதுச்சேரியில் கடந்த 40 நாட்களில் மட்டும் 74 பேர் உயிரிழந்திருப்பதாக புதுச்சேரி சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: “புதுவையில் நேற்று 2,322 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 198 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுச்சேரியில் தற்போது 3,086 பேர் கரோனா தொற்றுடன் உள்ளனர். புதுவையில் 538 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர். புதுச்சேரியில் ஒரே … Read more

பிகினி, ஹிஜாப், முக்காடு.. ஆடை எதுவாக இருந்தாலும் அது பெண்ணின் உரிமை: பிரியங்கா காந்தி

பிகினி, ஹிஜாப், முக்காடு என எந்த வகை ஆடையாக இருந்தாலும் அதில் எதை அணிவது என்பது பெண்ணின் உரிமை என காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் (முக்காடு), பருதா (முகத்திரை), புர்கா (முழு நீள உடை) அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்குஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதால், 6 முஸ்லிம் மாணவிகள் தொடர் போராட்டத்தில் இறங்கினர். இதை கண்டித்து … Read more

கரோனா தடுப்பூசி குறித்த தவறான வீடியோக்கள் நீக்கப்படும்: யூடியூப் அறிவிப்பு

கோவிட்-19 தடுப்பூசி குறித்த தவறான தகவல்களை அளிக்கும் வீடியோக்கள் நீக்கப்படும் என்று யூடியூப் அறிவித்துள்ளது. பெருந்தொற்றுக் காலத்தில் தடுப்பூசி குறித்து தவறான தகவல்கள் மற்றும் கோட்பாடுகளை வழங்கும் வீடியோக்கள் இனி இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக யூடியூப் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, ”உள்ளூர் சுகாதார அதிகாரிகள் அல்லது உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுக்கு எதிராக இருக்கும் அல்லது தவறான தகவல்களை அளிக்கும் வீடியோக்கள் தடை செய்யப்படும். அதேபோல கோவிட்-19 தடுப்பூசி குறித்த தவறான தகவல்களை அளிக்கும் … Read more

நெருங்கி வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: சுவர் விளம்பரத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதிப்பு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சுவர்களில் தேர்தல் விளம்பரம் மற்றும் சுவரொட்டிகள் ஒட்ட தடை விதித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: “தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி பொது இடங்களில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தேர்தல் தொடர்பான பதாகைகளை வைத்தல், கொடிகளை நாட்டுதல், சின்னங்களை வரைதல், சுவரொட்டிகளை ஒட்டுதல் போன்றவற்றை மேற்கொள்ளக்கூடாது. இதுதொடர்பான வரைமுறைகளை … Read more