சாம்சங் மொபைல் விற்பனை சரிவு: தெற்காசியாவில் முதலிடம் பிடித்த ஓப்போ

தெற்காசிய ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் முதலிடத்திலிருந்த சாம்சங் நிறுவனம், இரண்டாவது காலாண்டு முடிவில் இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஏப்ரல் – ஜூன் காலகட்டத்தில் 20.3 சதவீத சந்தை பங்குடன் ஓப்போ நிறுவனம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதே காலகட்டத்தில் சாம்சங் நிறுவனத்தின் சந்தைப் பங்கு 19.5 சதவீதம் என்கிற நிலையில் உள்ளது. மேலும் இந்த பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் சீன ஸ்மார்ட்ஃபோன் நிறுவனங்களே இடம்பிடித்துள்ளன. மூன்றாவது இடத்தில் விவோ, நான்கில் ஸியோமி மற்றும் ஐந்தாவது இடத்தில் ரியல்மீ ஆகிய … Read more

பிப்ரவரி 10: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 10) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,28,068 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண் மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் பிப்.9 வரை பிப்.10 பிப்.9 … Read more

‘விற்றோம், விற்கிறோம், விற்போம்’ என்பதைத் தவிர வேறு சாதனை மத்திய அரசிடம்  இருக்குமா? – நவாஸ்கனி கேள்வி

புதுடெல்லி: மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் எம்.பி.யான கே.நவாஸ்கனி உரையாற்றினார். அதில் அவர், ‘விற்றோம், விற்கிறோம், விற்போம்’ என்பதைத் தவிர வேறு சாதனை மத்திய அரசிடம் இருக்குமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து நாடாளுமன்ற மக்களவையில் ராமநாதபுரம் தொகுதி எம்.பி.யும் முஸ்லீம் லீக்கின் மாநிலத் துணைத்தலைவருமான கே.நவாஸ்கனி கூறியதாவது: இந்த அரசின் நிதிநிலை அறிக்கை வழக்கம்போல வார்த்தை ஜாலங்களாலும், ஏமாற்றங்களாலும் நிறைந்தே காணப்பட்டதை பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன். கார்ப்பரேட்டுகளின் … Read more

நோக்கியா 3310 மொபைலுக்கு வயசு 20: ட்விட்டரில் ரசிகர்கள் நினைவுப் பகிர்வு

மிகப் பிரபலமான நோக்கியா 3310 மாடல் மொபைல் அறிமுகமாகி இன்றோடு 20 வருடங்கள் ஆகின்றன. இந்த மொபைலின் ரசிகர்கள் பலரும் இதுகுறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். செப்டம்பர் 1, 2000 அன்று நோக்கியா 3310 அறிமுகம் செய்யப்பட்டது. அடர் நீல நிறத்தில், பச்சை ஒளித் திரையில் இருந்த இந்த மொபைலில் ஸ்னேக் என்கிற விளையாட்டும் மிகப் பிரபலமானது. 2003-ம் ஆண்டு, மேலே சிறிய டார்ச்சுடன் கூடிய 1100 அறிமுகமானது. விற்பனைக்கு வந்த காலத்தில் அதிகம் விற்ற … Read more

பிப்ரவரி 10: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 10) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,28,068 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more

மவுலானா ஆஸாத் கல்வி நிறுவனத்தின் சிறுபான்மையினர் உதவித்தொகை ரூ.70 கோடியிலிருந்து வெறும் 1 லட்சமாகக் குறைக்கப்பட்டது ஏன்? – செந்தில்குமார் கேள்வி

புதுடெல்லி: மக்களவையின் திமுக எம்.பி.யான டி.என்.வி.செந்தில்குமார் நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கை விவாதத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், டெல்லியின் மவுலானா அபுல்கலாம் ஆஸாத் கல்வி நிறுவனத்தின் சிறுபான்மையினருக்கான உதவித்தொகையை ரூ.90 கோடியிலிருந்து வெறும் ரூ.1 லட்சமாகக் குறைத்தது ஏன்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தருமபுரி நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யான செந்தில்குமார் பேசியதாவது: கடுமையான தொற்று நோய்க்கு பிறகு மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொற்று நோய் விளைவாக பல நபர்கள் வேலை … Read more

ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்ட பப்ஜி விளையாட்டு

கூகுளின் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிளின் ஆப் ஸ்டோர் ஆகிய இரண்டு தளங்களிலிருமிருந்து பப்ஜி விளையாட்டு நீக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பப்ஜி (Player Unknown’s Battle grounds -PUBG) என்கிற விளையாட்டை இனி இந்தியாவில் ஆண்ட்ராய்ட் பயனர்கள், ஆப்பிள் போன் பயனர்கள் என யாரும் அதிகாரபூர்வமாகப் பதிவிறக்கம் செய்ய முடியாது. அதே நேரம் ஏற்கெனவே இன்ஸ்டால் செய்து விளையாடி வருபவர்களால் தொடர்ந்து விளையாட முடியும். ஆனால் அவர்களால் அப்டேட் செய்ய … Read more

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளைக் காப்பாற்றியது யார்? – பழனிசாமி மீது ஸ்டாலின் தாக்கு

“பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை போன்ற கொடுமைகளை நடக்கவிட்டு வேடிக்கை பார்த்ததார் பழனிசாமி. அந்தப் பாலியல் குற்றவாளிகளைக் காப்பாற்றியது யார்… பழனிசாமிதானே?” என்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். மேலும், “2011-ஆம் ஆண்டே நீட் விவகாரத்துக்கு காங்கிரஸ் ஆட்சி முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. ஆனால் அதை 2016-ஆம் ஆண்டு தூசித்தட்டி எடுத்தது பா.ஜ.க. அரசுதான். அப்போதும் எதிர்ப்பு கிளம்பியது. அன்றைக்கு முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் எதிர்ப்பு தெரிவித்தார். அதை நான் மறுக்கவில்லை. ஓராண்டுகாலம் விலக்கு பெற்றுக் … Read more

காங்கிரஸ் அலுவலகம், சோனியா காந்தி வாடகை செலுத்தவில்லை: ஆர்டிஐ தகவல்

புதுடெல்லி: டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கும், சோனியா காந்தியின் வீட்டிற்கும் வாடகை செலுத்தவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. நாடுமுழுவதும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு டெல்லியில் அலுவலகம் கட்டிக்கொள்ள இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்சியும் சொந்த அலுவலகம் கட்டி 3 ஆண்டுகளில் அரசு கட்டடங்களை காலி செய்ய வேண்டும் என்று டெல்லி வீட்டுவசதி வாரியம் கேட்டுக் கொண்டது. பல ஆண்டுகளுக்கு முன்பே இது நடைமுறைக்கு வந்து விட்டது. இதன்படி … Read more

சாம்சங்கின் புதிய எம்51: அசுரத்தனமான பேட்டரி திறனுடன் அறிமுகம்

சாம்சங் எம் வரிசை மொபைல்களில் புதிய அறிமுகமாக எம்51 என்கிற மொபைலை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் பேட்டரி திறனை மோசமான அசுரன் என்று வர்ணித்து சாம்சங் விளம்பரம் செய்துள்ளது கேலக்ஸி எம்51 மாடலின் விலை ரூ.24,999. இதில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி கொள்ளளவும் உள்ளது. ரூ.26,999 விலைக்கு 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி கொள்ளளவு கிடைக்கும். செப்டம்பர் 18 முதல், அமேசான், சாம்சங் இணையதளங்களிலும், கடைகளிலும் விற்பனைக்கு வரவுள்ளது. … Read more