முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடக்கும் விதம்: சரத்குமார் கடும் அதிருப்தி

சென்னை: ’முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு இன்று துவங்கியிருக்கும் நிலையில், தேர்வர்களுக்கு தொலைதூரங்களில் தேர்வு மையம் ஒதுக்கியிருக்கும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது’ என்று சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக அறிவிக்கப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு இன்று துவங்கியிருக்கும் நிலையில், தேர்வர்களுக்கு தொலைதூரங்களில் தேர்வுமையம் ஒதுக்கியிருக்கும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. தேர்வர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொள்ளாமல், தென்காசி மாவட்ட தேர்வர்களுக்கு … Read more

உ.பி.யில் 30 வழக்குகளுடன் குற்றப் பின்னணி கொண்ட எம்எல்ஏ அன்சாரி சமாஜ்வாதி கூட்டணியில் போட்டி: 1996 முதல் பல கட்சி தாவி வெற்றி பெற்றவர்

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் குற்றப் பின்னணி கொண்ட எம்எல்ஏ முக்தார் அன்சாரி மீண்டும் மாவ் தொகுதியில் போட்டியிடுகிறார். உ.பி,யின் குற்றப் பின்னணி கொண்ட அரசியல்வாதியாக இருப்பவர் முக்தார் அன்சாரி. இவர் மீது ஆள் கடத்தல், பாஜக எம்எல்ஏ கொலை உள்ளிட்ட சுமார் 30 வழக்குகள் உ.பி. மற்றும் பஞ்சாபில் நடைபெற்று வருகின்றன. கடந்த 2019-ல் ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு பஞ்சாப் ரூப்நாகர் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின், உ.பி.யில் பதிவான வழக்குகளில் அவரிடம் விசாரணை நடத்த … Read more

திமுகவின் அங்கமாக செயல்படுகிறது மாநிலத் தேர்தல் ஆணையம்: ஆளுநரை அதிமுக நிர்வாகிகள் சந்தித்த பின் சி.வி.சண்முகம் பேட்டி

சென்னை: ’திமுகவின் மாநிலத் தேர்தல் பிரிவு செயலாளர் போல் மாநில தேர்தல் ஆணையர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்’ என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான தங்களின் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்தித்தனர். இந்தச் சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் சி.வி.சண்முகம் பேசியது: “தேர்தல் ஆணையம் என்பது, அனைவருக்கும் பொதுவான, தன்னிச்சையான, சுதந்திரமாக செயல்படக்கூடிய அதிகாரம் படைத்த ஒரு அமைப்பு. … Read more

சென்னை – பெங்களூரு உள்ளிட 8 புதிய புல்லட் ரயில் வழித்தடம் குறித்து ஆய்வு: ரயில்வே அமைச்சர் தகவல்

புதுடெல்லி: சென்னை – பெங்களூரு புதிய புல்லட் ரயில் வழித்தடம் குறித்து ஆய்வு நடப்பதாக, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியுள்ளார். எழுத்து மூலம் அளித்த பதிலில் அவர் கூறியிருப்பதாவது: சென்னை-பெங்களூரு- மைசூரு, டெல்லி-வாரணாசி, மும்பை – நாக்பூர், மும்பை – ஐதராபாத் உள்பட 8 புதிய புல்லட் ரயில் வழித்தடங்களை உருவாக்குவது தொடர்பான ஆய்வை மேற்கொள்ள ரயில்வே தீர்மானித்துள்ளது. டெல்லி-வாரணாசி, மும்பை-நாக்பூர், தில்லி-அகமதாபாத், மும்பை- ஐதராபாத், சென்னை-பெங்களூரு- மைசூரு, … Read more

 கர்நாடக ஹிஜாப் விவகாரம்: மதுரையில் முஸ்லிம் பெண்கள் போராட்டம்

மதுரை: கர்நாடக ஹிஜாப் விவகாரம் தொடர்பாக அம்மாநில பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், மதுரையில் முஸ்லிம் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகா மாநிலத்தில் உடுப்பி உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஹிஜாப் (முக்காடு), புர்கா (முழு நீள உடை) அணிந்து வந்த முஸ்லிம் மாணவிகளுக்கு கல்லூரியில் அனுமதி மறுக்கப்பட்டது. இதையொட்டிய போராட்டங்களும், எதிர் போராட்டங்களும் நடந்த நிலையில், ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணையில் உள்ளது. இந்த நிலையில், கர்நாடகா பாஜக … Read more

‘‘உள்விவகாரம்’’- ஹிஜாப் விவகாரத்தில் உலக நாடுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் 

புதுடெல்லி: ஹிஜாப் பிரச்சனையில் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் வகையிலான கருத்துக்களை தெரிவிப்பதை பிற நாடுகள் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப், புர்கா அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதால், 6 முஸ்லிம் மாணவிகள் தொடர் போராட்டத்தில் இறங்கினர். மங்களூரு, குந்தாப்பூர், ஷிமோகா, பத்ராவதி, சிக்மகளூரு உள்ளிட்ட இடங்களிலும் ஹிஜாப் அணிந்து … Read more

தமிழகத்தில் 3000க்கும் கீழ் குறைந்தது கரோனா தொற்று: சென்னையில் 546 பேருக்கு பாதிப்பு- 11,154 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 2,812 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,33,966. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,46,398 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 33,48,419. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 3 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 81,01,593 பேர் வந்துள்ளனர். சென்னையில் 546 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை … Read more

உ.பி.யின் 55 தொகுதிகளில் வெற்றிக்கு வித்திடும் முஸ்லிம்கள்: வாக்குகள் பிரிவதால் பலனடையும் பாஜக!

புதுடெல்லி: உத்தரப் பிரதேச சட்டப் பேரவைக்கான இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடிவடைகிறது. இம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 55 இடங்களில் நாளை மறுநாள் (திங்கள்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த 55 தொகுதிகளின் கள அரசியல் நிலவரம் குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம். உத்தரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் ஒன்பது மாவட்டங்களில் நடைபெறும் இந்தத் தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகள் அதிகமாக உள்ளன. இதன் அடுத்த எண்ணிக்கையில் ஜாட் சமூகத்தினர் உள்ளனர். இதனால், பாஜக தன் … Read more

பிப்ரவரி 12: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 12) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,33,966 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண் மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் பிப்.11 வரை பிப்.12 பிப்.11 … Read more

பாஜக வென்றால் பொது சிவில் சட்டம் அமலாகும் – உத்தராகண்ட் முதல்வர் தாமி சர்ச்சை

புதுடெல்லி: உத்தராகண்டில் பாஜக வென்றால், பொது சிவில் சட்டம் அமலாகும் என அம்மாநில முதல்வர் புஷ்கர்சிங் தாமி உறுதி அளித்துள்ளார். பாஜக ஆளும் இம்மாநிலத்தில் மீண்டும் அவர் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளதை அடுத்து இந்த வாக்குறுதியை கொடுத்துள்ளார். உத்தர பிரதேசத்திலிருந்து பிரிந்த மாநிலம் உத்தராகண்ட். இம்மாநிலத்தின் சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 14ல் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஆளும் பாஜகவின் முதல்வராக புஷ்கர்சிங் தாமி வகிக்கிறார். தனது வெற்றிக்காக தீவிரப் பிரச்சாரம் செய்தவர் அதன் கடைசிநாளான … Read more