பெண் இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை: மேலும் 90 பவுன் நகை சிக்கியது; சீருடையில் இருந்து ரூ.25 ஆயிரமும் பறிமுதல்

நாகர்கோவில்: நாகர்கோவில் மகளிர் காவல் நிலைய பெண் ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விடிய விடிய நடத்திய சோதனையில் மேலும் 90 பவுன் நகை சிக்கியது. அத்துடன் பணிமுடிந்து வந்த பின்பு வீட்டில் காக்கி சீருடையை சோதனையிட்டபோது அதில் இருந்து ரூ.25 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டது. நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் கண்மணி(52). இவரது கணவர் சேவியர் பாண்டியன் நாகர்கோவில் நீதிமன்றத்தில் அரசு குற்றவியல் உதவி இயக்குனராக உள்ளார். கண்மணி … Read more

கேரளாவில் பாஜக சார்பில் முதல்முறையாக மாவட்ட குழு உறுப்பினராக திருநங்கை நியமனம்

கேரளாவில் பாஜக சார்பில் முதல்முறையாக மாவட்ட குழு உறுப்பினராக திருநங்கை ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூரைச் சேர்ந்தவர் அதிதி அச்சுத் (34). திருநங்கையான இவர் எர்ணாகுளம் சட்டக் கல்லூரியில் பயின்றுள்ளார். மார்க்சிஸ்ட் கட்சியின் அங்கமான இந்திய மாணவர் கூட்டமைப்பின் உள்ளூர் தலைவராக பதவி வகித்துள்ளார். பின்னர், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இப்போது, அக்கட்சியின் மாவட்ட குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் மாநிலத்திலேயே இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட … Read more

குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத்தொகை விரைவில் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத்தொகை விரைவில் வழங்கப்படும் என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் கூறியுள்ளார். இன்று (13-02-2022) மாலை காணொலி வாயிலாகத் திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி என்ற தலைப்பிலான தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு: தென்னவன் சிறுமலை என்று சிலப்பதிகாரக் காப்பியத்தில்-இளங்கோவடிகளால் போற்றப்பட்ட வரலாற்றுப் புகழ் பெற்ற நகரமான இந்த திண்டுக்கல்லில் … Read more

தீவிரவாதம் பாதித்த பகுதிகளில் பாதுகாப்புக்காக ரூ.18,839 கோடி ஒதுக்கீடு

புதுடெல்லி: காவல்துறையை நவீனப்படுத்தும் திட்டம் தொடர மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல் படை இயக்கத்தை மேம்படுத்தி நவீனப்படுத்த ,மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மேற்கொண்ட முன்முயற்சியை இந்த ஒப்புதல் முன்னெடுத்துச் செல்லும் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு காவல்துறையை நவீனப்படுத்தும் திட்டம் தொடர ஒப்புதல் அளித்துள்ளது. 2021-22 முதல் 2025-26 வரை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல் படை இயக்கத்தை மேம்படுத்தி நவீனப்படுத்த ,மத்திய உள்துறை … Read more

தமிழகத்தில் 2300-க்கும் கீழ் குறைந்தது கரோனா தொற்று: சென்னையில் 461 பேருக்கு பாதிப்பு- 8,229 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 2,296 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,36,262. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,46,874 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 33,56,648. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் யாருக்கும் தொற்று இல்லை. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 81,01,593 பேர் வந்துள்ளனர். சென்னையில் 461 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட … Read more

மன் கி பாத்; கருத்து தெரிவிக்க மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

புதுடெல்லி: 2022 பிப்ரவரி 27-ல் ஒளிபரப்பாகவுள்ள மன் கி பாத் நிகழ்ச்சிக்கு கருத்துக்களை தெரிவிக்குமாறு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். 2022 பிப்ரவரி மாதம் 27-ந்தேதி ஒளிபரப்பாகவுள்ள மனதின் குரல் நிகழ்ச்சிக்கு ஆலோசனைகளையும், கருத்துக்களையும் வழங்குமாறு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். This month’s #MannKiBaat programme will take place on the 27th. Like always, I am eager to get your suggestions for the same. … Read more

புதுச்சேரியின் 250 ஆண்டுகால ராஜ்நிவாஸில் சேதம்: வேறு இடம் மாறும் ஆளுநர் மாளிகை

புதுச்சேரி: 250 ஆண்டு பழமையான புதுச்சேரி ராஜ்நிவாஸ் கட்டுமானத்தில் சேதம் ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்புக்காக வேறு இடத்துக்கு விரைவில் மாறும் ஆளுநர் மாளிகை மாற்றப்பட உள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுச்சேரியில் பிரெஞ்சு கட்டடக்கலையில் வடிவமைக்கப்பட்ட 250 ஆண்டு பழமையான ராஜ்நிவாஸ் கட்டுமானத்தில் கடும் சேதத்தினால் பொதுப்பணித்துறை பரிந்துரைப்படி பாதுகாப்புக்காக வேறு இடத்துக்கு ஆளுநர் மாளிகை விரைவில் மாறவுள்ளது. புதுச்சேரி பாரதி பூங்கா எதிரே கடற்கரையொட்டி ராஜ்நிவாஸ் அமைந்துள்ளது. கடந்த 1733ம் ஆண்டு 1764ம் ஆண்டு வரை ஹோட்டலொன்று … Read more

அருணாச்சல் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைப்பு

அருணாச்சல பிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல் அவர்களது சொந்த ஊர்களுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. அருணாச்சல பிரதேசத்தின் கமங் பகுதியில் உள்ள உயரமான மலைப்பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. அங்கு கடந்த 6-ம் தேதி ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் 7 பேர் பனிச்சரிவில் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து, தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்ட ராணுவம் 7 வீரர்களை சடலமாக மீட்டது. மீட்கப்பட்ட ராணுவ வீரர்களின் உடல் அசாமின் … Read more

ஒரே நாடு, ஒரே தேர்தல் வரும்போது திமுகவை மக்கள் வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள் : எடப்பாடி பழனிசாமி

சேலம்: ஒரே நாடு, ஒரே தேர்தல் வரும்போது திமுகவை மக்கள் வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள் என்று எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த வாரம் நடைபெறும் சூழலில் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சேலத்தில் வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது, “ ஒரே நாடு, ஒரே தேர்தல் வரும்போது திமுகவை மக்கள் வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள். மீண்டும் … Read more

'குறித்துவைத்துக் கொள்ளுங்கள்.. ஒருநாள் ஹிஜாப் அணிந்த பெண் பிரதமர் ஆவார்' – ஒவைசி

ஹைதராபாத்: ஹிஜாப் அணிந்த பெண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராக வருவார் என மக்களவை எம்.பி அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார். ஹிஜாப் அணிந்து முஸ்லிம் மாணவர்கள் கல்லூரிக்குள் நுழைய கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து, ஒவைசி இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தான் பேசிய வீடியோ அடங்கிய ட்வீட் ஒன்றை பதிவிட்ட ஒவைசி, அதில், “ஹிஜாப் அணிந்த பெண்கள் கல்லூரிக்கு செல்வார்கள். மாவட்ட கலெக்டர்களாக, நீதிபதிகளாக, டாக்டர்களாக, தொழிலதிபர்களாக மாறுவார்கள். அதனை பார்க்க நான் உயிருடன் … Read more