ஒமைக்ரான் பரவலுக்குப் பின் 5 லட்சம் உயிரிழப்புகள் பதிவு: உலக சுகாதார நிறுவனம் கவலை

ஜெனீவா: ஒமைக்ரான் பரவலுக்குப் பின் உலகம் முழுவதும் அரை மில்லியன் அதாவது 5 லட்சம் உயிர்ப்பலி பதிவாகியுள்ளது. நிலைமை இப்படியிருக்க ஒமைக்ரானை மிதமானது என்று எப்படிக் கூற முடியும் என கவலை தெரிவித்துள்ளது உலக சுகாதார நிறுவனம். அந்த அமைப்பின், பெருந்தொற்று இறப்புகள் தொடர்பான மேலாளர் அப்டி முகமது கூறுகையில், “கடந்த நவம்பர் இறுதியில் பரவத் தொடங்கிய ஒமைக்ரான் தொற்றால் இதுவரை உலகம் முழுவதும் 5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 1.3 கோடி மக்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. … Read more

மூன்றாம் காலாண்டில் அதிகரித்த மொபைல் விற்பனை: முதலிடத்தில் ஸியோமி நிறுவனம்

இந்தியாவில் மூன்றாம் காலாண்டில் கிட்டத்தட்ட 5 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஒரு காலாண்டில் இந்த எண்ணிக்கையில் மொபைல்கள் விற்பது இதுவே முதல் முறை. கடந்த வருடம் இதே காலகட்டத்தை விட 8 சதவீதம் அதிகமாக தற்போது விற்கப்பட்டுள்ளது. இதில் ஸியோமி நிறுவனமே சந்தையில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. 1.31 கோடி மொபைல்களை விற்று 26.1 என்ற அளவு சந்தையில் தனது இருப்பைப் பெற்றுள்ளது. அடுத்த இடத்தில் சாம்சங் நிறுவனம் உள்ளது. மொத்தம் 1.02 கோடி மொபைல்களை விற்றுள்ளது. … Read more

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு இன்று தொடக்கம்: ஆங்கில பாடத் தேர்வு தேதி மாற்றம்

சென்னை: தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு இன்று (பிப்.9) தொடங்குகிறது. கரோனா பரவல் காரணமாகதமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் முழுமையாக திறக்கப்படவில்லை. சில மாதங்களே வகுப்புகள் நடந்தன. இதனால், மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளுக்கு பதிலாக திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன்படி, திருப்புதல் தேர்வு இன்று (பிப்.9) தொடங்கி 16-ம் தேதிவரை நடைபெற உள்ளது. இதற்காக தேர்வுத் துறை மூலம் மாநிலஅளவில் ஒரே மாதிரியான வினாத்தாள்கள் வழங்கப்பட … Read more

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், டி நிறுவனம் மீது 'உபா' சட்டத்தின் கீழ் என்ஐஏ வழக்கு

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது டி-கம்பெனி மீது உபா சட்டம் என்று அழைக்கப்படும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ்என்ஐஏ வழக்கு பதிவு செய் துள்ளது. நிழல் உலக தாதாவும் 1993-ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவருமான தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தானில் இருந்து கொண்டு இந்தியாவுக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அவரது நிழல் உலக நிறுவனம் டி-கம்பெனி என அழைக்கப்படுகிறது. லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் தாவூத் இப்ராஹிம் … Read more

பகுதி 1: குவாண்டம் தகவல் தொடர்பு: இஸ்ரோவின் முன்னோடி சோதனை வெற்றி

வங்கியிலிருந்து அனுப்பப்படும் புத்தாண்டு வாழ்த்து மின்னஞ்சலை உடனே பார்த்து விடலாம். ஆனால் வங்கியிலிருந்து மின்னஞ்சலில் வரும் உங்களது மாதாந்திர கணக்கு ஆவணத்தை பாஸ்வேர்டு (கடவு சொல்)இல்லாமல் உங்களால் திறக்க முடியாது.அதிலும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஒரு பிரத்யேக பாஸ்வேர்டு இருக்கும். இப்படி முக்கியத்துவம் வாய்ந்ததகவல், மூன்றாம் மனிதருக்கு செல்லாமல் தடுக்க பல தகவல் பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்படுகின்றன. தொழில் துறை, பொருளாதாரம், நிர்வாகம், தகவல் பரிமாற்றம், கல்வி,மருத்துவம், பொழுதுபோக்கு என உலகம் முழுவதும் ‘இணைய நெடுஞ்சாலைகளில்’ பின்னப்பட்டு சிந்தனையின் … Read more

தமிழகத்தில் ஆக்கிரமிப்பு நிலங்களில் உள்ள இந்து கோயில்களை மட்டுமே இடிப்பதாக கூறி வழக்கு: ஆதாரங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் ஆக்கிரமிப்பு நிலங்களில் உள்ள இந்து கோயில்களை மட்டும் இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், ஆதாரங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர். இதுதொடர்பாக இந்து முன்னணிமாநில செய்தித் தொடர்பாளரான சென்னை கொளத்தூரைச் சேர்ந்த டி.இளங்கோ, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு: தமிழகம் முழுவதும் 47,707 ஏக்கர்பரப்பில் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது. இதில் 10,556 ஏக்கர் நிலங்கள் குடியிருப்பு பகுதிகளுக்காகவும், 1,500 ஏக்கர்நிலங்கள் வணிக நிறுவனங்களுக்காகவும், … Read more

காஷ்மீர் குறித்து ஹூண்டாய் பாகிஸ்தான் சர்ச்சை கருத்து: மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் வருத்தம் தெரிவித்த தென் கொரிய அமைச்சர்

புதுடெல்லி: காஷ்மீர் தொடர்பாக ஹூண்டாய் பாகிஸ்தான் நிறுவனம் வெளியிட்ட பதிவுக்கு, மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் தென்கொரிய வெளியுறவு அமைச்சர் வருத்தம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் பிப்ரவரி 5-ம்தேதி காஷ்மீர் ஒற்றுமை தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, ஹூண்டாய் பாகிஸ்தான் நிறுவனம், ‘காஷ்மீர் சகோதரர்களின் தியாகத்தை நினைவுகூர்வோம். அவர்கள் மேற்கொண்டு வரும் சுதந்திரப் போராட்டத்தில் அவர்களுக்கு ஆதரவாக இருப்போம்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது. இந்தப் பதிவுக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஹூண்டாய் நிறுவனத்தின் தயாரிப்புகளைப் புறக்கணிக்க … Read more

பகுதி 1: குவாண்டம் தகவல் தொடர்பு: இஸ்ரோவின் முன்னோடி சோதனை வெற்றி

வங்கியிலிருந்து அனுப்பப்படும் புத்தாண்டு வாழ்த்து மின்னஞ்சலை உடனே பார்த்து விடலாம். ஆனால் வங்கியிலிருந்து மின்னஞ்சலில் வரும் உங்களது மாதாந்திர கணக்கு ஆவணத்தை பாஸ்வேர்டு (கடவு சொல்)இல்லாமல் உங்களால் திறக்க முடியாது.அதிலும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஒரு பிரத்யேக பாஸ்வேர்டு இருக்கும். இப்படி முக்கியத்துவம் வாய்ந்ததகவல், மூன்றாம் மனிதருக்கு செல்லாமல் தடுக்க பல தகவல் பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்படுகின்றன. தொழில் துறை, பொருளாதாரம், நிர்வாகம், தகவல் பரிமாற்றம், கல்வி,மருத்துவம், பொழுதுபோக்கு என உலகம் முழுவதும் ‘இணைய நெடுஞ்சாலைகளில்’ பின்னப்பட்டு சிந்தனையின் … Read more

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரைக் கைவிடும் மைக்ரோசாஃப்ட்: எட்ஜ் ப்ரவுசர் பயன்பாட்டை ஊக்குவிக்க திட்டம்

எட்ஜ் ப்ரவுசரின் பயன்பாட்டை அதிகரிக்க மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கான பயனர் சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளது. கூகுள் க்ரோம், ஃபயர்ஃபாக்ஸ் உள்ளிட்ட ப்ரவுசர்களின் வருகைக்குப் பிறகு இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் தாக்கம் குறைந்தது. இதனால் எட்ஜ் பிரவுசரை ஐந்து வருடங்களுக்கு முன் மைக்ரோசாஃப்ட் அறிமுகம் செய்தது. தற்போது சர்வதேச அளவில் இணையப் பயன்பாட்டில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு 5 சதவீத சந்தைப் பங்கு உள்ளது. இந்த ப்ரவுசரில் செயல்படாத இணையதளங்கள் தானாகவே மைக்ரோசாஃப்டின் எட்ஜ் ப்ரவுசருக்குச் சென்றுவிடும். ட்விட்டர், … Read more

’சமூக நீதிக்கான சரித்திர நாயகர்’ – முதல்வர் ஸ்டாலினுக்கு கி.வீரமணி புகழாரம்

சென்னை: ஆறே நாட்களில் புயல் வேகத்தில் நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி தமிழக அரசு மற்ற மாநிலங்களுக்கு ஒரு புதிய வெளிச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இன்றைய தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்ட நடவடிக்கைகளை நேரலையில் கண்டு எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தோம். சமூகநீதி, பெண்ணுரிமை, ஒடுக்கப்பட்டோரின் கல்வி உரிமை, மாநில உரிமை, மக்களாட்சி உரிமை போன்ற பல … Read more