7 நாட்களில் மறைந்து போகும் மெசேஜ்: வாட்ஸ் அப்பில் புதிய வசதி

வாட்ஸ் அப் செயலியில் அனுப்பும் செய்திகள் குறிப்பிட்ட காலத்துக்குள் மறைந்து போகும் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ் அப் செயலியில், கடந்த சில காலமாகவே இந்த வசதியைக் கொண்டு வர முயற்சிகள் நடந்தன. தற்போது அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ) பக்கத்தில் இந்த வசதி குறித்த அறிமுகத்தை அந்நிறுவனம் கொடுத்துள்ளது. அனுப்பும் செய்திகளை மறைய வைக்கும் கட்டுப்பாடு பயனர்கள் கையில்தான் இருக்கும். வேண்டுமென்றால் அதைப் பயன்படுத்தலாம். இல்லையென்றால் அணைத்து வைக்கலாம். ஆனால், குழுக்களில் … Read more

பிப்ரவரி 8: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 8) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,20,505 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண் மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் பிப்.7 வரை பிப்.8 பிப்.7 … Read more

வீட்டுக்கு 300 யூனிட் மின்சாரம், மாதம் 1லி பெட்ரோல் இலவசம்: உ.பி.யில் சமாஜ்வாதி வாக்குறுதிகளின் முக்கிய அம்சங்கள்

லக்னோ: உத்தரப் பிரதேச தேர்தலுக்காக அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டுக்கும் 300 யூனிட் மின்சாரம், மாதம் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் உட்பட பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் நடைபெற இரண்டு நாட்களே உள்ள நிலையில் முன்னணி கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. இன்று காலை பாஜக தனது … Read more

700 கோடி பார்வைகளைத் தாண்டி யூடியூபில் சாதனை படைத்த குழந்தைகள் பாடல்

யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ என்கிற சாதனையை குழந்தைகளுக்கான பாடல் ஒன்று படைத்துள்ளது. பேபி ஷார்க் என்கிற இந்தக் குழந்தைப் பாடல் தற்போது 700 கோடி முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இதன் பார்வைகள் தினந்தோறும் ஏறுமுகத்தில் உள்ளன. முன்னதாக அதிகம் பார்க்கப்பட்ட வீடியோவாக டெஸ்பாஸிடோ என்கிற பாடல் இருந்தது. தென்கொரியாவைச் சேர்ந்த பின்க்ஃபாங் என்கிற கல்வி மற்றும் பொழுதுபோக்கு நிறுவனம்தான் பேபி ஷார்க் பாடலைத் தயாரித்துள்ளது. வெறும் 2 நிமிடம் மட்டுமே ஓடும் இந்தப் பாடல், … Read more

பிப்ரவரி 8: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 8) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,20,505 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more

நான் தொடர்ந்து ஹிஜாப் அணிவேன்; எனது இந்து நண்பர்கள் துணையாக இருந்தனர்: கர்நாடக மாணவி பேட்டி

பெங்களூரு: கர்நாடகவில் புர்கா அணிந்து வந்த மாணவியை நோக்கி, காவித் தூண்டு அணிந்திருந்த மாணவர்கள் கோஷம் எழுப்பிய வீடியோ வைரலாகி வந்த நிலையில், தற்போது அந்த மாணவி தனக்கு நேர்ந்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இன்று காலை மாண்டியாவில் பிஇஎஸ் கல்லூரிக்கு புர்கா அணிந்து தனியாக மாணவி ஒருவர் வந்தார். அவரைக் கண்டதும் காவித் துண்டு அணிந்த மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள், அவர் முன் நின்று ”ஜெய் ஸ்ரீராம்” என்று கோஷம் எழுப்பினர். அப்பெண்ணும் அம்மாணவர்களுக்கு எதிராக … Read more

இறுதிகட்டத்தை எட்டியது 5ஜி நெட்வொர்க்: மத்திய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: 5ஜி நெட்வொர்க் பணிகள் இறுதிகட்டத்தை எட்டிவருவதாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இந்திய தொலைதொடர்பு துறையினர் தகுதிவாய்ந்த வெளிநாட்டு கொள்முதலாளர்களை சந்திப்பதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்காக, ‘இந்தியா டெலிகாம் 2022’ எனும் பிரத்யேக சர்வதேச வர்த்தக கண்காட்சி இன்று தொடங்கியது. இந்திய அரசின் வர்த்தகத் துறையின் சந்தை அணுகல் முன்முயற்சி திட்டத்தின் கீழ் தொலைத்தொடர்புத் துறை மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் ஆதரவுடன் தொலைதொடர்பு உபகரணங்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் 2022 … Read more

வேட்பாளர்கள் அதிகம் – திருச்சியில் 2 வார்டுகளில் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள்

திருச்சி: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 2 வார்டுகளில் மட்டும் வாக்குப்பதிவுக்கு 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. திருச்சி மாவட்டத்தில் மாநகராட்சியில் 65 வார்டுகள், 5 நகராட்சிகளில் 120 வார்டுகள், 14 பேரூராட்சிகளில் 216 வார்டுகள் என மொத்தம் 401 வார்டுகளுக்கு தேர்தல் நடத்தப்படவிருந்தது. இதனிடையே, திமுகவைச் சேர்ந்த துறையூர் நகராட்சி 10 வது வார்டில் முரளி, தாத்தையங்கார்பேட்டை பேரூராட்சி 8 வது வார்டில் கருணாநிதி, தொட்டியம் பேரூராட்சி 13 வது வார்டில் … Read more

ஹிஜாப் விவகாரம், எதிர்வினைகளின் தாக்கம்: கர்நாடகாவில் 3 நாட்களுக்கு மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை

பெங்களூரு: ஹிஜாப் விவகாரத்தில் எதிர்வினை என்ற பெயரில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்த நிலையில், கர்நாடகாவில் அடுத்த மூன்று நாட்களுக்கு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார். கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். … Read more

ஃபிளாஷ் ப்ளேயருக்கு விடை கொடுத்த அடோபி: விண்டோஸிலும் நீக்கம்

ஃபிளாஷ் ப்ளேயருக்கு அடோபி நிறுவனம் அதிகாரபூர்வமாக விடை கொடுத்துள்ளது. அந்நிறுவனத்தின் சமீபத்திய பிடிஎஃப்பை இயக்குவதற்கான மென்பொருள்களில் ஃபிளாஷைப் பயன்படுத்தவில்லை. மேலும் சில முக்கியப் பாதுகாப்புப் பிரச்சினைகளையும் சரி செய்துள்ளது. ஃப்ளாஷைச் சார்ந்து கொடுக்கப்பட்டிருந்த தேர்வுகள் தற்போது இன்னொரு டூல்பார் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் Update, Add, Delete, Export, Archive ஆகிய தேர்வுகள் உள்ளன. இந்த வருடத்தின் கடைசியில் ஃபிளாஷ் மென்பொருளை ஒட்டுமொத்தமாக நீக்கும் அடோபி நிறுவனம், ஃபிளாஷ் இல்லாத எதிர்காலத்துக்குத் தயாராகி வரும் அடோபி, மார்க் … Read more