வட்டி விகிதங்களில் மாற்றமில்லை; ஜிடிபி 7.8 சதவீதமாக இருக்கும்: ரிசர்வ் வங்கி 

மும்பை: ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாகவே நீடிக்கும் என்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 3.35 சதவீதமாக தொடரும் எனவும் மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 2 மாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. 2020-ம் ஆண்டு மே 22-ம் தேதி வட்டி வீதம் வரலாற்றில் இல்லாத அளவு குறைக்கப்பட்டது. இதன்மூலம் தொடர்ச்சியாக 9வது முறையாக வட்டி விகிதங்கள் மாற்றமின்றி தொடருகின்றன. இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் ஆய்வுக்கூட்டம் … Read more

பில்கேட்ஸின் தந்தை காலமானார்

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரும், பில்கேட்ஸின் தந்தையுமான வில்லியம் ஹெச்.கேட்ஸ் நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 94. வாஷிங்டன் ஸ்டேட் பகுதியில் இருக்கும் கடற்கரை இல்லத்தில் வில்லியம் வசித்து வந்தார். வழக்கறிஞரான இவர் சமூக ஆர்வலராகவும் இருந்து பல நல உதவிகளைச் செய்துள்ளார். அல்ஸைமர் நோயால் பாதிக்கப்பட்டிருந்த வில்லியமின் உயிர் நேற்று முன்தினம் அமைதியாகப் பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தன் தந்தை குறித்துப் பகிர்ந்துள்ள பில்கேட்ஸ், ”என் தந்தையின் ஞானம், தாராள மனப்பான்மை, இரக்கம் … Read more

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு: மார்ச் 5-ல் தீர்ப்பு

மதுரை: சேலம் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் மார்ச் 5-ல் மதுரை நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுல்ராஜ். இவர் நாமக்கல்லை சேர்ந்த மாணவி ஒருவரை காதலித்தார். கடந்த 2015-ம் ஆண்டு கல்லூரிக்கு சென்ற கோகுல்ராஜ், நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ், … Read more

உ.பி.யில் முதல்கட்டத் தேர்தல் தொடங்கியது: 58 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

லக்னோ: உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்கட்டமாக 58 தொகுதிகளில் இன்று காலை தொடங்கி விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்து வருகிறது. உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் நடக்க உள்ளது. உத்தரபிரதேசத்தில் பிப்.10 முதல் மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, முதல்கட்டமாக மேற்கு உ.பி.யில் உள்ள ஷாம்லி, ஹாபூர், கவுதம் புத் நகர், முசாபர்நகர், மீரட், … Read more

'ஆப்பிள் ஒன்' புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ள ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் ‘ஆப்பிள் ஒன்’ என்கிற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. செவ்வாய்க்கிழமை அன்று ஆப்பிள் நிறுவனம், டைம் ஃப்ளைஸ் என்ற நிகழ்ச்சியை நடத்தியது. வழக்கமாக பொது மேடையில் நடக்கும் புதிய கருவிகளின் அறிமுக நிகழ்ச்சி இம்முறை இணையம் மூலமாக நடந்தது. இந்நிகழ்ச்சியில் புதிய ஐபேட், ஆப்பிள் வாட்ச், ஆப்பிளின் புதிய சேவையான ஃபிட்னஸ்+ ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் ‘ஆப்பிள் ஒன்’. இந்த ஒரே திட்டத்தின் மூலம் ஆப்பிள் மியூஸிக், ஆப்பிள் … Read more

புதுக்கோட்டை பள்ளி சிறுவன் உயிரிழப்பு: பெற்றோருக்கு ஆறுதல் கூறி நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: எதிர்பாராத விதமாக உயிரிழந்த புதுக்கோட்டையை சேர்ந்த சிறுவன் நிதிஷ்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன், முதல்வர் ஸ்டாலின் சிறுவனின் பெற்றொர்களுக்கு 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்து உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் பாப்பான்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் நாடிமுத்து. இவரது 9 வயது மகன் நிதிஷ்குமார் அதே ஊரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் பள்ளிக்குச்சென்ற சிறுவன் வகுப்பில் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக ஆசிரியர்கள் … Read more

இந்தியாவில் அன்றாட கரோனா தொற்று  67,084; தினசரி பரவல் விகிதம் 4.44%

புதுடெல்லி: இந்தியாவில் அன்றாட கரோனா தொற்று 67,084 என்றளவில் உள்ளது. அன்றாட கரோனா பரவல் விகிதமும் 4.44% என்றளவில் சரிந்தது. கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி இந்தியாவில் முதல் ஒமைக்ரான் தொற்று கண்டறிந்த பிறகு கரோனா பரவல் மீண்டும் அதிகரித்தது. நாடுமுழுவதும் 3-வது அலை ஏற்பட்டு நாடு முழுவதும் மீண்டும் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு, பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து போன்ற பல்வேறு நடவடிக்கைகளும் அமலுக்கு வந்தன. பின்னர் பிப்ரவரி … Read more

முடிவுக்கு வருகிறது ஃபார்ம்வில் விளையாட்டு: டிசம்பர் 31க்குப் பிறகு ஃபேஸ்புக்கில் இருக்காது

ஃபேஸ்புக் பயனர்களிடையே மிகப் பிரபலமாக இருந்து வந்த ஃபார்ம்வில் விளையாட்டு வருகிற டிசம்பர் 31ஆம் தேதி முதல் ஃபேஸ்புக்கிலிருந்து நீக்கப்படவுள்ளது. ஃபேஸ்புக் பயன்பாடு இந்தியாவில் அதிகரித்து வந்த சமயத்தில் கேண்டி க்ரஷ் போல பிரபலமான இன்னொரு எளிமையான விளையாட்டு ஃபார்ம்வில் (Farmville). விவசாயம் செய்து சம்பாதிப்பது தான் இந்த விளையாட்டின் எளிய அமைப்பு. பப்ஜி யுகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஃபார்ம்வில் பிடிக்காமல் போகலாம் ஆனால் ஃபார்ம்வில்லை உருவாக்கிய ஸிங்கா நிறுவனத்துக்கு அது மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்தது. ஃப்ளாஷ் … Read more

6 பள்ளிக்கல்வி அதிகாரிகள் தேசிய விருதுக்கு தேர்வு

சென்னை: தமிழக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் 6 பேர் தேசிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேசிய கல்வியியல் மேலாண்மை மற்றும் திட்டமிடல்நிறுவனம், கல்வி நிர்வாகத்தில் புதுமைகளையும், சிறந்த நடைமுறைகளையும் உருவாக்குவோருக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில், 2018-2019-ம் ஆண்டுக்கான விருதுக்கு தமிழகத்தில் இருந்து பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) வெ.ஜெயக்குமார், மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி இரா.சுவாமிநாதன், திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் வட்டாரக் கல்வி அலுவலர் கோ.குணசேகரன், தருமபுரி மாவட்டம் பென்னாகரம் … Read more

உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்: 58 தொகுதிகளில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு

லக்னோ: உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்கட்டமாக 58 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. உத்தரபிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் நடக்க உள்ளது. உத்தரபிரதேசத்தில் பிப்.10 முதல் மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, முதல்கட்டமாக மேற்கு உ.பி.யில் உள்ள ஷாம்லி, ஹாபூர், கவுதம் புத் நகர், முசாபர்நகர், மீரட், … Read more