'காலனி ஆதிக்கத்துக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறதா மத்திய அரசு?' – மாநிலங்களவையில் கனிமொழி சோமுவின் முதல் பேச்சு

புதுடெல்லி: திமுக மாநிலங்களவை உறுப்பினரான கனிமொழி என்.வி.என் சோமு இன்று மாநிலங்களவையில் தனது முதல் உரையை நிகழ்த்தினார். அதில், மத்திய அரசின் திட்டங்களையும், தமிழக அரசின் திட்டங்களையும் ஒப்பிட்டு கடுமையாக சாடினார். அவர் தனது பேச்சில், “கரோனா பேரிடரின் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்துவைத்துள்ள இந்த நேரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் ஏழை, நடுத்தர மக்களின் உயர்வுக்கு வழிவகுக்கும் வகையிலான நிதிக்கட்டமைப்பு மற்றும் திட்டமிடலை எதிர்பார்த்தோம். ஆனால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நடுத்தர வர்க்கத்தினரின் நிதிநிலையை … Read more

ஆரக்கிளுக்கு டிக்டாக் விற்கப்படாது: சீன ஊடகம் தகவல், மௌனம் காக்கும் நிறுவனம்

டிக்டாக்கின் அமெரிக்க செயல்பாட்டுப் பிரிவை ஆரக்கிள் நிறுவனம் வாங்கவுள்ளதாக வந்த தகவல் பொய் என்றும், அப்படி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், சீன அரசு நடத்தும் ஆங்கில தொலைக்காட்சி சேனலான சிஜிடிஎன் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம், பாதுகாப்புக் காரணங்களுக்காக டிக்டாக் உட்பட 58 சீன செயலிகளை இந்தியா தடை செய்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் நிர்வாகம், டிக்டாக்கின் அமெரிக்க பிரிவு செயல்பாடுகளை செப்டம்பர் மாதத்துக்குள் அமெரிக்க நிறுவனத்துக்கு விற்கவில்லையென்றால், டிக்டாக் செயலி அமெரிக்காவிலும் … Read more

'என் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை' – தஞ்சையில் பிரச்சாம் செய்த உதயநிதியிடம் முறையிட்ட பெண்

தஞ்சாவூர்: “பாசிச பாஜக, அடிமை அதிமுகவுக்கு எதிராக சிம்மசொப்பனமாக திமுக திகழ்கிறது” என்று தஞ்சாவூரில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக இளைஞரணிச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பேசினார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தஞ்சாவூர் கல்லுக்குளத்தில் இன்று காலை தேர்தல் பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின் பேசியது: ”திமுக ஆட்சிக்கு வந்து 8 மாதங்களில் ஏராளமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில், முக்கியமான வாக்குறுதிகளான கரோனா கால நிவாரணம் ரூ. 4 ஆயிரம், அரசு நகரப் … Read more

பாஜக, ஆர்எஸ்எஸ் கருத்துக்களை நாட்டின் கொள்கைகளாக மாற்ற முயல்வது ஆபத்து: ஹிஜாப் விவகாரத்தில் நவாஸ்கனி மக்களவையில் ஆவேசம்

புதுடெல்லி: மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் எம்.பியான கே.நவாஸ்கனி உரையாற்றினார். அப்போது அவர், பாஜக, ஆர்எஸ்எஸ் கருத்துக்களை இந்த நாட்டின் கொள்கைகளாக மாற்ற முயல்வது ஆபத்தானது என ஆவேசமாகத் தெரிவித்தார். இது குறித்து நாடாளுமன்ற மக்களவையில் ராமநாதபுரம் தொகுதி எம்.பி.யும் முஸ்லிம் லீக்கின் மாநிலத் துணைத்தலைவருமான கே.நவாஸ்கனி கூறியதாவது: பாஜக ஆட்சியில் இருக்கும் கர்நாடக மாநிலத்தில் அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிற உரிமையின்படி, ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவியின் மீது … Read more

சாலை முற்றுகைகளும், சட்டவிரோத ஆர்ப்பாட்டங்களும் ஏற்றுக்கொள்ள முடியாதவை: ஜஸ்டின் ட்ரூடோ

ஒட்டாவா: சாலை முற்றுகைகள், சட்டவிரோத ஆர்ப்பாட்டங்கள் முதலானவை ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சாலை முற்றுகைகள், சட்டவிரோத ஆர்ப்பாட்டங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இது நாட்டின் வணிகம் மற்றும் ஏற்றுமதியில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். நாம் எல்லாவற்றையும் முடிவுக்கு கொண்டு வரவேண்டும். கரோனா தொற்றை, சாலைத் தடுப்புகளால் முடிவுக்கு கொண்டு வர முடியாது. அறிவியலால் மட்டுமே கரோனா தொற்றை முடிவுக்கு கொண்டு வர முடியும்” என்று … Read more

ஐரோப்பாவில் 10 கோடி பயனர்கள்: டிக் டாக்கின் புதிய மைல்கல்

ஐரோப்பாவில் 10 கோடி பயனர்கள் டிக் டாக்கைப் பயன்படுத்துவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஐரோப்பாவில் தங்கள் நிறுவனத்துக்கென 1600 ஊழியர்கள் இருப்பதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. டிக் டாக்கின் அமெரிக்கப் பிரிவு ஆரக்கிள் நிறுவனத்துக்கு விற்கப்பட்டதா இல்லையா என்பது தெளிவாகாத நிலையில் தற்போது தங்கள் செயலி ஐரோப்பாவில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக டிக் டாக் தரப்பு தெரிவித்துள்ளது. “ஒரு அசாதாரண காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில், எங்கள் வியாபாரம் இந்த வருடம் மிகச் சிறப்பாகப் பெருகியுள்ளது. … Read more

பிரதமர் மோடியின் உரையை தமிழக கோயில்களில் ஒளிபரப்பியதில் விதிமீறல் இல்லை: உயர் நீதிமன்றம்

சென்னை: ஆதிசங்கரர் சிலை திறப்பு விழா நிகழ்வில் பேசிய பிரதமர் மோடியின் உரையை தமிழக கோயில்களில் ஒளிபரப்பியதில் விதிமீறல் இல்லை என கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த மனுவில், ’பிரதமர் மோடி கேதர்நாத் கோயிலில் நடத்திய ஆதிசங்கரர் பூஜை, தமிழகத்தில் உள்ள 16 கோயில்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதற்காக கோயில் நிதி … Read more

கேரளாவை போல் உ.பி மாறினால்? – யோகிக்கு 'பட்டியலிட்டு' பதிலடி கொடுத்த பினராயி

திருவனந்தபுரம்: யோகி ஆதித்யநாத் தனது மாநிலத்தை கேரளத்துடன் ஒப்பிட்டு நேற்று பேசிய நிலையில், தற்போது ’கேரளாவை போல் உத்தரப் பிரதேசம் மாறினால் என்ன நடக்கும்?’ என சில வரிகளில் பினராயி விஜயன் பதிவு செய்துள்ள ட்வீட் வைரலாகியுள்ளது. உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில், முதல்கட்டமாக மேற்கு உ.பி.யில் உள்ள ஷாம்லி, ஹாபூர், கவுதம் புத் நகர், முசாபர்நகர், மீரட், பாக்பத், காஜியாபாத், புலந்த்ஷார், அலிகார், மதுரா மற்றும் … Read more

உக்ரைன் எல்லையில், 1 லட்சத்துக்கும் அதிகமான படைகளை ரஷ்யா குவித்து வருகிறது: அமெரிக்கா

உக்ரைன் எல்லையில், 1 லட்சத்துக்கும் அதிகமான படைகளை ரஷ்யா குவித்து வைத்திருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறும்போது, “ கடந்த 24 மணி நேரமாகவே உக்ரைன் எல்லையில் ரஷ்ய ராணுவத்தின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கவனித்து வருகிறோம். தொடர்ந்து ரஷ்ய ராணுவத்தினர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் உக்ரைன் – எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் ரஷ்ய அதிபர் புதின் எல்லையில் படைகளை அதிகரித்து வருகிறார். … Read more

டிக் டாக்குக்குப் போட்டியாக யூடியூபின் ஷார்ட்ஸ்: இந்தியாவில் பரிசோதனை வடிவம் அறிமுகம்

குறுங் காணொலி உருவாக்கும் டிக் டாக் உள்ளிட்ட செயலிகளுக்குப் போட்டியாக, யூடியூப் ஷார்ட்ஸ் என்கிற புதிய தளத்தின் பரிசோதனை வடிவம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே சந்தையில் டிக் டாக்குக்குப் போட்டியாக புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்ய கூகுள் நிறுவனத்தின் யூடியூப் தளம் முயற்சி செய்து வந்தது. அதிகபட்சம் 15 விநாடிகளுக்குப் பயனர்கள் காணொலிகளை உருவாக்கும் வகையில் யூடியூப் ஷார்ட்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு இந்தப் பரிசோதனை வடிவில் ஒரு சில கூடுதல் அம்சங்கள் … Read more