ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்ட பப்ஜி விளையாட்டு

கூகுளின் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிளின் ஆப் ஸ்டோர் ஆகிய இரண்டு தளங்களிலிருமிருந்து பப்ஜி விளையாட்டு நீக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பப்ஜி (Player Unknown’s Battle grounds -PUBG) என்கிற விளையாட்டை இனி இந்தியாவில் ஆண்ட்ராய்ட் பயனர்கள், ஆப்பிள் போன் பயனர்கள் என யாரும் அதிகாரபூர்வமாகப் பதிவிறக்கம் செய்ய முடியாது. அதே நேரம் ஏற்கெனவே இன்ஸ்டால் செய்து விளையாடி வருபவர்களால் தொடர்ந்து விளையாட முடியும். ஆனால் அவர்களால் அப்டேட் செய்ய … Read more

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளைக் காப்பாற்றியது யார்? – பழனிசாமி மீது ஸ்டாலின் தாக்கு

“பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை போன்ற கொடுமைகளை நடக்கவிட்டு வேடிக்கை பார்த்ததார் பழனிசாமி. அந்தப் பாலியல் குற்றவாளிகளைக் காப்பாற்றியது யார்… பழனிசாமிதானே?” என்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். மேலும், “2011-ஆம் ஆண்டே நீட் விவகாரத்துக்கு காங்கிரஸ் ஆட்சி முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. ஆனால் அதை 2016-ஆம் ஆண்டு தூசித்தட்டி எடுத்தது பா.ஜ.க. அரசுதான். அப்போதும் எதிர்ப்பு கிளம்பியது. அன்றைக்கு முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் எதிர்ப்பு தெரிவித்தார். அதை நான் மறுக்கவில்லை. ஓராண்டுகாலம் விலக்கு பெற்றுக் … Read more

காங்கிரஸ் அலுவலகம், சோனியா காந்தி வாடகை செலுத்தவில்லை: ஆர்டிஐ தகவல்

புதுடெல்லி: டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கும், சோனியா காந்தியின் வீட்டிற்கும் வாடகை செலுத்தவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. நாடுமுழுவதும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு டெல்லியில் அலுவலகம் கட்டிக்கொள்ள இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்சியும் சொந்த அலுவலகம் கட்டி 3 ஆண்டுகளில் அரசு கட்டடங்களை காலி செய்ய வேண்டும் என்று டெல்லி வீட்டுவசதி வாரியம் கேட்டுக் கொண்டது. பல ஆண்டுகளுக்கு முன்பே இது நடைமுறைக்கு வந்து விட்டது. இதன்படி … Read more

சாம்சங்கின் புதிய எம்51: அசுரத்தனமான பேட்டரி திறனுடன் அறிமுகம்

சாம்சங் எம் வரிசை மொபைல்களில் புதிய அறிமுகமாக எம்51 என்கிற மொபைலை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் பேட்டரி திறனை மோசமான அசுரன் என்று வர்ணித்து சாம்சங் விளம்பரம் செய்துள்ளது கேலக்ஸி எம்51 மாடலின் விலை ரூ.24,999. இதில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி கொள்ளளவும் உள்ளது. ரூ.26,999 விலைக்கு 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி கொள்ளளவு கிடைக்கும். செப்டம்பர் 18 முதல், அமேசான், சாம்சங் இணையதளங்களிலும், கடைகளிலும் விற்பனைக்கு வரவுள்ளது. … Read more

உளுந்தூர்பேட்டை: 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு – கேள்வி எழுப்பிய பட்டியலின இளைஞர் மீது தாக்குதல்?

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை பகுதியில் 100 நாள் வேலை தொடர்பாக குறித்து கேள்வி எழுப்பிய பட்டியலின இளைஞரை ஊராட்சி மன்றத் தலைவர் ஒருவர் தாக்கியதாகவும், தாக்கியவரை விடுத்து தாக்குதலுக்கு உள்ளான இளைஞரையே போலீஸ் கைது செய்ததாகவும் சர்ச்சை எழுந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் எஸ்.மலையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர் (34). இவர் அப்பகுதியில் இ.சேவை மையம் நடத்தி வருகிறார். நேற்று மலையனூர் கிராமத்தில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான சாலையில் 100 நாள் வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடத்திற்கு … Read more

'அவர் ஊழியர் அல்ல; எனது பார்ட்னர்' – தொழிலாளிக்கு பென்ஸ் கார் பரிசளித்த கேரள தொழிலதிபர்

கோழிக்கோடு: கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது தொழிலாளி ஒருவருக்கு விலைமதிப்பு மிக்க மெர்சிடிஸ் பென்ஸ் காரை பரிசளித்த நிகழ்வு கவனம் பெற்றுள்ளது. கேரளாவில் மிகப்பெரிய டிஜிட்டல் ரீடெய்ல் ஸ்டோரான MyG குழுமத்தின் உரிமையாளர் ஏ.கே.ஷாஜி. இந்த நிறுவனத்தின் தலைமை வணிக மேம்பாட்டு அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார் அனிஷ் என்பவர். கடந்த 22 வருடங்களாக அனிஷ், ஷாஜியிடம் பணிபுரிந்துவருகிறார். MyG நிறுவனத்தை தொடங்கியதில் இருந்து ஷாஜியுடன் பயணித்து வரும் அனிஷ், அந்த நிறுவனத்தில் மார்க்கெட்டிங், பராமரிப்பு மற்றும் … Read more

பதிவேற்றிய ட்வீட்டைத் திருத்தம் செய்யும் வசதியா?- ட்விட்டர் மறுப்பு

ட்விட்டர் தளத்தில் ஒரு ட்வீட்டுக்குப் பதிலாகப் போடும் ட்வீட்டில் திருத்தம் செய்யும் வசதி திடீரென சில பயனர்களுக்குக் கிடைத்தது. ஆனால், இது தெரியாமல் நடந்த தவறு என்று ட்விட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்விட்டரில் பகிரப்படும் ட்வீட்டுகளையோ அதற்கு வரும் ப்தில் ட்வீட்டுகளையோ பயனர்கள் திருத்த முடியாது (edit). ட்வீட்டில் தவறாக ஏதாவது எழுத்துப் பிழையோ, கருத்துப் பிழையோ, தகவல் பிழையோ இருந்தால் அதை மொத்தமாக நீக்கிவிட்டு புதிதாகத்தான் ட்வீட் செய்ய வேண்டும். ஆனால், ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு … Read more

தமிழகத்தில் இன்று 3,592 பேருக்குக் கரோனா: சென்னையில் 663 பேருக்கு பாதிப்பு; 14,182 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 3,592 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,28,068. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,45,246 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 33,23,214. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 4 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் 663 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 33 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் … Read more

முஸ்லிம் பெண்கள் ஒடுக்கப்படுவதை தடுக்க, உ.பி.-யில் பாஜக அரசு அவசியம்: பிரதமர் மோடி

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் முஸ்லிம் பெண்கள் ஒடுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய, பாஜக தலைமையிலான அரசு அவசியம் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் 58 தொகுதிகளுக்கான முதல்கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 14- ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி, சஹரான்பூரில் பாஜக நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசும்போது, “முஸ்லிம் பெண்கள் ஒடுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய … Read more

டிக் டாக் அமெரிக்கப் பிரிவை ஆரக்கிள் நிறுவனத்துக்கு விற்க முடிவு

டிக் டாக் செயலியின் சீன உரிமையாளரான பைட் டான்ஸ் நிறுவனம், ஆரக்கிள் நிறுவனத்துக்கு தங்களது அமெரிக்கப் பிரிவை விற்க முடிவு செய்துள்ளது. மைக்ரோசாஃப்டுக்கும், ஆரக்கிளுக்கும் இடையே நடந்த போட்டியில் ஆரக்கிளே முந்தியுள்ளது. ஆனால், இந்த விற்பனையின் மூலம் டிக் டாக்கின் பெரும்பான்மையான பங்குகளும் ஆரக்கிள் நிறுவனத்துக்குச் செல்லுமா என்பது பற்றிய தெளிவு இன்னும் தரப்படவில்லை. மேலும் இது ஒட்டுமொத்த விற்பனை போல அல்ல என்றும், அமெரிக்காவில் டிக் டாக்கின் செயல்பாட்டுக்கு, தங்களது க்ளவுட் தொழில்நுட்பம் மூலம் ஆரக்கிள் … Read more