வீடியோ, போஸ்டரில் வைரல் முயற்சி: குழந்தைகள் பாதுகாப்புக்கு 'அரண்' – புதுக்கோட்டையில் கவனம் ஈர்க்கும் முன்னெடுப்புகள்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக ஆட்சியரின் ஆலோசனையில் தயாரிக்கப்பட்ட முன்மாதிரி விழிப்புணர்வு வீடியோ மற்றும் போஸ்டர்களானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தண்டனை அளிப்பதற்காக போக்ஸோ உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம், இதுபோன்ற குற்ற செயல்களைத் தடுக்கவும், பாதுகாப்பதற்காக அரசிடம் உள்ள சட்ட, திட்டங்கள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் புதுக்கோட்டை ஆட்சியர் … Read more