மோசமான டிஜிட்டல் பணியிடமாக ஸொமேட்டோ தேர்வு: தவறை ஏற்றுக்கொண்ட தலைமைச் செயல் அதிகாரி 

செயலிகளைச் சார்ந்து இயங்கும் பணிகளில், இந்தியாவிலேயே மிக மோசமான டிஜிட்டல் பணியிடமாக ஸொமேட்டோ நிறுவனம் தர மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முழு பொறுப்பு தன்னுடையது என்று ஏற்றுக்கொண்ட அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தீபிந்தர் கோயல் அடுத்த வருடம் இந்தச் சூழலை மேம்படுத்த சிறந்த முயற்சியைத் தருவோம் என்று கூறியுள்ளார். ஃபேர்வொர்க் இந்தியா என்கிற அமைப்பு டிஜிட்டல் தொழில்நுட்பத்தைச் சார்ந்து இயங்கும் பணியிடங்களைப் பற்றிய ஆய்வினைச் செய்துள்ளது. இதில் சிறந்த, மோசமானப் பணியிடங்கள் என்ற தரப்பட்டியலை வெளியிட்டுள்ளது. … Read more

நீட் தேர்வுக்கு எதிராக சமரசமற்ற அகிம்சை போர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: ‘நீட்’தேர்வுக்கு எதிராக சமரசமற்ற அகிம்சை போரை தொடங்கியுள்ளதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கட்சித் தொண்டர்களுக்கு அவர் எழுதிய மடலில் கூறியிருப்பதாவது: திமுக மற்றும் தோழமைக் கட்சி வேட்பாளர்கள், ஒவ்வொரு வாக்காளரையும் தவறாமல் நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்து, தங்கள் வெற்றியை உறுதி செய்ய பரப்புரை மேற்கொள்ள வேண்டும்இதே வாக்காளர்கள்தான் கடந்த ஆண்டு என்னை நம்பி முதல்வர் என்ற பொறுப்பை ஒப்படைத்தனர். அவர்கள் வைத்த நம்பிக்கை, ஒருநாளும் சிறிதும் வீணாகாதபடி, ஒட்டுமொத்த ஆற்றலையும் … Read more

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆதார் எண் கட்டாயமில்லை: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: கரோனா தடுப்பூசியை பொதுமக்கள் செலுத்திக் கொள்ள ஆதார் எண் கட்டாயமில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. கரோனா தடுப்பூசி முகாம்களை தவிர்த்து, கரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வதற்கு முதலில் கோவின் இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்காக கோவின் இணைய தளத்தில் ஆதார் எண் கேட்கப்படும் என்ற விதிமுறை உள்ளது. இந்நிலையில் இந்த விதிமுறையை நீக்கக் கோரி மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த வழக்கறிஞர் சித்தார்த் சங்கர் சர்மா … Read more

ட்விட்டர் கணக்குகளை சரிபார்க்கும் புதிய முறை: ஜனவரி 20 முதல் தொடக்கம்

ஜனவரி 20 முதல் தங்கள் தளத்தில் புதிதாக சரிபார்க்கும் முறையும், விதிகளும் அமல்படுத்தப்படும் என்றும், சரிபார்க்கப்பட்ட (verified) கணக்குகள் முழுமையற்றோ, பயன்படுத்தப்படாமலோ இருந்தால் அதன் சரிபார்க்கப்பட்ட சின்னம் (badge) நீக்கப்படும் என்றும் ட்விட்டர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தப் புதிய விதிகளின் படி, மீண்டும் மீண்டும் அதிகமாக தங்களது தளத்தின் விதிகளை மீறிய கணக்குகளின் சின்னமும் நீக்கப்படும் என்று ட்விட்டர் தெரிவித்துள்ளது. “அது போன்ற கணக்குகளை ஒவ்வொன்றாக நாங்கள் ஆய்வு செய்வோம். எங்களது விதிகளை அமல்படுத்துவதற்கும், … Read more

பிப்ரவரி 7: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 7) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,15,986 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண் மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் பிப்.6 வரை பிப்.7 பிப்.6 … Read more

ஜேஎன்யு முதல் பெண் துணைவேந்தரானார் சாந்திஸ்ரீ பண்டிட்: முன்னாள் மாணவிக்கு கவுரவம்

புதுடெல்லி: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சாந்திஸ்ரீ பண்டிட் முதல் பெண் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவில் உள்ள சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவி வகித்துவரும் சாந்திஸ்ரீ பண்டிட் தற்போது புதுடெல்லி ஜேஎன்யுவுக்கு துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 59 வயதான சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட் ஜேஎன்யுவின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு அவர் தனது எம்ஃபில் படிப்பை முடித்து சர்வதேச உறவுகளில் (International Relations) ஆய்வு செய்து … Read more

ஜனவரி 1 முதல் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்குகளுக்கும் வாய்ஸ் கால் இலவசம்

ஜனவரி 1 (நாளை) முதல் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்குகளுக்கும் உள்நாட்டு வாய்ஸ் கால் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஏற்கெனவே இந்த வசதி இருந்துவந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இந்த சேவை ரத்து செய்யப்பட்டது. மாறாக ஒரு நிமிடத்திற்கு 6 பைசா வீதத்தில் மற்ற நெட்வொர்க் உள்நாட்டு வாய்ஸ் கால்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) அறிவுறுத்தலின் படி, ஜனவரி 1 முதல் அனைத்து உள்நாட்டு வாய்ஸ் … Read more

பிப்ரவரி 7: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 7) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,15,986 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more

‘‘போலி சோசலிஸ்ட்டுகள்’’- தேர்தல் பிரச்சாரத்தில் சமாஜ்வாதி கட்சி மீது பிரதமர் மோடி கடும் சாடல்

பிஜ்னோர்: உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் ஆட்சிக்காலத்தில் வளர்ச்சி என்பது போலி சமாஜ்வாதிகள் (சோசலிஸ்ட்டுகள்) மற்றும் அவர்களின் நெருங்கியவர்களுடன் நின்று போனது என பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை தேர்தல் நடைபெறுகிறது. கரோனா பரவல் காரணமாக, இந்த ஏழு கட்ட தேர்தலிலும் நேரடிப் பிரச்சாரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. சிறிய குழுக்களுடன் வாக்காளர்களின் வீடு வாசலில் சந்தித்து வாக்கு சேகரிக்க மட்டும் அனுமதிக்கப்பட்டது. முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் … Read more

கூகுள் தேடலில் தனிப்பட்ட வாட்ஸ் அப் குழுக்களின் லிங்க்: மீண்டும் எழும் வாட்ஸ் அப் பாதுகாப்பு அச்சம்!

வாட்ஸ் அப் தனிப்பட்ட குழுக்களின் இணைப்புகள் கூகுள் தேடியந்திரத்தில் தேடினால் கிடைத்திருப்பது மீண்டும் தெரியவந்துள்ளது. அதாவது, இவை ரகசியமான, தனிப்பட்ட வாட்ஸ் அப் உரையாடல் குழுக்களாக இருந்தாலும் அவற்றின் இணைப்பு (லிங்க்) இருந்தால் அதை கூகுளில் தேடியே எளிதில் அந்தக் குழுவில் இணைந்துவிடலாம். சுயாதீன இணையப் பாதுகாப்பு ஆய்வாளர் ராஜேஷகர் என்பவர் இது குறித்துப் பகிர்ந்துள்ளார். இதனால் வாட்ஸ் அப் தனிப்பட்ட குழுக்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்வியெழுந்துள்ளது. அண்மையில், தனிப்பட்ட வாட்ஸ் அப் குழுக்களில் இணையக் … Read more