மின்வாரியத்தில் ரூ.17,000 கோடி இழப்பு; நிர்வாகத்தை சீரமைக்க துணிச்சலான முடிவுகளை எடுக்கவும்: ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: மின் உற்பத்தியை அதிகரிப்பது, நிர்வாக சீர்கேடுகளை களைவது போன்றவற்றின் மூலம் மின்சார வாரியத்தை லாபத்தில் இயக்குவதற்கான துணிச்சலான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: “தமிழக மின்சார வாரியத்தின் இழப்பு 2020-21ம் ஆண்டில் ரூ.17,000 கோடியாக அதிகரித்து இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது மின்சார வாரியத்தின் வரலாற்றில் இதுவரை இல்லாத இழப்பு ஆகும். மின்வாரிய இழப்பு ரூ.12,800 கோடி என்ற அளவில் … Read more