4.6 பில்லியன் டாலர்களை இழந்த எலான் மஸ்க்: பணக்காரர்கள் பட்டியலில் பெஸோஸ் மீண்டும் முதலிடம்
டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சி கண்டதால் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு குறைந்ததையடுத்து அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ், உலகப் பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். செவ்வாய்க்கிழமை அன்று டெஸ்லாவின் பங்குகள் 2.4 சதவீதம் வீழ்ச்சி கண்டது. இதனால் மஸ்க் 4.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்தார். தொடர்ந்து உலகின் 500 பெரும் பணக்காரர்களை வரிசைப்படுத்தும் ப்ளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். 191.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் பெஸோஸ் மீண்டும் … Read more