உ.பி.யின் துறவி முதல்வரான யோகியிடம் 2 துப்பாக்கிகளுடன் ரூ.1.54 கோடி சொத்து: வேட்புமனுவில் தகவல்

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தின் துறவி முதல்வரான யோகி ஆதித்யநாத்திடன் இரண்டு துப்பாக்கிகளுடன் ரூ.1.54 கோடி மதிப்பிலான சொத்தும் இருப்பது தெரிந்துள்ளது. இந்த தகவல், அவர் போட்டியிடும் கோரக்பூரில் தாக்கல் செய்த மனுவில் வெளியாகி உள்ளது. உ.பி.யில் ஆளும் பாஜகவின் முதல்வரான யோகி, சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் முதல்வர் வேட்பாளராக்கப்பட்டுள்ளார். இதனால், உ.பி.யில் ஆளும் பாஜகவின் முதல்வரான யோகி, முதன்முறையாக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் தான் முறை போட்டியிட்டு வென்ற மக்களவை தொகுதியில் அமைந்துள்ள கோரக்பூர் நகர … Read more

ராணுவத்துக்கு எதிராக மியான்மரில் தொடரும் வெள்ளை அங்கி போராட்டம்

யங்கூன்: மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக சுகாதார பணியாளர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். மியான்மரில் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்தது. இது தொடர்பாக மியான்மர் அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் … Read more

ஒருவரின் மரணத்துக்குப் பிறகு, கூகுள், ஆப்பிள் உள்ளிட்ட சேவைகளில் அவர் சேமித்து வைத்திருக்கும் தரவுகள் என்ன ஆகும் என்று யோசித்திருக்கிறீர்களா?

ஒருவரின் மரணத்துக்குப் பிறகு, கூகுள், ஆப்பிள் உள்ளிட்ட சேவைகளில் அவர் சேமித்து வைத்திருக்கும் தரவுகள் என்ன ஆகும் என்று யோசித்திருக்கிறீர்களா? கூகுள் தளம் இதற்காக ஒரு வசதியைச் செய்துள்ளது. கூகுளின் சேவைகளான மேப்ஸ், ஜிமெயில், தேடல், புகைப்படங்கள் ஆகியவற்றை நீங்கள் பயன்படுத்தும் நபர் என்றால், அல்லது உங்களிடம் ஆண்ட்ராய்ட் மொபைல் இருக்குமென்றால் கூகுளிடம் உங்களைப் பற்றிய எக்கச்சக்கமான தரவுகள் இருக்கும். சிலர் கூகுள் பே உள்ளிட்ட செயலிகளில் தங்களின் வங்கிக் கணக்கு விவரங்களையும் கூட சேமித்து வைத்துள்ளனர். … Read more

தமிழகத்தில் 7,000-க்கும் கீழ் குறைந்தது கரோனா தொற்று: சென்னையில் 1,223 பேர் பாதிப்பு – 23,938 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 7,524 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,04,762. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,41,216 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 32,28,151. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 5 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் 1,223 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 33 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் … Read more

கணவரைப் போல நாட்டுக்கு சேவை – கல்வான் தாக்குதலில் உயிர்நீத்த வீரரின் மனைவி 'ராணுவ அதிகாரி' தேர்வில் தேர்ச்சி

சென்னை: கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் உயிர்நீத்த மத்தியப் பிரதேச ராணுவ வீரர் நாயக் தீபக் சிங் என்பவரின் மனைவியும், தனது கணவரை போல நாட்டிற்கு சேவை செய்யும் பொருட்டு ராணுவத்தில் தன்னை இணைத்துக்கொள்ளவுள்ளார். இதற்காக ராணுவத் தேர்வில் அவர் தேர்ச்சிபெற்றுள்ளார். லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி நள்ளிரவில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவினர். அவர்களை நமது வீரர்கள் தடுத்தனர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் 20 … Read more

கரோனா தொற்றால் பிரிட்டன் சுகாதார கட்டமைப்பு செயலிழப்பு?- உதவிக்கு ராணுவம் அழைப்பு

லண்டன்: பிரிட்டனில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சுகாதார கட்டமைப்பே செயலிழக்கும் அளவுக்கு சூழல் செல்வதால் அவர்கள் உதவிக்கு ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் 70 சதவீதம் பேர் தடுப்பூசியை முழுமையாகச் செலுத்திவிட்டனர், பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வரும் நிலையில் அங்கு 3-வது அலை பீதியில் ஆழ்த்தியுள்ளது. பிரிட்டனில் ஒமைக்ரான் பரவல் அச்சத்தால் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தொடர்ந்து 2-வது ஆண்டாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. எனினும் பிரிட்டனில் கரோனா தொற்று 90 ஆயிரத்துக்கும் … Read more

பெயரை மாற்றி ரீ பிராண்டிங்குக்கு தயாராகிறதா பேஸ்புக்? அமெரிக்க ஆட்சியாளர்களின் அழுத்தம் காரணமா?

பேஸ்புக் சமூகவலைதளம் விரைவில் புதிய பெயருடன் ரீ பிராண்டிங்க்குக்கு ஆயத்தமாகி வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிகின்றன. சமூக வலைதள உலகின் ஜாம்பவான் பேஸ்புக். வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஆக்குலஸ் என இன்னும் பல பிரபல சமூக வலைதளங்களையும் வைத்துள்ளது. கடந்த அக்டோபர் 4 ஆம் தேதியன்று இந்தியா உள்பட உலகம் முழுவதும் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. 6 மணி நேரம் வரை இந்தத் தளங்கள் முடங்கின. இதுவே பேஸ்புக்கின் மிகப்பெரிய அவுட்டேஜாகக் … Read more

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 74,416 பேர் வேட்புமனு தாக்கல்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு இறுதி நாளான பிப்.4-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 74,416 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், 12,838 வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அட்டவணையினை 26.01.2022 அன்று தமிழ்நாடு மாநில தேர்தல் … Read more

ஹைதராபாத்தில் பிரமாண்ட ராமானுஜர் சிலை திறப்பு: பிரதமர் மோடி பங்கேற்பு

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நிறுவப்பட்டுள்ள வைணவ ஆச்சாரியார் ராமானுஜர் சிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஹைதராபாத்தை அடுத்துள்ள முச்சிந்தல் பகுதியில், வைணவ ஆச்சாரியார் ராமானுஜர் அவதரித்து 1000 ஆண்டு நிறைவுற்றதை கொண்டாடும் வகையில், சின்ன ஜீயர் ஆஸ்ரமத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ள இடத்தில் பத்ம பீடத்தின் மீது 216 அடிஉயரத்தில் ராமானுஜருக்கு பஞ்சலோக சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை இன்று திறந்து வைக்கப்பட உள்ளது. இவ்விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். ரூ.1,000 … Read more

குலுங்கிய வீடுகள்: சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சீனாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆகப் பதிவானது. இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் தரப்பில், “சீனாவின் குவிங்ஹாய் மாகாணத்தில் சனிக்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ஸின்யிங் நகரிலிருந்து 140 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது. இதன் ஆழம் 10 கி.மீ. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆகப் பதிவானது” என்று தெரிவிக்கப்பட்டது. நிலநடுக்கம் காரணமாகக் கட்டிடங்கள் குலுங்கியதாகவும், உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும் சீன … Read more