ஆகஸ்ட் 3 முதல் ஃப்ளீட்ஸ் வசதியை நீக்கும் ட்விட்டர்
பயனர்களிடம் கிடைத்த மிகச் சுமாரான வரவேற்பைத் தொடர்ந்து ஃப்ளீட்ஸ் வசதியை ட்விட்டர் நிறுவனம் ஆகஸ்ட் 3 முதல் நீக்கவுள்ளது. கடந்த நவம்பர் மாதம் ட்விட்டர் சமூக வலைதளத்தில் ஃப்ளீட்ஸ் என்கிற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. பயனர்கள் ட்வீட் செய்வது மட்டுமல்லாமல், 24 மணி நேரம் மட்டுமே தோன்றும் ட்வீட்டுகளை/ தகவல்களை/ இணைப்புகளை இதில் பகிரலாம். ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பின் ஸ்டோரி/ ஸ்டேட்டஸ் வசதிக்கு இணையாக இது அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், வெர்டிகல் வடிவில் பகிர்வு, … Read more