நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வேட்புனு தாக்கல் நிறைவு; 12,838 உள்ளாட்சி பதவிகளுக்கு60 ஆயிரம் பேர் மனு தாக்கல்: கடைசி நாளில் விறுவிறுப்பாக மனுக்களை அளித்த வேட்பாளர்கள்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன. இவற்றில்12,838 வார்டுகள் உள்ளன. இந்தவார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த ஜன.26-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, வரும் 19-ம்தேதி ஒருகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான … Read more

ஆவேசமாகப் பேசிய திரிணமூல் எம்.பி.; அன்புடன் பேசப் பணித்த மக்களவை துணைத் தலைவர்: பின்னர் நடந்தது என்ன?

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முக்கிய உறுப்பினர்கள் உரையாற்றி வருகின்றனர். நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, “மத்திய அரசு, வரலாற்றை மாற்ற நினைக்கிறது. அதற்கு தங்களின் எதிர்காலத்தை நினைத்துப் பயம் வந்துவிட்டது. நிகழ்காலத்தை இந்த அரசு நம்பவில்லை” என்று பேசினார். அவரது பேச்சின் இடையே குறுக்கிட்ட மக்களவை துணைத் தலைவர் ரமா தேவி, “அன்புடன் பேசுங்கள். இவ்வளவு கோபம் வேண்டாம்” என்று கூறினார். அப்போது … Read more

ஒமைக்ரானைத் தொடர்ந்து சைப்ரஸ் நாட்டில் 'டெல்டாக்ரான்' வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு

நிக்கோஸியா: மத்திய தரைகடல் நாடான சைப்ரஸ் நாட்டில் புதிய வகை கரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஆராய்ச்சியாளர்கள் டெல்டாக்ரான் எனப் பெயர் சூட்டியுள்ளனர். கடந்த 2021 நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் இப்போது உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனால் இந்தியாவில் 3வது அலை கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று சொல்லும் அளவிற்கு பாதிப்பு அன்றாடம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சைப்ரஸ் நாட்டில் 25 பேருக்கு டெல்டாக்ரான் … Read more

முடிவுக்கு வந்தது பிளாக்பெர்ரி சகாப்தம்… இன்று முதல் சேவைகள் கிடைக்காது!

பிளாக்பெர்ரி சகாப்தம் கிட்டத்தட்ட இன்றுடன் முடிவுக்கு வருகிறது. கனடாவைச் சேர்ந்தது பிளாக்பெர்ரி நிறுவனம். தற்போதைய செல்போன் உலகில் ஆப்பிள் ஐபோனுக்கு நிகராக பாதுகாப்பு அம்சங்களில் தனித்தன்மையுடன் செயல்பட்ட நிறுவனமான பிளாக்பெர்ரி போனுக்கென தனி வாடிக்கையாளர்கள் இருந்து வந்தனர். கீபோர்டை மையமாகக் கொண்ட போன்கள் செயல்பாட்டில் இருந்த வரை பிளாக்பெர்ரி புகழ்பெற்றதாக இருந்தது. ஆனால், காலப்போக்கில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் ஆதிக்கம் பெருக, பிளாக்பெர்ரி சரிவை கண்டது. கடைசியாக 2013-ல் அறிமுகப்படுத்தபட்ட BlackBerry 10 மாடல் போன்கள் தனது புகழை … Read more