கரோனாவால் 5 லட்சம் பேரை இழந்த 3-வது நாடு இந்தியா: பிரேசில் இரண்டாவது இடம்

புதுடெல்லி: உலகம் முழுவதும் கரோனா தொற்றின் அடுத்தடுத்த அலை களினால் ஒட்டுமொத்த பாதிப்பு அதிகரித்து வருகிறது. வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த கட்டுப் பாடுகளுடன் தடுப்பூசிகள் செலுத் தும் பணிகளை தீவிரப்படுத்தி வந்தாலும் உருமாற்றம் அடைந்து தொற்று பரவலால் பாதிப்பு, உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று நாட்டில்கரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத் தைக் கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 1,072 பேர் உயிரி ழந்துள்ள நிலையில் நாட்டில் மொத்த இறப்பு எண்ணிக்கை 5,00,055 … Read more

தடுப்பூசிக்கு எதிராக பிரச்சாரம் செய்த பிரான்ஸ் எம்.பி. கரோனா தொற்றால் மரணம்

பிரான்ஸில் கரோனா தடுப்பூசிக்கு எதிராக பிரச்சாரம் செய்த நாடாளுமன்ற எம்.பி. ஒருவர் கரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிரான்ஸில், கரோனாவுக்கு எதிராகத் தடுப்பூசி செயல்படுவது சந்தேகத்துக்குரியது என்று தடுப்பூசிக்கு எதிராகத் தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்ட பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோஸ் எவ்ரார்டு (வலசாரி கட்சியைச் சேர்ந்தவர்) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவருக்கு வயது 76. மறைந்த ஜோஸ் எவ்ரார்டு கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.அவரது மறைவுக்கு பிரான்ஸ் அதிபர் மக்ரோன் இரங்கல் … Read more

சென்னை ஐஐடி மாணவர்களுக்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்த மாஸ்டர் திட்டம் துவக்கம்

சென்னை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்விக் கழக (ஐஐடி) மாணவர்களுக்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்த மாஸ்டர் திட்டத்தை தொடங்கவிருக்கிறது. இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “துறைகளுக்கிடையேயான இந்த இரட்டைப்பட்டம் (IDDD) மாணவர்கள் இ-மொபிலிடியில் ஈடுபடுவதை மேம்படுத்துவதோடு ஐஐடி-யின் பிடெக் மற்றும் இரட்டைப்பட்ட மாணவர்களுக்கு அளிக்கப்படும். இந்த திட்டம் ஆர்வமிக்க துறையில் ஆராய்ச்சி திறன்களை விரிவுப்படுத்தும். தங்களின் பிடெக் மற்றும் இரட்டைப்பட்ட திட்டத்தில் மூன்றாமாண்டு பயிலும்போது ஜனவரி 2022 முதல் இதில் சேர்வார்கள் என்றும், ஆரம்பத்தில் … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வேட்புனு தாக்கல் நிறைவு; 12,838 உள்ளாட்சி பதவிகளுக்கு60 ஆயிரம் பேர் மனு தாக்கல்: கடைசி நாளில் விறுவிறுப்பாக மனுக்களை அளித்த வேட்பாளர்கள்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன. இவற்றில்12,838 வார்டுகள் உள்ளன. இந்தவார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த ஜன.26-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, வரும் 19-ம்தேதி ஒருகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான … Read more

ஆவேசமாகப் பேசிய திரிணமூல் எம்.பி.; அன்புடன் பேசப் பணித்த மக்களவை துணைத் தலைவர்: பின்னர் நடந்தது என்ன?

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முக்கிய உறுப்பினர்கள் உரையாற்றி வருகின்றனர். நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, “மத்திய அரசு, வரலாற்றை மாற்ற நினைக்கிறது. அதற்கு தங்களின் எதிர்காலத்தை நினைத்துப் பயம் வந்துவிட்டது. நிகழ்காலத்தை இந்த அரசு நம்பவில்லை” என்று பேசினார். அவரது பேச்சின் இடையே குறுக்கிட்ட மக்களவை துணைத் தலைவர் ரமா தேவி, “அன்புடன் பேசுங்கள். இவ்வளவு கோபம் வேண்டாம்” என்று கூறினார். அப்போது … Read more

ஒமைக்ரானைத் தொடர்ந்து சைப்ரஸ் நாட்டில் 'டெல்டாக்ரான்' வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு

நிக்கோஸியா: மத்திய தரைகடல் நாடான சைப்ரஸ் நாட்டில் புதிய வகை கரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஆராய்ச்சியாளர்கள் டெல்டாக்ரான் எனப் பெயர் சூட்டியுள்ளனர். கடந்த 2021 நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் இப்போது உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனால் இந்தியாவில் 3வது அலை கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று சொல்லும் அளவிற்கு பாதிப்பு அன்றாடம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சைப்ரஸ் நாட்டில் 25 பேருக்கு டெல்டாக்ரான் … Read more

முடிவுக்கு வந்தது பிளாக்பெர்ரி சகாப்தம்… இன்று முதல் சேவைகள் கிடைக்காது!

பிளாக்பெர்ரி சகாப்தம் கிட்டத்தட்ட இன்றுடன் முடிவுக்கு வருகிறது. கனடாவைச் சேர்ந்தது பிளாக்பெர்ரி நிறுவனம். தற்போதைய செல்போன் உலகில் ஆப்பிள் ஐபோனுக்கு நிகராக பாதுகாப்பு அம்சங்களில் தனித்தன்மையுடன் செயல்பட்ட நிறுவனமான பிளாக்பெர்ரி போனுக்கென தனி வாடிக்கையாளர்கள் இருந்து வந்தனர். கீபோர்டை மையமாகக் கொண்ட போன்கள் செயல்பாட்டில் இருந்த வரை பிளாக்பெர்ரி புகழ்பெற்றதாக இருந்தது. ஆனால், காலப்போக்கில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் ஆதிக்கம் பெருக, பிளாக்பெர்ரி சரிவை கண்டது. கடைசியாக 2013-ல் அறிமுகப்படுத்தபட்ட BlackBerry 10 மாடல் போன்கள் தனது புகழை … Read more