கணினித் தமிழ் விருதுக்கு பிப்.28 வரை விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு

சென்னை: சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களுக்கு முதலமைச்சர் கணினித் தமிழ் விருது பெறுவதற்கான விண்ணப்பங்கள் அனுப்ப இம்மாதம் 28 வரை கடைசி தேதி நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, உலகமெலாம் கணினி வழித் தமிழ் மொழி பரவச் செய்யும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக ‘முதலமைச்சர் கணினித் … Read more

ஓவைசி ஜி… 'இசட்' பிரிவு பாதுகாப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் – மாநிலங்களவையில் அமித் ஷா வலியுறுத்தல்

புதுடெல்லி: ஹைதராபாத் மக்களவை எம்.பி அசாதுதீன் ஒவைசியை மத்திய அரசின் ‘இசட்’ பிரிவு பாதுகாப்புச் சலுகையை ஏற்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டுக்கொண்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் கடந்த வாரம் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு காரில் டெல்லி திரும்பிக் கொண்டிருந்த ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசியின் கார் மீது 2 பேர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் கார் சேதமடைந்தது. வேறொரு காரில் ஏறி ஒவைசி டெல்லி சென்றார். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணையையும் … Read more

‘‘ஒட்டுவேலை’’- லோகோவை மாற்றிய கூகுள் குரோம்: நெட்டிசன்கள் விமர்சனம்

கூகுள் குரோம் 8 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தனது லோகோவை மாற்றியுள்ள நிலையில் பழைய மற்றும் புதிய லோகோவிற்கும் வித்தியாசம் தெரியவில்லை என்று நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக, கூகுள் குரோம் தனது லோகோவை மாற்றியுள்ளது. லோகோவின் நிறங்கள் எதுவும் மாற்றப்படவில்லை. இதில் உள்ள சிகப்பு, நீலம், பச்சை மற்றும் மஞ்சள் போன்ற நிறங்களின் சேர்க்கை சற்று அதிகப்படுத்தப்பட்டு நிழல்கள் நீக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக லோகோ அதிக மாற்றங்கள் … Read more

நீட் தேர்வு | நாடகத்தை நிறுத்திவிட்டு உச்ச நீதிமன்றத்தை நாடுங்கள் – தமிழக அரசுக்கு தமாகா வலியுறுத்தல்

சென்னை: சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் போன்ற நாடகங்களை நிறுத்திவிட்டு நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடவேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி தலைவர் எம்.யுவராஜா கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “திமுக அரசு தங்களது தேர்தல் வாக்குறுதிகளை 90% நிறைவேற்றப்படாத அரசாக கடந்த 9 மாத காலமாக செயல்பட்டுக் கொண்டு வருகிறது. குறிப்பாக தேர்தலுக்கு முன்பாக திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக முன்னணி தலைவர்கள் முதல் சட்டப்பேரவை கூட்டத் … Read more

விளக்கம் தேவையில்லை; மன்னிப்பு கோருங்கள்: ஹூண்டாய் நிறுவனத்துக்கு சிவசேனா எம்.பி. கெடுபிடி

காஷ்மீர் பிரிவினவாதிகளை ஆதரித்து பாகிஸ்தானைச் சேர்ந்த ஹூண்டாய் மோட்டார் டீலர் ஒருவர் பதிவிட்ட ட்வீட் வைரலான நிலையில் அது குறித்து ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் அளித்துள்ள விளக்கம் போதுமானதாக இல்லை எனக் கூறி மன்னிப்பு கோர வலியுறுத்தியுள்ளார் சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி. முன்னதாக @hyundaiPakistanOfficial என்ற ட்விட்டர் பக்கத்தில், காஷ்மீரின் விடுதலைக்காகப் பிரார்த்தனை செய்கிறோம். காஷ்மீர் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்தவர்களை நினைவுகூர்கிறோம் என்று பதியப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்தியளவில் #BoycottHyundai ட்ரெண்டானது. இந்திய அளவில் ஹூண்டாய் தயாரிப்புகளுக்கு … Read more

கோவிட், தடுப்பூசி குறித்த தவறான தகவல்களை நீக்க ஃபேஸ்புக் நடவடிக்கை

இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் கோவிட்-19 தொற்று மற்றும் அதற்கான தடுப்பு மருந்துகள் குறித்து தவறாகப் பரப்பப்படும் தகவல்களை நீக்குவதற்கான முயற்சிகளை அதிகரிப்பதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது. கோவிட்-19 மனிதர்களால் உருவாக்கப்பட்டது, தடுப்பு மருந்துகள் சரியாக வேலை செய்வதில்லை, அது ஆபத்தானது, ஆட்டிஸம் உள்ளிட்ட நோய்கள் வரும், தடுப்பு மருந்தைவிட கோவிட்-19 தொற்று வருவதே சிறந்தது என்பன உள்ளிட்ட பல வகையான விஷயங்களை நீக்கப்போவதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது. உலக சுகாதார மையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடன் கலந்தாலோசித்த பிறகு இந்த … Read more

பொய் சொல்ல கூச்சமில்லாதவர்கள் மத்தியில் உண்மையைப் பேச தயங்காதீர்- தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் உத்வேகக் கடிதம்

சென்னை: “பொய் சொல்வதற்கே சிலர் கொஞ்சமும் கூச்சப்படாதபோது, உண்மையைப் பேசுவதற்கு நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள்?” என்று திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகளை ஒட்டி திமுக தொண்டர்கள் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்: ”நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல். நல்லாட்சி வழங்கி வரும் திமுக அரசின் திட்டங்கள் உள்ளாட்சிவரை படிநிலைகளின் வழியே ஊடுருவிச் சென்று, ஒவ்வொரு ஊரிலும், அதில் … Read more

தேரா சச்சா தலைவர் குர்மீத் ராம் ரஹீமுக்கு 21 நாள் பரோல்: பஞ்சாப் தேர்தலில் ஆதாயம் தேடும் நடவடிக்கையா?

சண்டிகர்: கொலை மற்றும் பாலியல் பலாத்கார வழக்கில் ஆயுள் கைதியாக ஹரியாணா சுனாரியா சிறையில் உள்ள தேரா சச்சா தலைவர் ராம் ரஹீம் சிங்குக்கு 21 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, பஞ்சாப் தேர்தலை ஒட்டிய நகர்வாக இருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஹரியாணா மாநிலத்தில் தேரா சச்சா சவுதா சிர்ஸா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவராக குர்மீத் ராம் ரஹீம் சிங் உள்ளார். இந்த அமைப்பின் மேலாளர் ரஞ்சித் சிங், 2002 ஜூலை … Read more

வலுப்பெறும் டிரக் ஓட்டுநர்கள் போராட்டம்: கனடா தலைநகரில் அவசரநிலை பிரகடனம்

ஒட்டா: தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவை எதிர்த்து கனடாவில் டிரக் (லாரி) ஓட்டுநர்களின் போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், தலைநகர் ஒட்டாவாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கரோனா பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளதைத் தொடர்ந்து, கனடாவில் அதன் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க அந்நாட்டு அரசு கரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது. பொது இடங்களில் நடமாடுவோர், பொதுப் போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டது. மேலும், லாரி ஓட்டுநர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என்றும், தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவர் என்றும் அரசு … Read more

8 ஆண்டுகளுக்கு பின் லோகோவை மாற்றிய கூகுள் குரோம்

கூகுள் குரோம் 8 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தனது லோகோவை மாற்றியுள்ளது. கூகுள் நிறுவனம் 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக, தனது குரோம் லோகோவை மாற்றியுள்ளது. லோகோவின் நிறங்கள் எதுவும் மாற்றப்படவில்லை. இதில் உள்ள சிகப்பு, நீலம், பச்சை மற்றும் மஞ்சள் போன்ற நிறங்களின் சேர்க்கை சற்று அதிகப்படுத்தப்பட்டு நிழல்கள் நீக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக லோகோ அதிக மாற்றங்கள் இன்றி அதேசமயம் நேரலை போன்ற அனுபவத்தை கொடுக்கிறது. புதிய மாற்றங்களின் படி விண்டோஸ், மேக் … Read more