வானில் இன்று ஒரே நேரத்தில் நிகழும் ரத்த நிலவு, முழு சந்திர கிரகணம்: வெறும் கண்களால் காணலாம்

வானில் இன்று ஒரே நேரத்தில் ரத்த நிலவு, முழு சந்திர கிரகணம் என்னும் இரண்டு அரிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இவற்றை வெறும் கண்களால் காண முடியும். சந்திர கிரகணம் சூரியன் – பூமி – சந்திரன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, சூரிய ஒளி நிலவில் படாது. அந்த நிகழ்வே சந்திர கிரகணம் ஆகும். நடப்பாண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று (மே 26ஆம் தேதி) பவுர்ணமி நாளன்று நிகழவுள்ளது. மூன்று வகையான சந்திர கிரகணங்கள் … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: ஈபிஎஸ், ஓபிஎஸ் நாளை முதல் தீவிர பிரச்சாரம்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவுள்ள, வேட்பாளர்களை அதரித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் நாளை முதல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளனர். இது குறித்து அதிமுக அலுலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: “நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 19.2.2022 அன்று நடைபெற உள்ளதையொட்டி, அதிமுக சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி 7.2.2022 … Read more

அயோத்தி ரத யாத்திரைக்காக லதா மங்கேஷ்கர் பாடிய ராமர் பஜனையை மறக்கமுடியாது : எல்.கே.அத்வானி புகழஞ்சலி

அயோத்தியில் ரத யாத்திரைக்காக லதா மங்கேஷ்கர் பாடிய பாடலை மறக்கவே முடியாது என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரபலமான பாடகர்கள் பலர் இருந்தாலும், லதா ஜி தான் எனக்கு எப்போதும் பிடித்தமான பாடகர் லதா மங்கேஷ்கர் மட்டும் தான். அவருடன் நீண்ட நட்பு பாராட்டியதை நான் அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். உத்தரப் பிரதேசத்தில் சோம்நாத் நகரில் இருந்து அயோத்தி வரை நான் ராம் ரத யாத்திரை … Read more

ஆடியோ செய்திகளின் வேகத்தைக் கட்டுப்படுத்தலாம்: வாட்ஸ் அப்பில் புதிய வசதி அறிமுகம்

வாட்ஸ் அப்பில் பிறர் அனுப்பும் ஆடியோ செய்திகளின் வேகத்தை அதிகரித்துப் பயன்படுத்தும் வகையில், புதிய வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பிரபல குறுஞ்செய்தி நிறுவனமான வாட்ஸ் அப், ஃபேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமானது. இந்நிறுவனம் தன்னுடைய பயனர்களுக்கு அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் வாட்ஸ் அப்பில் நாம் அனுப்பும் ஆடியோ செய்திகளின் வேகத்தை அதிகரிக்கும் வகையில், புதிய வசதியை அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் … Read more

'பாஜகவிற்கு பல்லக்கு தூக்குவதே அதிமுகவின் தலையாய பணி': அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு

சென்னை: சமத்துவ விரோத பாஜகவுக்குப் பல்லக்கு தூக்குவதே அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தலையாய பணி என தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: “எங்கள் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் துவங்கவிருக்கும் அனைத்து இந்திய சமூகநீதிக் கூட்டமைப்பில் சேருவதற்கு விடுத்த அழைப்பை ஏற்க மறுத்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவிற்கும் சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம், எங்களை ஏன் அழைக்கிறீர்கள்” என்று சொல்ல 7 பக்க அறிக்கை அளித்திருப்பது … Read more

ஹிஜாப் தடையால் பெண் கல்வி பாதிக்கப்படும்: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி

பெங்களூரு: ஹிஜாப் தடையால் பெண் கல்வி மேலும் பாதிக்கப்படும் என ஐக்கிய ஜனதா தள தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான குமாரசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னதாக, கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கல்லூரி நிர்வாகம் தங்களது உடை … Read more

ஜியோபோன் நெக்ஸ்ட்; மலிவு விலையில் ஒரு ஸ்மார்ட்போன்: கூகுளுடன் இணைந்து ரிலையன்ஸ் அறிமுகம்

கூகுள் நிறுவனத்துடன் இணைந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோபோன் நெக்ஸ்ட் என்ற புதிய வகை செல்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டே இதற்கான அறிவிப்பு வெளியான நிலையில் இன்று இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக இன்று காலை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெடின் 44வது வருடாந்திர பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானி, கூகுள் நிறுவனத்துடன் இணைந்து ஜியோ குழு ஒரு ஸ்மார்ட்ஃபோனை உருவாக்கியுள்ளது. ஜியோபோன் நெக்ஸ்ட் எனப் பெயரிடப்பட்டுள்ள உள்ள இந்த ஃபோனை … Read more

பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கர் மறைவு: தமிழக முதல்வர் , அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் புகழஞ்சலி

சென்னை: மறைந்த பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழசை சவுந்தரராஜன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாடலாசிரியர் வைரமுத்து, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோரும் தங்களது புகழஞ்சலியை உரித்தாக்கி வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் : “இந்தியாவின் இசைக் குயில் லதா மங்கேஷ்கர் அவர்கள் மறைந்த செய்தியால் … Read more

லதா மங்கேஷ்கர் மறைவு எதிரொலி: உ.பி. தேர்தல் அறிக்கை வெளியீட்டை தள்ளிவைத்தது பாஜக 

லக்னோ: பிரபல பின்னணிப் பாடகர் லதா மங்கேஷ்கர் மறைவை ஒட்டி, இன்று நடப்பதாக இருந்த உத்தரப் பிரதேச தேர்தல் அறிக்கை வெளியீட்டை பாஜக தள்ளிவைத்துள்ளது. கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கர் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 92. 20 நாட்களுக்கும் மேலாக கரோனா தொற்றுக்காக மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு இன்று காலை அடுத்தடுத்த பல உறுப்புகளும் செயலிழக்க 8.30 … Read more

லதா மங்கேஷ்கர் மறைந்தாலும் அவரது பாடல்கள் இதயங்களைக் கட்டி ஆளும்: பாக். அமைச்சர் புகழஞ்சலி

இஸ்லாமாபாத்: தலைசிறந்த பாடகர் மறைந்தாலும் அவரது பாடல்கள் இதயங்களைக் கட்டி ஆளும் என்று பாடகர் லதா மங்கேஷ்கர் மறைவுக்கு பாகிஸ்தான் அமைச்சர் பவாத் ஹுசைன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கர் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 92. லதா செப்டம்பர் 28, 1929 அன்று பாரம்பரிய பாடகரும் நாடகக் கலைஞருமான பண்டிட் தீனாநாத் மங்கேஷ்கர் மற்றும் ஷெவந்தி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். மறைந்த … Read more