பெண்களின் மனநிலையை பாதிக்கும் இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் இளம்பெண்களின் மனநிலையை பாதிப்பதாக ஃபேஸ்புக் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளம் தலைமுறைகளிடத்தில் அதிக அளவில் பயன்பாட்டில் இருக்கும் சமூக வலைதளங்களில் ஒன்று இன்ஸ்டாகிராம். இதைப் பயன்படுத்துபவர்களில் 40%க்கும் மேலானோர் 20 வயதுக்குக் குறைவானவர்கள். இந்த நிலையில் சமீபத்தில், ஃபேஸ்புக் நிறுவனம் இன்ஸ்டாகிராம் சார்ந்து ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது. அந்த ஆய்வின் முடிவுகள்தான் தற்போது இன்ஸ்டாகிராம் பயன்பாடு குறித்த கேள்வியை அதிகரித்துள்ளது. அதாவது, இன்ஸ்டாகிராம் இளம்பெண்கள் தங்களின் உடல், அழகு, தோற்றம் … Read more

நீட் விலக்கு மசோதா: பிப்.8-ல் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம்

சென்னை: நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவை மீண்டும் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறுவதற்காக பிப்.8-ல் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக ஏழை, எளிய மாணவர்களை பெரிதும் பாதிக்கும் என உணர்ந்த நமது முதல்வர், கடந்தாண்டு செப்.13-ம் தேதி நீட் தேர்வு தமிழகத்துக்கு தேவையில்லை என்பதை அறிந்து அதற்கு ஒரு சட்டமுன்வடிவினை கொண்டு வந்தார். சட்டமன்றத்தில் முழுமையாக விவாதிக்கப்பட்டு, ஒருமனதாக அந்த தீர்மானம் … Read more

‘‘வெட்கக்கேடானது’’- பிரதமர் மோடியை வரவேற்காமல் புறக்கணித்த தெலங்கானா முதல்வருக்கு பாஜக, காங்கிரஸ் கண்டனம்

ஹைதராபாத்: பிரதமர் மோடியை விமான நிலையத்தில் வரவேற்காமல் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் புறக்கணித்த நிலையில், அரசியல் சட்டத்தின் நெறிமுறைகளை மீறுவது கேசிஆரின் செயல் வெட்கக்கேடானது என பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. ஹைதராபாத்தில் நிறுவப்பட்டுள்ள ராமானுஜரின் 216 அடி உயர ‘சமத்துவ சிலை’ திறப்பு விழாவில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியை விமான நிலையம் வந்தார். ஆனால், பிரதமரை வரவேற்க தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் விமான நிலையம் வரவில்லை. ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய சுற்றுலாத்துறை … Read more

தனக்குத் தானே டூடுல் வெளியிட்டுக் கொண்ட கூகுள்: என்ன காரணம்?

கூகுள் நிறுவனம் தொடங்கப்பட்டு 23 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் வகையில், தனக்குத் தானே டூடுல் வெளியிட்டு, சிறப்பித்துக் கொண்டுள்ளது. அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் 1995-ம் ஆண்டு லாரி பேஜூம், செர்கி பிரினும் அறிமுகமாயினர். கணினி சார்ந்து தீவிரத் தேடல் உடைய இருவரும் ஸ்டான்போர்ட் பல்கலை.யில் ஆய்வுத் திட்டத்துக்காக மேற்கொண்ட ஆராய்ச்சியில் கூகுள் நிறுவனத்தைத் தொடங்கினர். 1998-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி கூகுள் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில், கூகுளைத் தொடர்ந்து நடத்தும் எண்ணம் அவர்களுக்கு இல்லை. நிறுவனத்தை விற்க … Read more

பிப்ரவரி 5: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 5) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,04,762 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண் மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் பிப். 4 வரை பிப். … Read more

தமிழ் மொழிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார் ராமானுஜர்.. – பிரதமர் மோடி பேச்சு

ஹைதராபாத்: வைணவ ஆச்சாரியார் ராமானுஜர் அவதரித்து 1000 ஆண்டு நிறைவுற்றதை கொண்டாடும் வகையில், ஹைதராபாத்தை அடுத்துள்ள முச்சிந்தல் பகுதியில், சின்ன ஜீயர் ஆஸ்ரமத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ள இடத்தில் பத்ம பீடத்தின் மீது 216 அடிஉயரத்தில் ராமானுஜருக்கு பஞ்சலோக சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை இன்று திறந்து வைக்கப்பட்டது. இவ்விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஹைதராபாத் நகருக்கு விமானம் மூலம் வந்தார். ஆனால் பிரதமரை வரவேற்க தெலங்கானா … Read more

இந்தியாவின் கிராமப்புறத்தில் முதல் 5ஜி சோதனை: ஏர்டெல் – எரிக்ஸன் கூட்டு முயற்சி

5ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் இருக்கும் டிஜிட்டல் பாகுபாட்டைச் சரிசெய்யும் என்று காட்டும் விதமாக, முதல் முறையாக இந்தியாவின் கிராமப்புறப் பகுதியில் 5ஜி சோதனை ஓட்டத்தை ஏர்டெல் நிறுவனமும், மொபைல் கருவி உற்பத்தியாளரான எரிக்ஸன் நிறுவனமும் நடத்திக் காட்டியுள்ளன. டெல்லி நகரத்தைத் தாண்டி, பாய்பு பிரம்மணன் கிராமத்தில் இந்த சோதனை நடைபெற்றது. இதற்காக பிரத்யேக 5ஜி அலைக்கற்றை, தொலைத்தொடர்புத் துறையால் ஒதுக்கப்பட்டிருந்தது. மேம்படுத்தப்பட்ட மொபைல் பிராட்பேண்ட் மற்றும் நிலையான கம்பியில்லா இணப்பு சேவைகள் வழியாக எல்லாப் பகுதிகளிலும் அதிவேக … Read more

பிப்ரவரி 5 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 5) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,04,762 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ : எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு … Read more

உ.பி.யின் துறவி முதல்வரான யோகியிடம் 2 துப்பாக்கிகளுடன் ரூ.1.54 கோடி சொத்து: வேட்புமனுவில் தகவல்

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தின் துறவி முதல்வரான யோகி ஆதித்யநாத்திடன் இரண்டு துப்பாக்கிகளுடன் ரூ.1.54 கோடி மதிப்பிலான சொத்தும் இருப்பது தெரிந்துள்ளது. இந்த தகவல், அவர் போட்டியிடும் கோரக்பூரில் தாக்கல் செய்த மனுவில் வெளியாகி உள்ளது. உ.பி.யில் ஆளும் பாஜகவின் முதல்வரான யோகி, சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் முதல்வர் வேட்பாளராக்கப்பட்டுள்ளார். இதனால், உ.பி.யில் ஆளும் பாஜகவின் முதல்வரான யோகி, முதன்முறையாக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் தான் முறை போட்டியிட்டு வென்ற மக்களவை தொகுதியில் அமைந்துள்ள கோரக்பூர் நகர … Read more

ராணுவத்துக்கு எதிராக மியான்மரில் தொடரும் வெள்ளை அங்கி போராட்டம்

யங்கூன்: மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக சுகாதார பணியாளர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். மியான்மரில் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்தது. இது தொடர்பாக மியான்மர் அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் … Read more