காசாவுக்கு உதவிப் பொருட்களை நிறுத்தியது இஸ்ரேல்: போர் குற்றம் என ஹமாஸ் அமைப்பு கண்டனம்

டெல் அவிவ்: ​காசாவுக்கு செல்​லும் உதவிப் பொருட்​கள் விநி​யோகத்தை இஸ்ரேல் நிறுத்​திக் கொண்டது. இதற்கு ஹமாஸ் தீவிர​வா​திகள் கடும் கண்டனம் தெரி​வித்​துள்ளனர். பாலஸ்​தீனத்​தில் ஹமாஸ் தீவிர​வா​தி​களுக்​கும் இஸ்ரேலுக்​கும் இடையில் சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்​டது. அதன்​பிறகு இரு தரப்​பிலும் பிணைக் கைதிகள் விடுவிக்​கப்​பட்​டனர். முதல்​கட்​டமாக மேற்​கொள்​ளப்​பட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தம் கடந்த சனிக்​கிழமை முடிவடைந்​தது. அதற்கு முன்ன​தாகவே 2-ம் கட்ட சண்டை நிறுத்தம் குறித்து பேச்சு​வார்த்தை நடத்த தயார் என்று ஹமாஸ் தீவிர​வா​திகள் அறிவித்​தனர். பதில் இல்லை: … Read more

மத்திய பல்கலை. சேர்க்கைக்கான க்யூட் நுழைவுத் தேர்வு மே 8-ல் தொடக்கம்

சென்னை: மத்திய பல்கலைக்​கழகங்​களில் இளநிலை படிப்பு​களில் சேரு​வதற்கான க்யூட் தேர்வு கணினி வழியில் மே 8-ல் தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக என்டிஏ அறிவித்​துள்ளது. நாடு முழு​வதும் உள்ள மத்திய பல்கலைக்​கழகங்கள் மற்றும் அதன்​கீழ் இயங்​கும் கல்லூரி​களில் இளநிலை, முது​நிலை பட்டப்​படிப்பு​களில் சேர பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்​வில் (க்யூட்) தேர்ச்சி பெறவேண்​டும். இந்த தேர்வை தேசிய தேர்​வுகள் முகமை (என்​டிஏ) ஆண்டு​தோறும் நடத்தி வருகிறது. அதன்​படி, அடுத்த கல்வி​யாண்​டில் (2025-26) இளநிலை … Read more

உத்தராகண்ட் பனிச்சரிவு: உயிரிழப்பு எண்ணிக்கை உயர்வு

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் சமோலியில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. பத்ரிநாத் கோயில் அமைந்துள்ள பகுதியிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள மனா கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், அப்பகுதியில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 54 தொழிலாளர்கள் தங்கியிருந்த 8 கண்டெய்னர்களும் சிக்கிக் கொண்டன. இதையடுத்து, பேரிடர் மீட்பு குழு மீட்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளது. நேற்று மேலும் ஒருவரது உடல் … Read more

உக்ரைனுக்கான அமெரிக்காவின் ஆயுத உதவிகள் திடீர் நிறுத்தம்: டிரம்ப் – ஜெலன்ஸ்கி மோதலை தொடர்ந்து நடவடிக்கை

வாஷிங்டன்: உக்ரைனுக்கு வழங்கிய ஆயுத உதவிகளை அமெரிக்கா திடீரென நிறுத்தி உள்ளது. எனினும் பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. 2022 பிப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன், உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவிகளை வழங்கி வந்தார். கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற ட்ரம்ப், உக்ரைனுக்கான ஆயுத உதவிகளை படிப்படியாக நிறுத்தி வந்தார். இந்த சூழலில் … Read more

லண்டனில் சிம்பொனி அரங்கேற்றம்: இளையராஜாவை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: லண்டனில் சிம்பொனி அரங்கேற்றம் செய்யவுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். வரும் 8-ம் தேதி லண்டனில் மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனியை இசையமைப்பாளர் இளையராஜா அரங்கேற்றம் செய்ய உள்ளார். இதையொட்டி, இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவிக்க சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு அவரை இளையராஜா பொன்னாடை போர்த்தி வரவேற்றார். தொடர்ந்து முதல்வரும் இளையராஜாவிடம் தமிழக அரசு சார்பாகவும், என் சார்பாகவும், முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதி … Read more

அமிர்தசரஸ் விமான நிலையத்தில் ரூ.8 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

அமிர்தசரஸ்: மலேசியாவில் இருந்து பஞ்சாப் வந்த விமான பயணியிடம் ரூ.8 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. பஞ்சாப்பில் உள்ள அமிர்தசரஸ் விமான நிலையத்தில், மலேசியாவில் இருந்து வந்த மன்தீப் சிங் என்ற பயணியிடம் கடந்த 26-ம் தேதி சோதனையிடப்பட்டது. அவர் கொண்டுவந்த பையில் 8.17 கிலோ போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இதன் மதிப்பு சுமார் 8.17 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பயணி போதைப் பொருள் கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது … Read more

தமிழ்நாடு காங்கிரஸை வலிமைப்படுத்த 42 நிர்வாகிகளிடம் கருத்துகேட்ட மேலிட பொறுப்பாளர்

சென்னை: தமிழ்​நாடு காங்​கிரஸை வலிமைப்​படுத்துவது குறித்து கட்சி​யின் 42 நிர்வாகிகளிடம் காங்​கிரஸ் மேலிட பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்கர் நேற்று தனித்​தனியே கருத்துகளை கேட்​டறிந்​தார். தமிழ்​நாடு காங்​கிரஸில், மாநிலத் தலைமைக்கு எதிராக அண்மை​யில் 20-க்​கும் மேற்​பட்ட மாவட்ட காங்​கிரஸ் தலைவர்கள் எம்.எஸ்​.​திர​வியம் தலைமை​யில் டெல்லி சென்று, தமிழகத் தலைவர் செல்​வப்​பெருந்​தகையை மாற்​றக்​கோரி கட்சி​யின் தமிழக மேலிட பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்கரை சந்தித்து புகார் அளித்​தனர். இந்நிலையில், தமிழ்​நாடு காங்​கிரஸின் மேலிட பொறுப்​பாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட கிரிஷ் சோடங்கர் நேற்று … Read more

கேரளாவில் மாணவர்கள் இடையிலான மோதலில் சிகிச்சை பெற்றவர் உயிரிழப்பு

கோழிக்கோடு: கேரளாவில் மாணவர்களிடையே ஏற்பட்ட சண்டையில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றவர் நேற்று உயிரிழந்தார். இது தொடர்பாக 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம், தமரசேரி நகரில் ஒரு தனியார் டியூஷன் சென்ட்டர் உள்ளது. அங்கு கடந்த பிப்ரவரி 23-ம் தேதி நடைபெற்ற பிரியாவிடை நிகழ்ச்சியில் 10-ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்று நடனமாடி உள்ளனர். அப்போது இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலின்போது, தற்காப்புக் கலைக்கு பயன்படுத்தப்படும் நன்சுக் (கயிறால் இணைக்கப்பட்ட … Read more

தொகுதி மறுசீரமைப்பு குறித்து முதல்வர் பேசுவது மோசடியானது: ஹெச்.ராஜா விமர்சனம்

தொகுதி மறுசீரமைப்பு குறித்து குடியரசுத் தலைவர், பிரதமர், தேர்தல் ஆணையர் என யாரும் எதுவும் சொல்லாதபோது, அதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுவது மோசடியானது என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் நேற்று நடைபெற்ற கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்ட ஹெச்.ராஜா, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இல்லாத பிரச்சினையை, கற்பனையாக மக்களிடையே புகுத்தி, மாநிலத்தை எப்போதும் கொந்தளிப்பில் வைத்திருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கருதுகிறார். நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு குறித்து … Read more

ஆக்கிரமிப்பு காஷ்மீரை பிரதமர் மோடியால் மட்டுமே மீட்க முடியும்: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். காஷ்மீர் முழுவதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று கடந்த 1994-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் 25-வது ஆண்டு தினம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசியதாவது: கடந்த 1947-ம் ஆண்டில் இந்தியா விடுதலை அடைந்தது. அப்போது நேரு மற்றும் ஜின்னாவின் தனிப்பட்ட விருப்பங்கள் காரணமாகbs இந்தியா, பாகிஸ்தான் … Read more