பதவி இல்லை என்றதும் கட்சிக்கே துரோகம் செய்தவர்தான் ஓ.பன்னீர்செல்வம்: பழனிசாமி குற்றச்சாட்டு

பதவி இல்லை என்றதும் கட்சிக்கே துரோகம் செய்தவர்தான் ஓ.பன்னீர்செல்வம் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டம் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள மதுராபுரியில் நடைபெற்றது. இதில், நலத்திட்ட உதவிகளை வழங்கி பழனிசாமி பேசியதாவது: எம்ஜிஆர், ஜெயலலிதா என இரு தலைவர்களை முதல்வர்களாக உயர்த்தியது தேனி மாவட்டம்தான். இதனால், தேனி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக தேனி மாவட்டத்துக்கு … Read more

ம.பி.யில் பறவைக் காய்ச்சலால் 21 நாட்களுக்கு சந்தை மூடல்

போபால்: மத்திய பிரதேசத்தில் பறவைக் காய்சல் ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள சிந்த்வாரா பகுதி சந்தையானது 21 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா பகுதியிலுள்ள சந்தையில் பறவைக் காய்ச்சல் ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளது. இதையடுத்து அங்கிருந்த பறவைகள், பூனைகளின் மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில் அங்கிருந்த 3 பூனைகள், பறவைக்கு ஏவியன் இன்ப்ளூயன்சா (எச்பிஏஐ) எனப்படும் பறவைக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த வகை காய்ச்சலானது கடந்த 2022-ல் அமெரிக்காவில் தோன்றி உலகம் முழுவதும் … Read more

கொடைக்கானலில் சாரல் மழையில் நனைந்தபடி இயற்கை எழிலை ரசித்த சுற்றுலா பயணிகள் 

திண்டுக்கல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் சாரல்மழையில் நனைந்தபடி சுற்றுலா பயணிகள் இயற்கை எழிலை ரசித்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டது. அதிக வெப்பம் காரணமாக வனப்பகுதியில் சில இடங்களில் தீபற்றியும் எரிந்தது. கோடை வெயிலின் தாக்கம் முன்னதாகவே துவங்கியது என்று எண்ணிய நிலையில், கடந்த இருதினங்களாக மலைப்பகுதிகளில் சாரல் மழை பெய்யத்துவங்கி குளுமையான சூழல் நிலவியது. இன்று காலை முதல் அவ்வப்போது சாரல் மழை பெய்தது, இதன் காரணமாக எதிரே … Read more

மகாராஷ்டிரா யாத்திரையில் மத்திய அமைச்சரின் மகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: போலீஸார் வழக்குப் பதிவு

மும்பை: மகாராஷ்டிராவின் ஜல்கானில் நடந்த சந்த் முக்தாய் யாத்திரையின் போது தனது மைனர் மகளும் அவரது தோழிகளும் சில ஆண்களால் துன்புறுத்தப்பட்டதாக குற்றம்சாட்டி, பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ரக்‌ஷா காட்சே ஞாயிற்றுக்கிழமை (மார்ச்.03) வழக்கு பதிவு செய்துள்ளார். அதற்கு குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவர் என முதல்வர் பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய காட்சே, “ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரியின் போது, இந்தத் பகுதியில் சந்த் முக்தாய் … Read more

இஸ்லாமியர்களால் விஜய்க்கு அச்சுறுத்தலா? – விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசுக்கு தவெக கண்டனம்

சென்னை: இஸ்லாமியர்களால் விஜய்க்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அதனை காரணம் காட்டி அவர் பாதுகாப்புப் பெற்றதாகவும் விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு பேசியிருப்பதற்கு தமிழக வெற்றிக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் தாஹிரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இஸ்லாமியர்கள் அச்சுறுத்தல் எனக் காரணம் காட்டி தவெக தலைவர் பாதுகாப்புப் பெற்றதாக அபாண்டமான ஒரு பொய்யினைத் தொலைக்காட்சி ஊடக விவாதம் ஒன்றில் பேசியிருக்கும் வன்னியரசுக்கு தவெக சார்பில் … Read more

மணிப்பூர் சாலைகளில் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதை உறுதி செய்ய வேண்டும்: மத்திய அமைச்சர் அமித் ஷா

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள அனைத்து சாலைகளிலும் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதை பாதுகாப்புப் படையினர் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு மே முதல் மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி, குக்கி இனத்தவர் இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் மூண்டது. அது இன்று வரை தொடர்கிறது. இந்த இன கலவரத்தால் பாதிக்கப்பட்டு 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், அங்கு முதல்வராக இருந்த பிரேன் சிங் ராஜினாமா செய்தார். இதையடுத்து … Read more

தேர்தலுக்கான திமுகவின் ஆயுதமே மொழிப்போர்: அன்புமணி விமர்சனம்

கோவை: தேர்தலுக்கான திமுக-வின் ஆயுதம் தான் மொழிப்போர் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. முதல்வருக்கு தமிழகத்தில் என்ன நடக்கிறது எனத் தெரிவதில்லை. பாலியல் குற்றங்களை முதல்வரும், காவல்துறையும் வேடிக்கை பார்க்கின்றனர். போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது. நாங்கள் குழந்தை பருவத்தில் இருக்கும் போது பள்ளிக்கு வெளியில் கம்மர்கட்டு விற்பார்கள், ஆனால் தற்போது கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. … Read more

சுரங்கத்தில் சிக்கிய 8 பேர் உயிரிழப்பு: தெலங்கானா அமைச்சர் தகவல்

ஹதராபாத்: தெலங்கானாவில் சுரங்கத்தில் சிக்கிய 8 தொழிலாளர்கள் உயிரிழந்து விட்டனர். அவர்களின் உடல்கள் சேற்றில் புதைந்திருப்பது ரேடார் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது என்று மாநில அமைச்சர் ஜூபல்லி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார். ஸ்ரீசைலம் இடது தண்ணீர் கால்வாய் திட்டத்தில் எஸ் எல்பிசி சுரங்கம் தோண்டப்பட்டது. கடந்த வாரம் சுரங்கத்தின் மேற்கூரை திடீரென சரிந்ததால் 8 தொழிலாளர்கள் சுரங்கத்துக்குள் சிக்கி கொண்டனர். இவர்களை மீட்க ராணுவம், பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்பு படை, காவல் துறை என 9 படைகளின் வீரர்கள் … Read more

“அரசியல் செய்ய அண்ணாமலை இருக்கிறார்; ஆளுநர் போட்டியிட வேண்டாம்” – அமைச்சர் ரகுபதி

சென்னை: அரசியல் செய்ய அண்ணாமலை இருக்கிறார். ஆளுநர் போட்டியிட வேண்டாம் என ஆளுநருக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கச்சத்தீவை வைத்து கச்சை கட்ட முயல்கிறார் ஆளுநர் ரவி. ‘கச்சத்தீவில் நம் மீனவர்களின் உரிமையைப் பறித்ததற்கு அப்போதைய மத்திய, மாநில அரசுகளே காரணம். 1974 தவறுக்கு அப்போது மத்தியில் கூட்டணியில் இருந்த இன்றைய மாநில ஆளுங்கட்சிக்கும் பொறுப்பு’ எனத் துருப்பிடித்த ஆயுதத்தைத் தூக்கிக் கொண்டு வந்திருக்கிறார் ஆளுநர் ரவி. … Read more

உத்தராகண்ட் பனிச்சரிவு உயிரிழப்பு எண்ணிக்கை 8-ஆக உயர்வு

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் சமோலியில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது. பத்ரிநாத் கோயில் அமைந்துள்ள பகுதியிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள மனா கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், அப்பகுதியில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 54 தொழிலாளர்கள் தங்கியிருந்த 8 கண்டெய்னர்களும் சிக்கிக் கொண்டன. இதையடுத்து, பேரிடர் மீட்பு குழு விரைந்து வந்து மீட்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் இன்று முதலில் … Read more