ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமியை மீட்கும் பணி தீவிரம்

ராஜஸ்தானில் 700 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழந்த 3-வது சிறுமியை மீட்கும் பணி நேற்று 3-வது நாளாக நீடித்தது. ராஜஸ்தானின் கோட்புட்லி-பெஹ்ரார் மாவட்டம் கிராத்பூர் என்ற கிராமத்தில் செட்னா என்ற 3 வயது சிறுமி தனது தந்தையின் நிலத்தில் கடந்த திங்கட்கிழமை மதியம் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு மூடப்படாமல் இருந்த ஆள்துளை கிணற்றில் தவறி விழுந்தாள். முதலில் 15 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுமியை மீட்க குடும்பத்தினரே முயன்றனர். இதில் அக்குழந்தை ஆழத்துக்கு … Read more

அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை வழக்கு: காவல் துறை அணுகுமுறை மீது வானதி சீனிவாசன் சாடல்

கோவை: “பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்டு புகார் தெரிவிக்கும் பெண் விவரங்களை வெளியிடக் கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தியும் காவல் துறை சரிவர பின்பற்றுவதில்லை” என வானதி சீனிவாசன் தெரிவித்தார். பாஜக தேசிய மகளிரணி தலைவர் மற்றும் கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் நடத்தும் கோவை மக்கள் சேவை மையம் சார்பில் கோவை சிவானந்தாகாலனி ஹோஸ்மின் நகரில் 50 ஏழை, எளிய பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில், வானதி சீனிவாசன் … Read more

‘இண்டியா கூட்டணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்றக் கோருவோம்’ – ஆம் ஆத்மி விதித்த கெடு!

புதுடெல்லி: “கேஜ்ரிவாலை அவதூறாகப் பேசிய அஜய் மக்கான் மீது 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால், காங்கிரஸ் கட்சியை இண்டியா கூட்டணியில் இருந்து வெளியேற்றுமாறு கூட்டணியின் பிற கட்சிகளிடம் வலியுறுத்துவோம்” என்று ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார். இதனால் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சர்ச்சையின் பின்னணி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அஜய் மக்கான், “கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஜன் லோக்பால் போராட்டத்தின் மூலம் டெல்லியில் ஆட்சி அமைத்தது. ஆனால், … Read more

கடலூரில் சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு – பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

கடலூர்: கடலூரில் 20-ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி கடற்கரையில் பால் ஊற்றி, மலர்தூவி பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி இந்தோனேஷியாவில் உள்ள சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் எழுந்த சுனாமி பேரலைகள் தமிழக கடற்கரையை தாக்கி, ஆயிரக்கணக்கானோரை பலிவாங்கியது. கடலூர் மாவட்டத்தில் மட்டும் சுனாமி பேரலையில் சிக்கி 610 பேர் பலியாகினர். இந்நிலையில், சுனாமி பேரலையால் பலியானவர்களின் 20-ம் ஆண்டு நினைவு தினம் … Read more

வாஜ்பாய் 100வது பிறந்த நாளில் டெல்லியில் என்டிஏ தலைவர்கள் கூட்டம்: சிறந்த நிர்வாகம் பற்றி ஆலோசனை

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 100-வது பிறந்த நாளான நேற்று டெல்லியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்டிஏ) தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவின் வீட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் என்.சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர்கள் ராம் மோகன் நாயுடு (தெலுங்கு தேசம்), ராஜீவ் ரஞ்சன் சிங் (ஐக்கிய ஜனதா தளம்), எச்.டி.குமாரசாமி (மதசார்பற்ற ஜனதா தளம்), அனுப்ரியா படேல் (அப்னா தளம்-எஸ்), ஜிதன் ராம் மாஞ்சி … Read more

சுனாமி நினைவு தினம்: புதுச்சேரி துணைநிலை ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் அஞ்சலி

புதுச்சேரி: சுனாமி 20-ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி கடலில் பால் ஊற்றி துணைநிலை ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி சுனாமி அலை தாக்குதலால் புதுவை, காரைக்காலில் 500-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். கடலோர கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்திய சுனாமி நினைவு தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 26-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. 20-ம் ஆண்டு நினைவு தினம் இன்று புதுவை அரசு சார்பில் கடற்கரை சாலை காந்தி … Read more

சாதி பாகுபாடு காட்டியதாக புகார்: பெங்களூரு ஐஐஎம் இயக்குநர் 7 பேராசிரியர்கள் மீது வழக்கு

பெங்களூரு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் (ஐஐஎம்) கல்வி நிறுவனத்தில் சாதிய பாகுபாடு தொடர்பான புகாரில் அதன் இயக்குநர் உட்பட‌ 8 பேராசிரியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கடந்த ஜனவரியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக பெங்களூரு ஐஐஎம் கல்வி நிறுவனத்துக்கு வந்தார். அப்போது அங்கு பணிபுரியும் பட்டியலின பேராசிரியர் கோபால் தாஸுக்கு நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட பேராசிரியர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு … Read more

திமுக அரசு எந்த திட்டங்களுக்கும், கட்டிடங்களுக்கும் அம்பேத்கர் பெயரை சூட்டவில்லை: ராமதாஸ் குற்றச்சாட்டு

விழுப்புரம்: திமுக அரசு எந்த திட்டங்களுக்கும், கட்டிடங்களுக்கும் அம்பேத்கர் பெயரை சூட்டவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வேங்கைவயல் விவகாரத்தில் 2 ஆண்டுகள் கடந்தும் பட்டியலின மக்களுக்கு கிடைக்காத நீதிக்காக திராவிட மாடல் அரசு தலைகுனிய வேண்டும். குற்றவாளி யார் என்றுகூட காவல்துறையால் துப்பு துலக்க முடியவில்லை என்பதை ஏற்க முடியாது. இதே நாள் 2 ஆண்டுகளுக்கு முன்னர் இச்சம்பவம் நடைபெற்றது. … Read more

ஒவ்வொரு மாநிலத்திலும் ஏழுமலையான் கோயில்: அறங்காவலர் குழு கூட்டத்தில் தீர்மானம்

திருமலை: ஆந்திர மாநிலம் திரு​மலை​யில் உள்ள அன்னமைய்யா பவனில் நேற்று அறங்​காவலர் குழு கூட்டம் தலைவர் பிஆர். நாயுடு தலைமை​யில் நேற்று முன்தினம் நடைபெற்​றது. இதில் பல முக்கிய தீர்​மானங்கள் ஒருமனதாக நிறைவேற்​றப்​பட்டன. ஆலோசனை கூட்​டத்​துக்​குப் பின்னர், இதில் எடுக்​கப்​பட்ட தீர்​மானங்கள் குறித்து அறங்​காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு மற்றும் நிர்வாக அதிகாரி சியாமள ராவ் ஆகியோர் செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: ஏழுமலை​யான் கோயில்களை ஒவ்வொரு மாநிலத்​தி​லும் அமைக்க வேண்​டும் என்னும் முதல்வர் சந்திர​பாபு நாயுடு​வின் உத்தரவை … Read more

‘சிறந்த சமூக சீர்திருத்தவாதி நல்லகண்ணு’ – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகழாரம்

சென்னை: “சிறந்த சமூக சீர்திருத்தவாதியான நல்லககண்ணு, நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தமது மக்கள் பணிகள் தொடர வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்.” என்று தமிழக பாஜக தலைவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணுவின் 100-வது பிறந்த நாள் மற்றும் கட்சி அமைப்பு நூற்றாண்டு தொடக்க விழா இன்று (டிச.26) கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி பாஜக மாநில தலைவர், “இன்றைய தினம், நூற்றாண்டு பிறந்த நாள் கொண்டாடும் இந்திய கம்யூனிஸ்ட் … Read more