காஞ்சிபுரத்தில் அதிமுக வேட்பாளர் தற்கொலை : போலீஸ் விசாரணை

Tamilnadu News Update : தமிழகத்தில் வரும் பிப்ரவரி 19-ந் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில். வேட்பாளர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் களம் கலைகட்ட தொடங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரம், செய்து வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானதை தொடர்ந்து வேட்பாளர்கள் பலரும் தங்களது பகுதியில் வாக்கு சேகரிப்பில் … Read more

ஹிஜாப் விவகாரம் : மகள்கள் குறித்து பேசிய நெட்டிசனுக்கு குஷ்பு பதிலடி

BJP Khushboo Say About Hijab Issue : கர்நாடக மாநிலத்தில், ஹிஜாப் விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர் கேட்ட கேள்விக்கு பாஜகவின் நடிகை குஷ்பு காட்டமாக பதிலை அளித்துள்ளார். கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் குந்தாபுராவில், உள்ள பியூ கல்லூரியில், ஹிஜாப் அணிந்துவந்த 6 மாணவிகள் வகுப்பறை செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுட்ட நிலையில், ஹிஜாப் அணிவது அரசியலமைப்பு … Read more

பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: என்.ஐ.ஏ விசாரிக்க வேண்டும் – அண்ணாமலை

பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வியாழக்கிழமை கோரிக்கை விடுத்தார். பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழக பாஜக தலைவர் அண்ணமலை கூறியதாவது: “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு யாருக்கெல்லாம் வாழ்வு கிடைத்திருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால், தமிழககத்தில் இருக்கிற ரவுடிகளுக்கு … Read more

பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு… கைதான நபரின் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை தி.நகரில் உள்ள பாஜக கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு, அதிகாலை 1.20 மணியளவில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் , பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை கொளுத்தி வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இந்த தாக்குதலில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தினர். மேலும், அங்கிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதற்கிடையில், அப்பகுதியில் அதிகளவில் திரண்ட பாஜகவினர், குண்டு வீசிய நபரை உடனடியாக … Read more

தமிழகத்தில் 87% பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி: சுகாதாரத் துறை சர்வே ரிசல்ட்

Tamilnadu News Update : கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் பொது சுகாதார இயக்குநரகம் நடத்திய 4-வது கட்ட ஆய்வில், தடுப்பூசி போடப்படாத 11 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 68% பேருக்கு கொரோனா தொற்றை ஏற்படுத்தும் எஸ்ஏஆர்எஸ் (SARS-CoV-2) வைரஸுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி இருந்துள்ளது. ​​18 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படாத நேரத்தில் எடுக்கப்பட்ட இந்த கணக்கெடுப்பில், பல குழந்தைகளில் கண்டறியக்கூடிய அளவு நோய் எதிர்ப்பு சக்தி இருந்தது … Read more

படகு ஏலத்தை தொடங்கிய இலங்கை… அதிர்ச்சியில் தமிழக மீனவர்கள்

இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகுகள் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் ஏலம் விடும் பணிகள் தொடங்கியுள்ளன. தமிழக மீனவர்களுக்கு சொந்தமான படகுகள் இலங்கையில் உள்ள ஐந்து துறைமுகங்களில் ஏலம் விடுப்படுகிறது. இந்த ஏலம் விடும் பணி, பிப்ரவரி 11 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர் இலங்கை பணத்தில் ஆயிரம் ரூபாய் நுழைவு கட்டணமாக செலுத்த வேண்டும். தமிழக மீனவர்களின் 135 படகுகள் யாழ்ப்பாணத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏலத்தின் முதல் நாளிலேயே … Read more

‘தி.மு.க-வுக்கு 100 சதவீத வெற்றி; இதை செய்வீர்களா?’ பிரச்சாரம் தொடங்கிய உதயநிதி

Udhayanidhi Stalin Trichy election campaign speech: தாய்மார்கள் முடிவெடுத்துட்டா யாரும் மாத்த முடியாது என்றும் நீங்களே பிரச்சாரம் செய்துடுவீங்க என்றும் உதயநிதி ஸ்டாலின் திருச்சி பிரச்சாரத்தில் பேசியுள்ளார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தநிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. இதில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். … Read more

Rasi Palan 10th February 2022: இன்றைய ராசிபலன்

Rasi Palan 10th February 2022:  ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம். Rasi Palan 10th February 2022: இன்றைய ராசி பலன், பிப்ரவரி 10ம் தேதி 2022 ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)  … Read more

ஹிஜாப் வழக்கு கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்

கர்நாடகாவில் உள்ள சில கல்லூரிகளில் ஹிஜாப் தடையை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்க தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி புதன்கிழமை உத்தரவிட்டது. பெங்களூருவில் உள்ள பள்ளிகள், புதுமுக கல்லூரிகள் (பியூசி), கல்லூரிகள் அல்லது பிற கல்வி நிறுவனங்களின் வாயில் இருந்து 200 மீட்டர் சுற்றளவுக்குள் ஆர்ப்பாட்டங்கள், போராட்டம் நடத்துவதற்கு, கூட்டம் கூடுவதற்கு இரண்டு வாரங்களுக்கு கர்நாடகா மாநில காவல்துறை தடை விதித்துள்ளது. ஹிஜாப் சர்ச்சை தொடர்பான மனுக்களை செவ்வாய்கிழமை விசாரித்த நீதிமன்றம், மாணவர்களும் பொதுமக்களும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் … Read more

அமீர் முத்தம் கொடுக்கவே இல்லை; பாவனி வீடியோ

விஜய் டிவியில் வெற்றிகரமாக நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில், போட்டியாளர்கள் அமீர் மற்றொரு போட்டியாளர் முத்தம் கொடுத்ததாக வெளியான வீடியோ பற்றி ரசிகர்கள் விவாதித்து வந்த நிலையில், பாவனி தனக்கு அமீர் முத்தம் கொடுக்கவில்லை என்று வீடியோ வெளியிட்டுள்ளார். விஜய் டிவியில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் 105 நாட்கள் முடிந்து கடந்த மாதம் நிறைவடைந்தது. இந்த சீசனில் அனைவரும் எதிர்பாத்தபடி, ராஜு பிக்பாஸ் டைட்டில் வின்னர் … Read more