Tamil News Today Highlights: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்; வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளுக்கு 19-ம் தேதி பொதுவிடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு

Tamil Nadu News Today Highlights: Petrol and Diesel Price: சென்னையில் தொடர்ந்து 97-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.101. 40 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 91.43 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. Tamilnadu News Update: பத்திரப்பதிவுத்துறை சுற்றறிக்கை! தமிழ்நாட்டில் நீர் நிலைகள், நீர்வழிப் பாதைகள், நீர்ப்பிடிப்பு பகுதிகள் என வகைப்படுத்தப்பட்ட நிலங்களை ஆவணப்பதிவு செய்ய தடை விதித்து’ அனைத்து … Read more

தமிழில் எழுப்பிய கேள்விக்கு ஹிந்தியில் பதில் அளித்த அமைச்சர்; தமிழக எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு

Tamilnadu MPs oppose minister’s reply in hindhi: மக்களவையில் மதிமுக உறுப்பினர் கணேச மூர்த்தி தமிழில் எழுப்பிய கேள்விக்கு, மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இந்தியில் பதில் அளித்ததற்கு தமிழகத்தைச் சேர்ந்த மக்களைவை உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் பதில் அளிக்கும்போது, அனைவருக்கும் தெரிந்த மொழியில் பேச வேண்டும் என்ற வேண்டுகோள், பல காலமாக பிற மொழி பேசும் மாநில உறுப்பினர்களால் வைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பெரும்பாலான அமைச்சர்கள் ஹிந்தியிலே பதில் அளித்து … Read more

திமுக அரசின் சாதனைகளை பழனிசாமி, பன்னீர்செல்வம் கும்பலால் தாங்க முடியவில்லை – ஸ்டாலின்

CM Stalin Tuticorin election campaign speech highlights: திமுக அரசின் சாதனைகளை பழனிசாமி, பன்னீர்செல்வம் கும்பலால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் திமுக கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை என்று பொய் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின், திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் இன்று தூத்துக்குடி மாவட்ட திமுக வேட்பாளர்களை ஆதரித்து, பிரச்சாரம் … Read more

ஜமீன் ஊதிய மகுடிக்கு பாம்பாக ஆடிய கடம்பூர்… தேர்தல் ரத்து பின்னணி!

கடம்பூர் பேரூராட்சியில் தேர்தல் நடத்தும் அலுவலர் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்களை நிராகரித்து சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து, கடம்பூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மேலும், சுயேச்சைகளுக்கு ஆதரவான நிலை ஏற்படுவதற்கு காரணம் அங்கே உள்ள ஜமீன் குடும்பத்தினர் செல்வாக்கு செலுத்துவதாக வட்டரங்கள் தெரிவிக்கின்றன. தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் பேரூராட்சிக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவியாளர் சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி மாநில … Read more

ராமஜெயம் கொலை வழக்கு: மீண்டும் தமிழக காவல்துறைக்கு திரும்பியது; சிறப்பு விசாரணைக்குழு அமைப்பு

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் மார்ச் 29, 2012ம் தேதி திருச்சியில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு குறித்து சிபிஐ 2018ம் ஆண்டு விசாரணையைத் தொடங்கியது. இந்த நிலையில், ராமஜெயம் கொலை வழக்கு மீண்டும் தமிழக காவல்துறை விசாரணைக்கு திரும்பியுள்ளது. திமுகவின் முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், மார்ச் 29, 2012 அன்று அதிகாலை 5 மணிக்கு நடைபயிற்சிக்காக வீட்டை விட்டு வெளியே போனவர் பிறகு வீடு திரும்பவில்லை. அவருடைய … Read more

பிரம்மாண்ட வெற்றியே இலக்கு… கொங்குவில் சினிமா இயக்குனரை களம் இறக்கும் தி.மு.க!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் பிரமாண்ட இலக்காக கொண்டு தீவிரமாக செயல்பட்டுவரும் திமுக, கொங்குவில் சினிமா இயக்குனர் கரு பழனியப்பனை திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய களம் இறக்கியுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளையும் திமுக தவறவிட்டாலும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளையும் கைப்பற்ற வேண்டும் என்று திமுகவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். கோவை மாநகராட்சி மட்டுமல்ல, கோவை மாவட்டம் மற்றும் கொங்கு மண்டலம் … Read more

அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு; ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

அதிமுக உட்கட்சித் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான உட்கட்சித் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. அதிமுக உட்கட்சித் தேர்தலை ரத்து செயக்கோரி முன்னாள் எம்.எல்.ஏ கே.சி.பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவில் அதிமுகவில் புதிய ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான அதிமுக … Read more

மணல் கடத்தல்: கேரள பிஷப், 5 பாதிரியார்கள் கைது – தமிழக சிபிசிஐடி அதிரடி

திருநெல்வேலி மாவட்டத்தில் மணல் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய கேரளாவைச் சேர்ந்த பிஷப் மற்றும் ஐந்து பாதிரியார்களை தமிழ்நாடு சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். பத்தனம்திட்டா சிரோ மலங்கரா டயோசிஸின் பிஷப் சாமுவேல் மார் இரேனியோஸ் மற்றும் பாதிரியார்கள் ஜார்ஜ் சாமுவேல், ஷாஜி தாமஸ், ஜிஜோ ஜேம்ஸ், ஜோஸ் சாமகலா, ஜோஸ் களவியல் ஆகியோர் கைது செய்யப்பட்டு திருநெல்வேலியில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், திருநெல்வேலியில் வருவாய், சுரங்கம், காவல்துறை மற்றும் வேளாண்மைத் துறைகளைச் சேர்ந்த பல அதிகாரிகளின் … Read more

Civic Polls 2022: வாக்குச்சாவடிகள் எங்கே? இனி சென்னைவாசிகள் குழம்ப வேண்டாம்!

Poll info : வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் சென்னைவாசிகள் எங்கே வாக்களிக்க வேண்டும், அருகில் இருக்கும் வாக்குச்சாவடிகள் எது என்பது தொடர்பான பல்வேறு தகவல்களை உடனே பெறும் வகையில் சென்னை மாநகராட்சி புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. http://election.chennaicorporation.gov.in – இணையத்திற்கு சென்று நீங்கள் உங்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பயன்படுத்தி மேற்கண்ட சேவைகளை பெற்றுக் கொள்ள இயலும். மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாநகராட்சி ஆணையருமான ககன்தீப் சிங் பேடி இது தொடர்பாக செய்தியாளர்கள் … Read more

தமிழ்நாட்டில் குறைந்து வரும் கொரோனா… 5,000-க்கு கீழ் சென்ற பாதிப்பு!

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்துவருகிறது. 33 நாள்களுக்கு பிறகு, கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளது. நேற்று 4,519 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் நான்கு வாரங்களுக்கு பிறகு 1 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது. கொரானா மூன்றாம் அலை வேகம் எடுத்த போது, ஜனவரி 6ஆம் தேதி கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது. பின்னர், ஜனவரி 13 அன்று கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் … Read more