கடைசி நேரத்தில் பம்மிய தி.மு.க போட்டி வேட்பாளர்கள்: அதிகாரபூர்வ வேட்பாளரை இழந்த அதிமுக

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், வேட்புமனுவை திரும்பப் பெற பிப்ரவரி 7ம் தேதி கடைசி நாள் என்பதால் திருநெல்வேலியில் திமுகவில் போட்டி வேட்பாளர்கள் கடைசி நேரத்தில் பம்மி போட்டியில் இருந்து பின்வாங்கினர். அதுமட்டுமல்ல, ஒரு வார்டில் எதிர்க்கட்சியான அதிமுக வேட்பாளர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றதால் அதிமுக தனது அதிகாரப்பூர்வ வேட்பாளரையும் இழந்தது. தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. ஆளும் திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக வேட்பாளர்கள் … Read more

நீட் விலக்கு மசோதா: அரசியல் கண் துடைப்பிற்காகவே இந்த சிறப்பு சட்டமன்ற கூட்டம் – பாஜக குற்றச்சாட்டு

Anti NEET Bill Tamil Nadu BJP MLAs stage walkout : நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் அடையும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய திமுக கட்சி பொறுப்பேற்றுக் கொண்டவுடன் ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு ஒன்றை அமைத்தது. நீதியரசர் A.K. ராஜன் அவர்கள் தலைமையில் உயர்மட்டக் குழு இது குறித்து ஆராய்ந்து, விரிவாக அறிக்கை பெற்று, அதன் பின்பு தான் இந்த புதிய சட்ட முன்வடிவு 13.09.2021ல் ஒருமனதாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன் … Read more

ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் 6 மாதங்களில் 35 மான்கள் இறப்பு.. என்ன காரணம்?

ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் 2021 ஜூலை முதல் டிசம்பர் வரை 35 மான்கள் இறந்துள்ளது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. இதில், இரண்டு மான்கள் காசநோயாலும், இரண்டு மான்கள் பலவீனத்தாலும், நான்கு பல்வேறு நோய்களாலும், நான்கு மான்கள் பிளாஸ்டிக் உட்கொண்டதாலும் இறந்தன என அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டுக்கு கடித்த அடையாளங்கள் இருந்தன. சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக வனத்துறைக்கு அனுப்பப்படாததால், மீதமுள்ள இறப்புகள் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை. சென்னை ஐ.ஐ.டி., வளாகம், 617 ஏக்கர் … Read more

Tamilnadu Assembly Today LIVE: இன்று சட்டசபை சிறப்புக் கூட்டம்

Go to Live Updates Tamil Nadu Assembly News, Tamil Nadu Assembly LIVE Updates, 08 February 2022-தமிழக சட்டசபையில் இன்று நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்! நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு சட்டசபையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டசபையின் மண்டபத்தில் நடைபெறும் நிகழ்வுகளை நேரலை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எம்பிபிஎஸ் மற்றும் … Read more

விழுப்புரம் எம்.பி., ரவிக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி

Villupuram MP Ravikumar tests positive to corona: விழுப்புரம் எம்.பி., ரவிக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் நேற்றைய பாதிப்பு 6,120 ஆக இருந்த நிலையில் 5,104 ஆக குறைந்துள்ளது. இருப்பினும் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இந்தநிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாரும், விழுப்புரம் … Read more

SSC CHSL 2022; மத்திய அரசு வேலை; 12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்; உடனே அப்ளை பண்ணுங்க!

SSC CHSL recruitment 2022 apply soon: மத்திய அரசுத்துறைகளில் காலியாக உள்ள எழுத்தர், உதவியாளர், தரவு உள்ளீட்டாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எஸ்.எஸ்.சி தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது. அந்த வகையில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்தவர்களுக்கான தகுதியில் எழுத்தர், உதவியாளர், தரவு உள்ளீட்டாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்  07.03.2022க்குள் விண்ணப்பித்துக் … Read more

பாரதி கண்ணம்மா சீரியலின் அடுத்த அஞ்சலி இவர்தான் : வெளியான முக்கிய அறிவிப்பு

Bharathi Kannamma Serial Update In Tamil : விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியலின் சமீபத்திய எபிசோடுகள் பரபரப்பை ஏற்படுத்தினாலும், அடிக்கடி கேரக்டர் மாற்றம் வருவது ரசிகர்ளுக்கு சீரியலுக்குமான ஒருவித கனக்ட் இல்லாதது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. நன்றாக போய்க்கொண்டிருந்த இந்த சீரியலில், முதலில் பாரதியின் தம்பி அகிலாக நடித்து வந்த அகிலன் விலகினார். அதனைத் தொடர்ந்து கண்ணம்மா என்ற மெயின் … Read more

பீஸ்ட் படத்தின் முதல் பாடல்… அரபிக் குத்து; ரிலீஸ் எப்ப தெரியுமா?

Beast first single Arabic Kuthu: Vijay, Sivakarthikeyan, Nelson Dilpkumar, Anirudh Ravichander unite for a funny skit: விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய்யின் 65 வது படமாக உருவாகி உள்ள படம் பீஸ்ட். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, அபர்னா தாஸ், விடிவி … Read more

1967-க்குப் பிறகு தமிழக மக்கள் காங்கிரசுக்கு வாய்ப்பே அளிக்கவில்லை: ராகுலுக்கு பிரதமர் மோடி பதில்

Cong ‘instigated’ labourers to breach lockdown…poll defeats didn’t dent party’s ego: PM Modi: 1967-ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பளிக்கவில்லை. கண்மூடித்தனமாக விமர்சனங்களை முன் வைக்க கூடாது. காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி போனாலும் ஆணவம் குறையவில்லை என ராகுல் காந்திக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரதமர் மோடி மக்களவையில் பேசியுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “உங்கள் வாழ்நாள் முழுவதும் தமிழக … Read more

ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகள் மகிழ்ச்சி அளிக்கிறது… ஆந்திர எம்.எல்.ஏ., ரோஜா பேட்டி

Andhra MLA Roja meets CM Stalin: அவசரம் தேவையை கருதி நேரில் வந்து சந்தித்தாக முதல்வர் ஸ்டாலின் உடனான சந்திப்புக்குப் பிறகு, ஆந்திர மாநில எம்.எல்.ஏ., செய்தியாளர்களிடம் கூறினார். ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ., ரோஜா இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினார். அப்போது, ஆந்திரா, நகரி தொகுதி நெசவாளர்கள் தயாரித்த பட்டு சால்வையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார் ரோஜா. மேலும் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் … Read more