அவளை கொன்றுவிட்டேன்.. என்னை நானே கொல்லப்போகிறேன்! பேஸ்புக் நேரலையில் இளைஞரின் அதிர்ச்சி செயல்

இந்திய மாநிலம் ஜார்க்கண்டில் காதலியை கொலை செய்த பின்னர் இளைஞர் ஒருவர், தன்னைத் தானே பேஸ்புக் நேரலையில் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பேஸ்புக் நேரலை ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்தவர் அங்கித் அஹிர். இவர் பேஸ்புக் நேரலையில் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தன்னுடைய காதலியை சுட்டுக் கொன்றதாக கூறிய அங்கித் அஹிர், பின்னர் என்னை நானே கொல்லப் போகிறேன் என்று அதிர்ச்சி அளித்தார். அதனைத் தொடர்ந்து அவர் கூறியபடியே துப்பாக்கியால் … Read more

அவருக்கு பீல்டிங் அமைப்பது கடினமான காரியம்: தோல்வி குறித்து பேசிய ஹர்திக் பாண்ட்யா

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக தோல்வியடைந்து குறித்து குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மனம் திறந்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் வெற்றி வான்கடே மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் மும்பை அணியின் வீரர் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக சதம் விளாசினார். இந்த நிலையில் தோல்வி குறித்து ஹர்திக் பாண்ட்யா பேசியுள்ளார்.   ஹர்திக் பாண்ட்யா கூறிய காரணம் அவர் கூறுகையில், … Read more

ரஷ்ய பயங்கரவாதிகள் 16 வயதை எட்டாத சிறுமியை கொன்றனர்! ஜெலென்ஸ்கி பகிரங்க குற்றச்சாட்டு

16 வயதை எட்டாத உக்ரேனிய சிறுமி மற்றும் 64 வயது நபர் என இருவரை ரஷ்ய துருப்புகள் கொன்றுவிட்டதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். போப் பிரான்சிஸிடம் கோரிக்கை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இத்தாலிக்கு பயணம் மேற்கொண்டு, அந்நாட்டின் பிரதமர், ஜனாதிபதி மற்றும் போப் பிரான்சிஸ் ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது நாடு கடத்தப்பட்ட உக்ரேனிய சிறுமிகள் வீடு திரும்ப முயற்சிக்க வேண்டும் என்றும், ரஷ்ய குற்றங்களை கண்டிக்குமாறும் போப் பிரான்சிஸிடம் ஜெலென்ஸ்கி கேட்டுக் … Read more

கோல் அடிக்கவில்லையெனில் அறைக்கு வராதீர்கள்! அணி இயக்குனர் கூறிய பின்னர் இரண்டு கோல்கள்..6-0 என வென்ற பாயெர்ன் முனிச்

பண்டஸ்லிகா தொடரில் பாயெர்ன் முனிச் அணி 6-0 என்ற கோல் கணக்கில் ஸ்சால்கெ (Schalke) அணியை வீழ்த்தி பிரம்மாண்ட வெற்றி பெற்றது. பண்டஸ்லிகா தொடர் Allianz Arena மைதானத்தில் நடந்த பண்டஸ்லிகா தொடரில் பாயெர்ன் முனிச் மற்றும் ஸ்சால்கெ அணிகள் மோதின. ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் பாயெர்ன் அணியின் தாமஸ் முல்லர் மிரட்டலாக கோல் அடித்தார். அவரைத் தொடர்ந்து, கிம்மிக் பெனால்டி வாய்ப்பில் ஆவேசமாக கோல் அடித்தார். இதன்மூலம் பாயெர்ன் முனிச் அணி 2-0 என முதல் … Read more

அமெரிக்க மாகாணத்தில் பேரழிவை ஏற்படுத்திய சூறாவளி: இருவர் பலி மற்றும் பலர் காயம்

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரை தாக்கிய சூறாவளிக்கு இருவர் பலியானதுடன், 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தரைமட்டமான வீடுகள் டெக்ஸாஸின் ரியோ கிராண்டே பள்ளத்தாக்கில் உள்ள லகுனா ஹைட்ஸ் பகுதியில், அதிகாலை 4 மணியளவில் பலத்த சூறாவளி தாக்கியது. இதில் பல வீடுகள் தரைமட்டமாகின. ஈடுபாடுகளுக்குள் சிக்கிய இருவர் உயிரிழந்தனர். அவர்கள் இருவரும் ஆண்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் சூறாவளிக்கு 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சேதம் காரணமாக லகுனா ஹைட்ஸ் அணுகலை வழங்கும் நெடுஞ்சாலை 100ஐ திணைக்களம் … Read more

நாடு கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான உக்ரேனிய குழந்தைகள்..போப் ஆண்டவரிடம் கோரிக்கை வைத்த ஜனாதிபதி

உக்ரேனிய மக்களுக்காக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, இத்தாலியில் செர்ஜியோ மற்றும் போப் பிரான்சிஸ் ஆகியோரை சந்தித்து கோரிக்கை விடுத்தார். இத்தாலி பயணம் ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் நிலையில், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இத்தாலி நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அந்நாட்டின் பிரதமர் செர்ஜியோ மட்டரெல்லா மற்றும் போப் பிரான்சிஸை ரோம் நகரில் சந்தித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.   STRINGER/Ukrainian Presidential Press Service/AFP போப் பிரான்ஸிடம் கோரிக்கை போப் … Read more

ஐபிஎல்லில் முதல் சதம் அடித்த இளம் வீரர்..அனல் பறந்த ஆட்டம்

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் அதிரடியாக சதம் விளாசினார். முதல் சதம் அடித்த இளம் வீரர் ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன. நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. முதலில் ஆடிய பஞ்சாப் அணியில் கேப்டன் ஷிகர் தவான் 7 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஆனால் 22 வயது இளம் வீரரான … Read more

ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படை: பயங்கரவாத குழுவில் பட்டியலிட ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பிரான்ஸ் அழைப்பு

ரஷ்யாவின் தனியார் கூலிப்படையான வாக்னர் குழுவை தீவிரவாத குழுவாக ஐரோப்பிய ஒன்றியம் பட்டியலிட வேண்டும் என்று அழைப்பு விடுக்கும் தீர்மானத்தை பிரான்ஸ் தேசிய சட்டமன்றம் நிறைவேற்றியுள்ளது. பிரான்ஸ் தேசிய சட்டமன்ற தீர்மானம் உக்ரைன் மீதான ரஷ்யாவின் அத்துமீறிய ராணுவ தாக்குதலில், ரஷ்யாவின் தனியார் கூலிப்படையான வாக்னர் குழு முக்கிய பங்கு வகித்து வருகிறது. அத்துடன் உக்ரைனில் நிகழ்த்தப்பட்ட பல்வேறு போர் குற்றங்களுக்கு வாக்னர் கூலிப்படையே முக்கிய காரணம் என்று சர்வதேச நாடுகளால் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.  AFP … Read more

ஆசை காட்டி பிரித்தானிய இளைஞரை காட்டுக்குள் வரவழைத்த அழகிய இளம்பெண்: சடலமாக கண்டெடுக்கப்பட்டதால் குழப்பம்

 பிரித்தானிய இளைஞர் ஒருவரை கொலை செய்வதற்காக, ஆசை காட்டி வரவழைப்பதற்காக ஒரு அழகிய இளம்பெண் பயன்படுத்தப்பட்டதாக கருதப்பட்ட வழக்கில், அந்த இளம்பெண்ணும் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் குழப்பம் உருவாகியுள்ளது. காட்டுக்குள் சென்ற பிரித்தானிய இளைஞர் பிரித்தானியரான Steven Graham (60)க்கும் தாய்லாந்து நாட்டவரான Ooy Taotaக்கும் பிறந்த மகன் பென் (Woramet Ben Taota, 16). கடந்த 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, பென் தெற்கு தாய்லாந்தில் உள்ள காடு ஒன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். விசாரணையில், அவர் கடைசியாக, ஹம்சா … Read more

சட்ட விரோத புலம்பெயர்ந்தோர் கையில் பிரான்ஸ் பாஸ்போர்ட்: தெரியவந்த அதிர்ச்சியளிக்கும் உண்மை

 சட்ட விரோத புலம்பெயர்ந்தோர் சிலர், உண்மையான பிரான்ஸ் பாஸ்போர்ட்டுடன் பயணிக்க உதவும் மோசடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் பாஸ்போர்ட்டுடன் சிக்கிய வெளிநாட்டவர்  கடந்த நவம்பர் மாதம், மாலி நாட்டிலிருந்து பிரான்ஸ் வந்த வந்த ஒருவரை பாரீஸ் விமான நிலையத்தில் எல்லை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, அவரிடமிருந்த பிரான்ஸ் பாஸ்போர்ட் அவருடையது அல்ல என்பது தெரியவந்தது. விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சியளிக்கும் தகவல் அந்த நபரிடம் விசாரிக்கும்போது, அவர் உண்மையான பிரான்ஸ் பாஸ்போர்ட் ஒன்றை வாடகைக்கு … Read more