79 வயதில் தந்தையான பிரபல நடிகர்: பொதுவெளியில் தோன்றிய ஏழாவது குழந்தை

பிரபல அமெரிக்க நடிகர் ராபர்ட் டி நிரோவின் ஏழாவது குழந்தை பொதுவெளியில் தோன்றிய புகைப்படங்கள் வைரலாகியுள்ளன. மூத்த நடிகர் ராபர்ட் டி நிரோ ஹாலிவுட் திரையுலகின் மூத்த நடிகரான ராபர்ட் டி நிரோ, 1965ஆம் ஆண்டு முதல் நடித்து வருகிறார். பல படங்களை தயாரித்துள்ள இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். தனது 79வது வயதில் தந்தையாகியுள்ளதாக இந்த வார தொடக்கத்தில் கூறி உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கினார் ராபர்ட் டி நிரோ. இந்த நிலையில் அவரது காதலி டிஃப்பானி சென் … Read more

30 வயதில் பில்லியனரான பிரித்தானியர்..இளவரசர் வில்லியம் அளித்த கௌரவம்

பிரித்தானியாவில் இளம் சாதனையாளராக கருதப்படும் ஜிம்ஷார்க் நிறுவனர் பென் பிரான்சிஸ், இளவரசர் வில்லியமிடம் இருந்து உயரிய விருதான MBEயை பெற்றார். இளம் பில்லியனர் 2012ஆம் ஆண்டில் ஆஸ்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறிய பென் பிரான்சிஸ் என்ற இளைஞர் (30), Pizza Hut டெலிவரி பாயாக வேலை பார்த்தார். எனினும் முழுநேரமும் தனது தொழிலில் கவனம் செலுத்திய பென், ஜிம்ஷார்க் என்ற நிறுவனத்தை தொடங்கி பிரித்தானியாவின் இளம் தொழிலதிபராக உருவெடுத்தார். கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட ஃபோர்ப்ஸ் பில்லியனர்கள் … Read more

பிறந்தநாளை கொண்டாடிய பின் உயிரிழந்த குழந்தை! அவுஸ்திரேலியாவில் பெற்றோர்களுக்கு அவசர எச்சரிக்கை வெளியிட்ட தன்பாலின தந்தைகள்

அவுஸ்திரேலியாவில் தங்கள் ஒரு வயது குழந்தையை இழந்த தன் பாலின ஈர்ப்பாளர் தந்தைகள், பெற்றோர்களுக்கு ஒரு முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளனர். தன்பாலின தம்பதியின் குழந்தை மெல்போர்னைச் சேர்ந்த லெய்க், ஜஸ்டின் க்ஹூ என்ற தன்பாலின ஈர்ப்பாளர்கள் வாடகைத் தாய் மூலமாக தங்களுக்கென குழந்தையை பெற்றெடுத்தனர். அந்த ஆண் குழந்தைக்கு ஓவன் என பெயரிட்டனர். ஓவன் 29 வாரங்களிலேயே 1.44 கிலோ எடையுடன் பிறந்தார். மேலும் அவர் பார்வை குறைபாட்டால் அவதிப்பட்டார். எனினும், ஓவனின் பெற்றோர் கவனிப்புடன் பார்த்துக் … Read more

ஆசிய நாடுகளின் தலைவர்களை அடுத்தடுத்து சந்திக்கும் ஜஸ்டின் ட்ரூடோ..காரணம் இதுதான்

ஆசியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கொரியா, ஜப்பான் நாடுகளின் தலைவர்களை அடுத்தடுத்து சந்திக்க உள்ளார். ட்ரூடோவின் ஆசிய பயணம் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜி7 தலைவர்களை ஆதரிப்பது, மனித உரிமைகளை பாதுகாப்பது, உக்ரைனுக்கு ஆதரவு கொடுப்பது உள்ளிட்ட விடயங்கள் குறித்து விவாதிக்க ஆசிய நாடுகளான தென் கொரியா, ஜப்பான் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். மே 16ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை பயணம் செய்வதாக அறிவித்த ட்ரூடோ, 16 முதல் … Read more

Impact வீரராக வந்து அதிர்ச்சி கொடுத்த இலங்கை வீரர்: சிக்ஸர்களை தெறிக்கவிட்ட தோனி..மிரட்டல் வெற்றி

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் பதிரனா, Impact வீரராக களமிறங்கி விக்கெட் வீழ்த்தி மிரட்டினார். தடுமாறிய தொடக்கம் நாணய சுழற்சியில் வென்ற CSK அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து விளையாடியது. கான்வே 10 ஓட்டங்களில் அக்சர் படேல் பந்துவீச்சில் அவர் ஆனார். அதன் பின்னர் வந்த ரஹானே 21 ஓட்டங்களும், கெய்ட்வாட் 24 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மொயீன் அலி 7 ஓட்டங்களில் வெளியேறினார். சிக்ஸர்களை பறக்கவிட்ட தோனி … Read more

மறைந்த நடிகர் மனோபாலாவின் மாடித்தோட்டம்!

மறைந்த நடிகர் மனோபாலாவின் வீட்டு மாடியில் அமைந்துள்ள தோட்டம் பற்றிய ஒரு வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. யார் இந்த மனோபாலா? 1979 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த புதிய வார்ப்புகள் என்ற திரைப்படத்தின் மூலம் துணை இயக்குனராக தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தவர் தான் மனோபாலா. அதன் பின்னர் பல படங்களை தயாரித்து வெள்ளித்திரை சின்னத்திரையிலும் தனது சாகசத்தை காட்டியுள்ளார். இந்நிலையில் அவரது உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த வாரம் தனது … Read more

சிகிச்சைக்கு வந்த விசாரணை கைதியின் கோர முகம்! பரிதாபமாக உயிரிழந்த மாணவி

கேரளாவில் சிகிச்சைக்கு வந்த விசாரணை கைதி ஒருவர் மருத்துவ மாணவியை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. கேரளாவின் கொட்டக்கார பகுதியை சேர்ந்தவர் சந்தீப், மதுவுக்கு அடிமையான இவர் அக்கம்பக்கத்தில் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். நேற்றிரவும் வழக்கம் போல் சண்டை ஏற்பட, உடனடியாக போலிசில் புகார் கொடுத்துள்ளனர். போலிசார் வந்து சந்தீப்பை விசாரணைக்காக போலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர், அங்கிருந்து மருத்துவ பரிசோதனைக்காக கொட்டாரக்கார தாலுகா தலைமை மருத்துவமனைக்கு போலிஸ் அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர். அங்கு இறுதியாண்டு … Read more

பிரித்தானிய உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள இலங்கைத் தமிழர்

பிரித்தானியாவில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இலங்கைத் தமிழர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். ஆளும் கட்சியினர் தோல்விகளை சந்தித்துள்ள நிலையில் வெற்றி பெற்ற கவுன்சிலர் பிரித்தானிய உள்ளாட்சித் தேர்தல்களைப் பொருத்தவரை, இம்முறை, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி குறிப்பிடத்தக்க அளவில் தோல்விகளை சந்தித்துள்ளது. ஆனாலும், தன்னை எதிர்த்து போட்டியிட்ட லேபர் கட்சி மற்றும் லிபரல் கட்சி வேட்பாளர்களை தோற்கடித்து அபார வெற்றி பெற்றுள்ளார் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜெய்கணேஷ்.  யார் இந்த ஜெய்கணேஷ்? இலங்கை, யாழ்ப்பாணத்தில் பிறந்த … Read more

அரசியலுக்குள் நுழைய அஸ்திவாரம் போடுகிறாரா விஜய்? பறந்த திடீர் உத்தரவு

12ம் வகுப்பு மாநில பொதுத் தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்த திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு நடிகர் விஜய் தனது மக்கள் மன்ற உறுப்பினர்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சாதனை நாயகிக்கு நடிகர் விஜய் வாழ்த்து திண்டுக்கல் மாவட்டம் அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்த மாணவி நந்தினி, மாநில பொது தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று இதுவரை யாரும் செய்யாத சாதனையை படைத்துள்ளார். இதையடுத்து அவரை தமிழக … Read more

மன்னர் சார்லஸ் மற்றும் கமிலாவை முந்திய இளவரசி டயானா: ட்வீட்டரை ஆக்கிரமித்த முடிசூட்டு விழா

பிரித்தானிய மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவில் போது இணையவாசிகள் மத்தியில் மன்னர் சார்லஸின் முன்னாள் மனைவி மற்றும் மக்கள் மனத்தின் ராணி என போற்றப்படும் டயானா அதிக அளவு நினைவு கூறப்பட்டுள்ளார். மன்னர் சார்லஸ், ராணி கமிலாவை முந்திய டயானா முடிசூட்டு விழாவை முன்னிட்டு ட்விட்டர் முழுவதும் மன்னர் சார்லஸ் மற்றும் அவரது முடிசூட்டு விழா குறித்த தகவல்கள் மட்டுமே நாள் முழுவதும் நிறைந்து காணப்பட்டது. பிரித்தானியாவின் இத்தகைய சிறப்புமிக்க நாளில் மன்னர் சார்லஸின் முன்னாள் மனைவி … Read more