மர்மமான முறையில் இறந்து கிடந்த மயில்கள்! உடல்களை சோதனை செய்த வனத்துறையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி

தமிழகத்தில் 7 மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தகுதிரை கே.மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில், மர்மமான முறையில் மயில்கள் இறந்த கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற வனத்துறையில் 7 மயில்கள் இறந்து கிடந்ததை கண்டு அதனை சோதனை செய்தனர். அப்போது 7 மயில்களும் விஷம் வைத்து கொல்லப்பட்டது தெரியவந்தது. இதனால் வனத்துறை அதிகாரிகளும் ஊழியர்களும் பேரதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து … Read more

உக்ரைன் – ரஷ்யா பிரச்சனைக்கு நடுவே புகுந்த நாடு! இன்று முடிவுக்கு வருகிறதா யுத்தம்? வெளியான முக்கிய தகவல்

பெலாரஸில் உக்ரைன் மற்றும் ரஷ்யா இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இதனால் யுத்தம் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டிற்குள் புகுந்து ரஷ்யா 4 நாட்களுக்கு மேலாக போர் தாக்குதல் நடத்தி வருகிறது. தொடர்ந்து 5ஆவது நாளாக ரஷ்யா மிக கொடூரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரால் இதுவரை 3.68 லட்சம் பேர் உக்ரைனிலிருந்து வெளியேறி மற்ற நாடுகளில் தஞ்சமடைந்துள்ளார்கள் என ஐநா தெரிவித்துள்ளது. போர் தொடங்கிய இரண்டாவது நாளே உக்ரைன் … Read more

உக்ரைனில் ஆயுதம் ஏந்த பிரித்தானியர்களுக்கு அனுமதி!

புடினுக்கு எதிராக உக்ரைனில் போரில் கலந்துகொள்ள பிரித்தானியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உக்ரைன் சென்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக போரில் கலந்துகொள்ள பிரித்தானியர்களுக்கு நேற்று இரவு அனுமதி வழங்கப்பட்டது. போராட்டத்தில் சேர விரும்பும் தன்னார்வத் தொண்டர்களிடம் பிரித்தானிய வெளியுறவுச் செயலர் லிஸ் ட்ரஸ் (Liz Truss) கூறியதாவது: “மக்கள் அந்தப் போராட்டத்தை ஆதரிக்க விரும்பினால், அதைச் செய்வதற்கு நான் அவர்களுக்கு ஆதரவளிப்பேன்” என்று கூறியுள்ளார். உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ள லிஸ் … Read more

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க மறுப்பு தெரிவித்த ஐரோப்பிய நாடு

உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க ஹங்கேரி மறுப்பு தெரிவித்துள்ளது. ஹங்கேரி ஆயுதங்கள் அனைத்தும் உள்நாட்டில் தேவைப்படுவதால் உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பாது என்று ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன் தெரிவித்துள்ளார். “ஹங்கேரிய ஆயுதப் படைகளுக்கு நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்க அவர்களின் அனைத்து ஆயுதங்களும் தேவைப்படுவதால், ஹங்கேரி தனது நிலையை மாற்றிக்கொள்ளாது. எனவே, இத்தாலி மற்றும் ஜேர்மனியைப் போலல்லாமல், நாங்கள் உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்ப மாட்டோம்” என்று பிரதமர் விக்டர் ஓர்பன் M1 ஒளிபரப்பு நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறினார். அதே … Read more

கனேடிய வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் பறக்க தடை!

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், கனடா தனது வான்வெளியில் நுழைய ரஷ்ய விமானங்களுக்கு உடனடியாக தடை விதிப்பதாக போக்குவரத்து அமைச்சர் ஒமர் அல்காப்ரா தெரிவித்துள்ளார். பல ஐரோப்பிய நாடுகளும் இதே போன்ற அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. ஜேர்மனி, பிரித்தானியா, இத்தாலி, பால்டிக் நாடுகள் மற்றும் பிற நாடுகளுக்கு மேலே உள்ள வான்வெளியில் இருந்து ரஷ்யாவிற்கு சொந்தமான விமானங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. குறிப்பிடத்தக்க வகையில், ரஷ்யாவின் முதன்மையான கேரியர் ஏரோஃப்ளோட் (Aeroflot) ஒரு நாளைக்கு … Read more

ரஷ்யா மீது புதிய தடை அமுல்படுத்திய ஜேர்மனி!

ஜேர்மன் வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியின் மத்திய போக்குவரத்து மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு அமைச்சக அறிவிப்பின்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணி முதல் (1400 UTC) ரஷ்ய விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பல நாடுகள் ரஷ்ய விமானங்களுக்கு தங்கள் வான்வெளியில் பறக்க தடை விதித்ததை அடுத்து, ஜேர்மன் பொறுப்பு அமைச்சர் வோல்கர் விஸ்சிங் (Volker Wissing) இந்த முடிவை எடுத்தார். தொடர்ந்து மூன்று நாட்களாக ரஷ்ய படைகள் உக்ரைன் தலைநகர் வரை … Read more

உக்ரைனில் 4 இடங்களை கட்டுக்குள் கொண்டு வந்தது ரஷ்யா! 471 வீரர்கள் சரணடைந்தனர்… முக்கிய தகவல்

உக்ரைனில் உள்ள 4 முக்கிய இடங்களை ரஷ்யா கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. உக்ரைனுக்குள் புகுந்த ரஷ்ய வீரர்கள் நான்காம் நாளாக தொடர்ந்து போர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பக்கங்களிலும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கிறது. இரு நாட்டின் போர் சண்டை காரணமாக உக்ரைன் பொதுமக்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பலரும் பாதுகாப்பான இடங்களை தேடி சென்று தஞ்சமடைந்து வருகின்றனர். இந்த நிலையில் உக்ரைனில் 4 இடங்களை கட்டுக்குள் கொண்டுவந்தது ரஷ்யா என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பெர்டியான்ஸ்க்ம் … Read more

ரஷ்யா உடனான பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டது உக்ரைன்! ஜெலன்ஸ்கி முக்கிய அறிவிப்பு

 ரஷ்யா உடனான பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் ஒப்புக்கொண்டதாக அந்நாட்டு ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். பெலாரஸ் ஜனாதிபதி Alexander Lukashenko உடன் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி இன்று நடத்திய உரையாடலைத் தொடர்ந்து ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், உக்ரேனிய பிரதிநிதிகள் குழு, ரஷ்ய பிரதிநிதிகள் குழுவை முன்நிபந்தனையின்றி உக்ரேனிய-பெலாரஷ்யன் எல்லையில், பிரிபியாட் ஆற்றுக்கு அருகில் சந்திப்பதாக நாங்கள் ஒப்புக்கொண்டோம். உக்ரேனிய பிரதிநிதிகள் குழுவின் பயணம், பேச்சுவார்த்தைகள் மற்றும் நாடு திரும்பும் போது, பெலாரஸில் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து விமானங்கள், ஹெலிகாப்டர்கள் … Read more

குரு பகவானின் இடமாற்றத்தால் வாழ்க்கையில் திடீர் திருப்பங்களை சந்திக்கப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா? நாளைய ராசிப்பலன்

குரு பகவான் பிப்ரவரி 24ம் தேதி அஸ்தங்கம் நிலைக்கு சென்றுள்ளார். ஜோதிடத்தில் குரு பகவான் அஸ்தங்கம் நிலைக்கு செல்வது அசுபமானதாக கருதப்பட்டாலும், சில ராசிகளுக்கு அது அற்புத பலன்களும், திடீர் திருப்பங்களைத் தரக்கூடியதாகவும், சிலருக்கு அசுப பலன்கள், எதிர்பாராத ஏமாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அந்தவகையில் குருபகவானின் இந்த இடமாற்றத்தால் நாளைய நாள் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பார்ப்போம். உங்களது ராசிப்பலனை இன்றே உடனே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW  … Read more

சிறப்பு படைவீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின்!

உக்ரைனில் தாக்குதல் நடத்திவரும் ரஷ்ய சிறப்பு படைவீரர்களுக்கு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் தனது சிறப்பு நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். உக்ரைனின் டான்பாஸ் பகுதிகளில் உள்ள டொனெட்ஸ்க் (Donetsk) மற்றும் லுஹான்ஸ்க் (Luhansk) ஆகிய நகரங்களை சுதந்திர பகுதிகளாக மாற்றும் முயற்சியில் அங்குள்ள ரஷ்யா ஆதரவாளர்களுக்கு உதவுவதற்காக ரஷ்ய சிறப்பு படைவீரர்களை ஜனாதிபதி விளாடிமிர் புதின் முதன்முதலில் அனுப்பிவைத்தார். பின்பு ரஷ்ய படைகள் சிறிது சிறிதாக உக்ரைன் பகுதிகளுக்குள் முன்னேறவே, அதை உக்ரைன் மீதான முழுநீள போராக … Read more