உக்ரைன் போர் குறித்த நிலைப்பாட்டை வெளியிட்ட வடகொரியா: போருக்கு அமெரிக்காவே மூலக்காரணம் என குற்றச்சாட்டு

ரஷ்யா உக்ரைன் மீது நான்காவது நாளாக இன்றும் போர் தொடுத்துவரும் நிலையில், உக்ரைனுக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடிக்கு அமெரிக்காவே மூலக்காரணம் என வட கொரியா குற்றம்சாட்டியுள்ளது. மேற்கத்திய நாடுகளின் நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த 24ம் திகதி முதல் போர்தொடுத்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைனின் இந்த பதற்றமான போர் சூழலுக்கு அமெரிக்காவே முழுமுதற்காரணம் என வட கொரியா குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக, வடகொரிய வெளியுறவு அமைச்சகத்திற்கான … Read more

ரஷ்யாவிடம் சரணடையாத வீரர்களின் குடும்பங்களை தாக்க திட்டம்: அமெரிக்கா விடுத்துள்ள புதிய எச்சரிக்கை

ரஷ்ய ராணுவத்திடம் சரணடையாத உக்ரைன் ராணுவ வீரர்களின் குடும்பங்களை தாக்கி அழிக்க ரஷ்யா திட்டமிட்டு இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை எச்சரித்துள்ளது. உக்ரைனை ரஷ்யா அனைத்து பக்கங்களில் இருந்தும் தீவிரமாக தாக்கி வரும் நிலையில், அந்த நாட்டு ராணுவ வீரர்களை உடனடியாக ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையும் படி ரஷ்ய எச்சரிக்கை விடுத்துவருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவிடம் சரணடையாத உக்ரைன் ராணுவ வீரர்களின் குடும்பங்களை தாக்கி அழிக்க ரஷ்யா திட்டமிட்டு இருப்பதாக அமெரிக்காவின் உளவுத்துறை தகவல் அளித்து இருப்பதாக … Read more

மொத்த குடும்பமும் ஆற்றில் குதித்து தற்கொலை! கடிதத்தில் எழுதியிருந்த வார்த்தைகள்

இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கேரளாவின் பாலகாட்டை சேர்ந்தவர் அஜித்குமார் (38). இவர் மனைவி விஜிதா (34). விஜிதாவுக்கு முதல் கணவர் மூலம் ஆர்யநந்தா (14) மற்றும் அஸ்வந்தா (6) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். அவரை பிரிந்த விஜிதா இரண்டு ஆண்டுகளாக அஜித்குமாருடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் நால்வர் அடங்கிய இந்த குடும்பம் ஆற்றில் குதித்து நேற்று தற்கொலை செய்து கொண்டனர். இதனிடையில் அஜித்குமார் … Read more

கொழுந்துவிட்டு எரியும் இடங்கள்! ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் எண்ணெய் கிடங்குகள், எரிவாயு குழாய்கள் தகர்ப்பு.. வீடியோ

உக்ரைனை அனைத்து திசைகளிலும் முன்னேறி ரஷ்யா தாக்கி வரும் நிலையில் எண்ணெய் கிடங்குகள், எரிவாயு குழாய்கள் தகர்க்கப்பட்டு பல இடங்களில் தீ கொழுந்துவிட்டு எரிகிறது. உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து 4-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. The footage shows a gas pipeline on fire in Kharkiv after a Russian attack. Video: State … Read more

ஒரே கழிவறையை 500 பேர் பயன்படுத்துறோம்! யுத்தத்தை நிறுத்துங்க புடின்… உக்ரைனில் உள்ள தமிழ்ப்பெண் கண்ணீர்

உக்ரைனில் தாங்கள் பதுங்கியிருக்கும் இடத்தின் மோசமான நிலையை விளக்கி தமிழக மாணவி வீடியோ வெளியிட்டுள்ளார். அதன்படி மெட்ரோ சுரங்கத்தில் 300 பேரிலிருந்து 500 பேர் வரை ஒரே கழிவறையைப் பயன்படுத்தி வருவதாக அந்த மருத்துவ மாணவி தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், அங்கு ஒரேயொரு கழிவறை உள்ள நிலையில், போதிய தண்ணீரும் இல்லாமல் அத்தனை பேரும் அதனை 3 நாட்களாகப் பயன்படுத்தி வருகிறோம். இதனால் நோய்த்தொற்று அபாயம் ஏற்படும் வாய்ப்புள்ளதாகவும், இந்த மோசமான மற்றும் அருவருப்பான நிலை … Read more

பிரேக்டவுன் ஆகி நின்ற டாங்கி., ரஷ்ய வீரர்களை கேலி செய்த உக்ரைனியர்! வைரல் வீடியோ

டாங்கியில் எரிபொருள் இல்லாமல் நடுவழியில் தவித்துக்கொண்டிருந்த ரஷ்ய வீரர்களை உக்ரைனிய குடிமகன் துணிச்சலுடன் கேலி செய்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது. உக்ரைனை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்ய இராணுவம் தொடர்ந்து மூணர்த்தாவது நாளாக சனிக்கிழமையும் தாக்குதல் நடத்தினர். ரஷ்ய படைகளுக்கு ஈடாக தலைநகர் கீவில் உக்ரைன் வீரர்கள் தொடர்ந்து எதிர்தாக்குதல் நடத்திவருகின்றனர். உலக நாடுகள் பொருளாதார தடைகள் உட்பட பல தடைகளை விதித்து ரஷ்யாவிற்கு எதிர்ப்பும் கண்டனங்களும் தெரிவித்து வரும் நிலையிலும், உக்ரைனை அரசாங்கத்தை கைப்பற்றியே … Read more

கொள்கையை மாற்றிக்கொண்ட ஜேர்மனி! உக்ரைனுக்கு பயங்கர ஆயுதங்களை கொடுக்க ஒப்புதல்

ஆயுதங்கள் கொடுத்து உதவ தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், ரஷ்ய படைகளை எதிர்த்து போராட உக்ரைனுக்கு டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள், ஏவுகணைகள் போன்ற பயங்கர ஆயுதங்களை ஜேர்மனி அனுப்பவுள்ளது. ஜேர்மனி சனிக்கிழமை ரஷ்யாவிற்கு எதிரான உக்ரைனின் போருக்கான தனது ஆதரவை வியத்தகு முறையில் அதிகரித்தது. உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது மற்றும் SWIFT இன்டர்பேங்க் அமைப்புக்கான ரஷ்யாவின் அணுகலைக் கட்டுப்படுத்தவும் ஜேர்மனி ஒப்புக்கொண்டது. உக்ரைனுக்கு ஒரு பெரிய அளவிலான பயங்கர ஆயுதங்களை வழங்க ஒப்புதல் … Read more

உக்ரைன்-ரஷ்யா போர்: சமீபத்திய நிலை என்ன? 10 முக்கிய தகவல்கள்

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் விவகாரத்தின் சமீபத்திய நிலை குறித்த சில முக்கிய தகவல்களை இங்கே பார்க்கலாம். உக்ரைன் சனிக்கிழமையன்று போர்நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மறுப்பதாக ரஷ்ய ஆலோசனைகளை நிராகரித்தது. ஆனால் இராணுவ மோதலை உக்ரைன் நீடிப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டிய பின்னர் ஏற்றுக்கொள்ள முடியாத நிபந்தனைகளை ஏற்க தயாராக இல்லை என்று கூறியுள்ளது. ரஷ்யப் படைகள் மூன்றாவது நாளாக சனிக்கிழமையும் பீரங்கி மற்றும் கப்பல் ஏவுகணைகள் மூலம் உக்ரேனிய நகரங்களைத் தாக்கின, ஆனால் … Read more

2வது டி20 போட்டியில் மாஸ் காட்டிய ஜடேஜா – இலங்கை தொடரை வென்றது இந்திய அணி

இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை வென்று இந்திய அணி சாதனைப் படைத்துள்ளது.  இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் இன்று  தரம்சாலா மைதானத்தில் 2வது டி20 ஆட்டம் நடைபெற்றது.   இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட் செய்த … Read more

நடிகர் ரஜினிகாந்திற்காக மொட்டை போட்டு கொண்ட லதா!

நடிகர் ரஜினிகாந்த் – லதா தம்பதி இன்று தங்களது 41வது திருமண நாளை கொண்டாடுகின்றனர். லதாவை சந்தித்த முதல் தருணத்திலேயே ரஜினிகாந்த் அவர் மீது காதல் கொண்டார் என்பது தெரியுமா? தில்லுமுல்லு திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது தான் இருவரும் முதன் முறையாக ஒருவரை ஒருவர் நேரில் பார்த்துக் கொண்டனர். அப்போது ரஜினியை பேட்டி எடுக்க வந்திருந்தார் லதா, பேட்டியின் போதே லதாவிடம் தன்னை திருமணம் செய்துக் கொள்கிறாயா? என கேள்விக் கேட்டு திணற வைத்தாராம் ரஜினி. இதற்கு … Read more