ஃபீல்டர் கண்ணத்தில் ஓங்கி அறைந்த பவுலர்! பாக். சூப்பர் லீக் போட்டியில் பரபரப்பு

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் கைக்கு வந்த கேட்ச் சரியாக பிடிக்கவில்லை என ஃபீல்டர் கண்ணத்தில் பவுலர் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 2022-ஆம் ஆண்டுக்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அலேக்ஸ் ஹேல்ஸ், பால் ஸ்டெர்லிங் ஆகிய வீரர்கள் திடீரென்று விலகியது, ஜேம்ஸ் பால்க்னர் சம்பளம் கொடுக்கவில்லை எனக் கூறியது என பஞ்சம் இல்லாமல் அடுத்தடுத்து சர்ச்சைகள் கிளம்பிவருகிறது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் … Read more

ரஷ்யா கைப்பற்றிய உக்ரைன் பகுதிகள் மீது அமெரிக்கா பொருதாரத் தடை விதிப்பு!

ரஷ்யா கைப்பற்றியுள்ள இரண்டு உக்ரைன் பகுதிகளுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் உக்ரைன் நாட்டின் எல்லை பகுதியில் இருக்கும் இரண்டு பிரிவினைவாத பிராந்தியங்களான டொனெட்ஸ்க் (Donetsk) மற்றும் லுகான்ஸ்க் (Lugansk) ஆகியவற்றுக்குச் சுதந்திரம் அளித்துள்ளார். இதன் மூலம் உக்ரைன் நாட்டின் இரு பகுதிகளை ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அரசு தொலைக்காட்சியில் இந்த அறிவிப்பை மக்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். புடின் … Read more

திருமண நிகழ்வில் நடந்த சோகம்! 14 பேர் துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம்

இந்தியாவின் உத்தரகாண்டில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய 14 பேர் பரிதாபமாக உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. உத்தரகாண்டின் போலங்கிர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 பேர் திருமண நிகழ்விற்கு சென்றுவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது இன்று அதிகாலை சம்பவத் மாவட்டம் அருகே உள்ள, சுக்கிதங்க் மலை பகுதியில் எதிர்பாராதவிதமாக வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்தது. படுகாயமடைந்த வாகனத்தின் ஓட்டுநர் அளித்த தகவலின் பேரில் போலீசார் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் விபந்து நடந்த பகுதிக்கு … Read more

மனித உயிர்களுடன் விளையாடவேண்டாம்… ரஷ்யாவுக்கு எச்சரிக்கை

ரஷ்யா மனித உயிர்களுடன் விளையாடுவதாக குற்றம் சாட்டியுள்ளது ஜேர்மனி. ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான Annalena Baerbock, ரஷ்யா, உக்ரைனில் வாழும் பொதுமக்களின் உயிர்களுடன் பொறுப்பற்ற முறையில் விளையாடுவதாகக் குற்றம் சாட்டியுள்ளதுடன், உடனடியாக அது பேச்சு வார்த்தைக்கு வரவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், தான் அவசரமாக ரஷ்ய அரசுக்கும் ரஷ்ய ஜனாதிபதிக்கும் அழைப்பு விடுப்பதாக தெரிவித்துள்ள ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான Annalena Baerbock, மனித உயிர்களுடன் விளையாடாதீர்கள் என்று கூறியுள்ளார். பிரஸ்ஸல்சில் நடைபெறும் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் … Read more

நாங்கள் அனைத்திற்கும் தயார், இனி உலகம் அமைதி இழக்கும்: உக்ரைன் பாதுகாப்புதுறை அமைச்சர் அதிரடி!

ரஷ்ய ஜனாதிபதியின் அறிவிப்பிற்கு பிறகு, உக்ரைன் மிகுந்த நம்பிக்கையுடனும், பொறுமையுடனும் அதன் இறையாண்மையை பாதுகாப்பதற்கு தயாராக இருப்பதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்சிய் ரெஸ்னிக்கோவ் தெரிவித்துள்ளார். உக்ரைனில் ரஷ்ய மொழி பேசும் கிளர்ச்சியாளர்களை அதிகம் கொண்ட கிழக்கு எல்லை பகுதிகளான லுஹான்ஸ்க்(luhansk) மற்றும் டொனேட்ஸ்க்(donetsk) ஆகியவற்றை சுதந்திர நாடுகளாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் திங்கள்கிழமை அறிவித்தார். ரஷ்ய ஜனாதிபதி புதின் இந்த பகுதிகளை சுதந்திர பகுதிகளாக அறிவித்ததுடன், அப்பகுதிகளில் அமைதியை நிலைநாட்டுவதற்காக ரஷ்ய ராணுவத்தையும் உதவுமாறு … Read more

அதிமுக, நாம் தமிழர் கட்சிக்கு ஷாக் கொடுத்த விஜய் மக்கள் இயக்கம்! கவனம் ஈர்த்த பெண் வேட்பாளர்

சென்னையில் உள்ள முக்கிய வார்டில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி விஜய் மக்கள் இயத்தை சேர்ந்த பெண் வேட்பாளர் இரண்டாவது இடம் பெற்றுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. கோடம்பாக்கம் மண்டலத்தை பொறுத்தவரை வார்டு 136ல் திமுக வேட்பாளர் நிலவரசி துரைராஜ், 2,110 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர்பெற்ற வாக்குகள் 7,222ஆகும். கடும் போட்டியாக பார்க்கப்பட்ட அதிமுக லஷ்மி கோவிந்தசாமி 1137 வாக்குகள் மட்டுமே பெற்றார். யாரும் எதிர்பார்க்காத வகையில் விஜய் மக்கள் இயக்கம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. விஜய் … Read more

உலகின் நம்பர் 1 பணக்காரரான எலன் மஸ்கின் புதிய காதலி யார் தெரியுமா? இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படம்

உலகளவில் பிரபல பணக்காரராக உலா வரும் எலன் மஸ்கை ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல நடிகை ஒருவர் காதலிப்பதாக சோசியல் மீடியாவில் காட்டு தீயாய் பரவி வருகின்றது. டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் சிஇஓவான எலன் மஸ்க் ஆஸ்திரேலிய நடிகை நடாஷா பஸட்டை காதலித்து வருகிறார். 50 வயதாகும் எலான் மஸ்க் 27 வயது நடாஷாவை காதலிப்பது குறித்து சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது. 233 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்து வைத்திருக்கும் எலன் மஸ்க் தான் … Read more

புயலின்போது வானத்திலிருந்து பிரித்தானியர் மீது விழுந்த இரத்தம் உறிஞ்சும் உயிரினம்… அதை என்ன செய்தார் தெரியுமா?

பிரித்தானியாவில் Eunice புயலின்போது, Byron Potter (38) என்பவர் தன் தோட்டத்தில் நின்றுகொண்டிருந்திருக்கிறார். அப்போது அவரது தோள் மீது 6 அங்குல நீளமுடைய உயிரினம் ஒன்று விழுந்திருக்கிறது. பறவைகள் ஏதாவது அதைத் தூக்கி வரும்போது அது தன் மீது விழுந்திருக்கலாம் என்று எண்ணி மேலே பார்த்தால், அங்கே பறவைகள் எதையும் காணோம். சரி, அது என்ன பூச்சி என்று பார்க்க, அதை ஒரு கண்ணாடி பாத்திரத்தில் உள்ள தண்ணீரில் போட்டிருக்கிறார். தண்ணீருக்குள் போட்டதும் அந்த பூச்சி நகரத் … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்! விஜய் மக்கள் இயக்கத்தின் 2 வேட்பாளர்கள் வெற்றி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் தனது வெற்றி கணக்கை தொடங்கியுள்ளது. தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி திமுக 7 மாநகராட்சியில் முன்னிலை வகிக்கிறது, அதே போல 24 நகராட்சியில் திமுக கூட்டணியும், 4 நகராட்சியில் அதிமுக கூட்டணியும் முன்னிலை பெற்றுள்ளது. முழு முடிவுகள் வந்த பின்னரே மொத்தமாக எந்த கட்சி எவ்வளவு இடத்தை வென்றுள்ளது என்பது தெரியவரும். இந்த நிலையில் நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கமும் உள்ளாட்சி தேர்தலில் களம் கண்டது. இயக்கத்தை … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்! முந்தும் திமுக… நாம் தமிழர் கட்சி நிலை என்ன? நேரலை வீடியோ

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் 12,601 வார்டு கவுன்சிலர் பதவியிடங்களுக்கு பிப்ரவரி 19-ந் திகதி தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி சற்றுமுன்னர் தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் 286 மையங்களில் உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. சென்னையில் 15 மையங்களில் வாக்குகள் எண்ணும் பணி … Read more