பிரித்தானியாவை நெருங்கும் மூன்றாவது புயல்: மக்களுக்கு நூற்றுக்கணக்கான எச்சரிக்கைகள்

பிரித்தானியாவை ஏற்கனவே இரண்டு புயல்கள் துவம்சம் செய்த நிலையில், மூன்றாவதாக ஒரு புயல் நெருங்குவதையடுத்து, பிரித்தானியாவில் வாழும் மக்களுக்கு பல்வேறு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் புதன்கிழமை துவக்கி Dudley என்னும் புயல் பிரித்தானியாவைப் புரட்டி எடுத்த நிலையில், அதன் தாக்கம் அடங்குவதற்குள், வெள்ளிக்கிழமை Eunice புயல் பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளைத் தாக்கியது. அதன் காரணமாக மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மின்சாரம் தடைபட்டுள்ளதால் சுமார் 155,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில், Franklin என பெயரிடப்பட்டுள்ள புயல் ஒன்று … Read more

சிறு வயதில் இருந்து திருமண ஆசை! 66 வயதில் 27 பெண்களை ஏமாற்றி திருமணம்… மன்மதனாக வலம் வந்த முதியவர்

இந்தியாவில் 66 வயதான முதியவர் இதுவரையில் 27 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த சம்பவத்தின் முழு பின்னணி அம்பலமாகியுள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார் ஸ்வெயின். 5 அடி 2 அங்குல உயரம் கொண்ட இவர் படித்தது 10-ம் வகுப்பு வரை மட்டுமே. 66 வயதாகும் இவர் சிறு வயது முதலே திருமண ஆசையில் பல பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் டெல்லியிலிருந்து புவனேஸ்வர் போலீஸ் … Read more

தயார் நிலையில் புதிய ரஷ்ய படைகள்! வெளியான செயற்கைக்கோள் புகைப்படங்கள்

உக்ரைன் எல்லைக்கு அருகே ரஷ்யா புதிதாக தனது படைகளை நிறுத்திவைத்துள்ளதாக சொல்லப்படும் செயற்கைக்கோள் புகைப்படங்களை அமெரிக்க நிறுவனம் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட Maxar டெக்னாலஜிஸ் வெளியிட்ட படங்கள், பல வாரங்களாக ரஷ்யப் படைகளின் குவிப்பைக் கண்காணித்து வருகின்றன. இந்நிலையில், உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள ரஷ்யாவின் நிரந்தர இராணுவ தளங்களிலிருந்து பல கவச உபகரணங்கள் மற்றும் துருப்புக்கள் புதிய களத்தில் வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டிருப்பதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன என்று Maxar புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. Maxar நிறுவனத்தின் … Read more

விமானங்கள் ரத்து., ஜேர்மானியர்கள் உடனடியாக நாடு திரும்ப வலியுறுத்தல்!

ஜேர்மன் அரசாங்கம் தனது குடிமக்களை உடனடியாக உக்ரைனை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளது. அதே நேரத்தில் லுஃப்தான்சா திங்கள் முதல் உக்ரைனுக்கு செல்லும் விமானங்களை ஓரளவு நிறுத்த திட்டமிட்டுள்ளது. “எந்த நேரத்திலும் ஒரு இராணுவ மோதல் நடப்பது சாத்தியம்… நல்ல நேரத்திலேயே நாட்டை விட்டு வெளியேறுங்கள்” என்று ஜேர்மன் மத்திய வெளியுறவு அலுவலகம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தனது பாதுகாப்பு அறிவுறுத்தலில் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், ஜேர்மனியின் மிகப்பெரிய விமான நிறுவனமான லுஃப்தான்சா, பிப்ரவரி இறுதி வரை கியேவ் மற்றும் … Read more

லண்டன் குடியிருப்பில் 2 ஆண்டுகளாக வீசிய துர்நாற்றம்., வீட்டின் கதவை உடைத்த பொலிஸ் கண்ட காட்சி!

லண்டனில் இறந்து இரண்டு ஆண்டுகளாக அழுகி துர்நாற்றம் வீசிய நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. தெற்கு லண்டன்- Peckham பகுதியில், செயின்ட் மேரி சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், கடந்த 2019 அக்டோபரில் கட்டிடத்தில் ‘துர்நாற்றம்’ இருப்பதாக அக்கம்பக்கத்தினர் ஹவுசிங் அசோசியேஷன் வீட்டு உரிமையாளரிடம் புகார் செய்யத் தொடங்கினர். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்காத நிலையில், அந்த துர்நாற்றம் பல நாட்களாக நீடித்து வந்துள்ளது. எதுவரை என்றால், இரு தினங்களுக்கு முன் அங்கு ஒரு வீட்டிலிருந்து … Read more

இந்தியா தொடர்ந்து 9 போட்டிகளில் வெற்றி! சாதித்து காட்டிய ரோஹித் ஷர்மா

மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், இந்திய அணி டி20 போட்டியில் தொடர்ந்து 9 ஆட்டங்களில் வென்று, சர்வதேச டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்தது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 தொடரை இந்திய அணி வென்றுள்ளது. இந்த சுற்றுப் பயணத்தில் இதுவரை மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு போட்டியில் கூட வெற்றிபெறவில்லை. 3-வது போட்டியில் ருத்துராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் … Read more

பிரித்தானியாவில் COVID-19 தொற்று உறுதியானாலும் இனி சுய-தனிமைப்படுத்தல் தேவையில்லை!

பிரித்தானியாவில் COVID-19 நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வரும் வாரத்திலிருந்து சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் “கோவிட்-19 நோய்த்தொற்றுடன் வாழப்பழகிக் கொள்ளும்” புதிய திட்டத்தின் ஒரு பகுதியாக இது நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதன்படி, கொரோனா வைரஸுக்கு நேர்மறை சோதனை செய்ப்பவர்கள் இனி 10 நாட்கள் வரை சுய-தனிமைப்படுத்தவதற்கான சட்டத் தேவையை பிரித்தானியா கைவிட உள்ளது. COVID-19 தொடர்பில் விதிக்கப்பட்ட அனைத்துக் கட்டுப்பாடுகளும் முடிவுக்கு வருவதால், பிரித்தானிய மக்கள் சுதந்திரத்தை விட்டுக்கொடுக்காமல் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்று … Read more

எந்நேரத்திலும் இதற்கு பைடன் தயார்! உக்ரைன் நெருக்கடி தொடர்பில் அமெரிக்கா முக்கிய அறிவிப்பு

 ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தயாராக இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடான உக்ரைன் எல்லைக்கு அருகே படைகளை குவித்துள்ள ரஷ்யா, பெலாரஸுடன் கூட்டு இராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. எனினும், உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டமில்லை என ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதேசமயம், உக்ரைன் மீது ரஷ்யா எந்நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்கா, பிரித்தானியா நாடுகள் … Read more

கொரோனாவுக்கு இலக்கான பிரித்தானியா மகாராணிக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் வாழ்த்து!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானியா மகாராணிக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது வாழ்த்து செய்தியை அனுப்பியுள்ளார். 95 வயதான பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத்திற்கு இன்று கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. லேசான சளி அறிகுறிகளுடன் தொற்று உறுதியாகியிருப்பதாகவும், மிக அவரசமான பணிகளில் மட்டும் மகாராணி கவனம் செலுத்துவார் என அரண்மனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டள்ள மகாராணி விரைவில் குணமடைய வேண்டும் என அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உட்பட பல வாழ்த்தி வருகின்றனர். … Read more

தொப்பையை குறைக்கும் ஆப்பிள் சீடர் வினிகர்? மறந்தும் கூட இந்த தவறை செய்யாதீங்க

இன்றைய காலகட்டத்தில் உடல் எடையை குறைக்க பலரும் பலவித முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அதில் ஒன்று தான் ஆப்பிள் சீடர் வினிகரை பயன்படுத்துவது, ஆப்பிள் பழங்களை நன்றாக மசித்து, அதை ஒரு குறிப்பிட்ட வகை பக்டீரியங்களின் உதவியினால், நொதிக்க செய்து ஆப்பிள் சீடர் வினிகர் தயாரிக்கப்படுகிறது. இதனை குடித்து வந்தால், நம் உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை ஒழுங்குபடுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதனால் எடை குறைவது மட்டுமின்றி வயிற்றில் உள்ள கொழுப்புகள் கரையும், குறிப்பாக பசியை மட்டுப்படுத்துகிறது. … Read more